For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா இரத்தத்தில் கலந்து பெரிய ஆபத்தை உண்டாக்க போவதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

இதயம் முதல் மூளை வரையில் பாதிப்பை உண்டாக்கும் SARS-COV-2 வைரஸ், உடல் முழுவதும் பாயும் இரத்த ஓட்டத்தையும் பாதித்து, மோசமான சேதத்திற்கும், சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது.

|

கொரோனா வைரஸ் அடிப்படையில் ஒரு சுவாச வைரஸ் என்று அறியப்பட்டாலும், இது உடலின் முக்கிய உறுப்புக்களையும் மோசமாக பாதித்து வருகிறது. இதயம் முதல் மூளை வரையில் பாதிப்பை உண்டாக்கும் SARS-COV-2 வைரஸ், உடல் முழுவதும் பாயும் இரத்த ஓட்டத்தையும் பாதித்து, மோசமான சேதத்திற்கும், சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. அதுவும் இரத்த ஓட்ட சிக்கல்கள் கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளாகவும் இருப்பதால், சரியான அறிவின் பற்றாக்குறையில் அச்சுறுத்தும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

Warning Signs COVID-19 Is Impacting Your Bloodflow

ஆகவே தான் நிறைய மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளை மிகவும் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கிறார்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னரும் உடல்நலத்தை அவ்வப்போது சோதிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட் மற்றும் இரத்த உறைவு

கோவிட் மற்றும் இரத்த உறைவு

கோவிட்-19 ஒரு சிக்கலான நோய்த்தொற்று. இது நுரையீரல் அல்லது இதயத்தைப் போன்றே நரம்புகளின் வழியே பாயும் இரத்த ஓட்டத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதனால் உடலின் ஆரோக்கியமான செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இரத்த உறைவு இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்துவதால், அது மிதமான அல்லது உயிருக்குகே ஆபத்தை உண்டாக்கும் ஓர் அறிகுறியாகும். எளிமையாக கூற வேண்டுமானால், தமனி அல்லது நரம்புகளின் வழியே பாயும் இரத்த ஓட்டத்தில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டால், அது திசு சேதம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை உண்டாக்கி, செல்களை அழித்துவிடும்.

சில வகையான இரத்த உறைவு சாதாரணமாக கருதப்பட்டாலும், கோவிட்-19 வழக்குகளில் நிகழும் அசாதாரண உறைதல் அச்சுறுத்துவதாக உள்ளது. வைரஸ் உடலில் சைட்டோகைன்கள் மற்றும் அழற்சியின் செயல்பாட்டை செயல்படுத்துவதால், கொரோனா நோயாளிகளக்கு உடலில் இரத்த உறைவு பிரச்சனை அதிகரித்து, சேதத்தை உண்டாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்போது கோவிட்-19 இரத்தத்தில் நுழைந்துள்ளது என்பதற்கான சில எச்சரிக்கை அறிகுறிகளைப் பார்ப்போம்.

தீவிரமான இரத்த உறைவு பிரச்சனை

தீவிரமான இரத்த உறைவு பிரச்சனை

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம் வயதினர் மற்றும் வயதானவர்களிடையே இரத்த உறைதல் பிரச்சனை அதிகரித்து வருவதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவிட்-19 தொற்றால் இரத்தம் உறைவதால், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய பிரச்சனை போன்ற உடல்நல பிரச்சனைகளைக் கொண்ட கொரோனா நோயாளிகள் பெரும் அபாயத்தில் உள்ளனர்.

த்ரோம்போசிஸ்

த்ரோம்போசிஸ்

உடலில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பக்க விளைவாக பார்க்கப்படும் மற்றொன்று தான் ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் (Deep-Vein Thrombosis) ஆகும். சிலருக்கு இது ஒரு அசாதாரணமான நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறியாகவும் செயல்படக்கூடும். எப்போது கொரோனா வைரஸ் கால்களில் உள்ள நரம்புகள் மற்றும் மூட்டுக்களை தாக்குகிறதோ, அப்போது இரத்த உறைவை உண்டாக்கி ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் ஏற்பட செய்கிறது. கால்களில் இரத்த ஓட்டத்தின் இடையூறால் இரத்த உறைவு ஏற்பட்டால், அது கடுமையான வலியை உண்டாக்கும். பெரும்பாலும் ஆழமான நரம்பு கட்டிகள் தொடைகள் அல்லது கீழ் கால்களில் தான் உருவாகும். சில வழக்குகளில், இது உடலின் பிற பகுதிகளை பாதித்து, சரிசெய்ய முடியாத தீவிரமான நிலைக்கு கொண்டு செல்லும்.

அசாதாரண வீக்கம் அல்லது சரும அழற்சி

அசாதாரண வீக்கம் அல்லது சரும அழற்சி

கொரோனா வைரஸால் ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளில் ஒன்று உடலில் பரவலான அழற்சி/வீக்கம் ஆகும். வைரஸ் சருமத்தை தாக்கி அழற்சியை உண்டாக்கினால், அது பல்வேறு இரத்த உறைவுகளுக்கு வழிவகுக்கும். பின் அவை வலிமிக்க வீக்கம், புண்கள் மற்றும் புடைப்புகளை ஏற்படுத்தும். தற்போது பல வல்லுநர்கள் வீக்கம், சரும அழற்சி போன்ற கொரோனா அறிகுறிகள் பலரால் கவனிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நோயறிதலுக்கு பின்னர் கவனிக்கும் போது அது மோசமான நிலைமைக்கு வழிவகுக்கிறது என்று கூறுகின்றனர்.

பல கோவிட்-19 நோயாளிகள் உணர்வின்மை, கைகால்கள் அல்லது விரல்களில் வலியை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர். இவை அனைத்தும் த்ரோம்போடிக் அறிகுறிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த அறிகுறிகளை ஒருபோதும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சரும நிற மாற்றம் மற்றும் அரிப்புகள்

சரும நிற மாற்றம் மற்றும் அரிப்புகள்

பொதுவாக வைரஸ் இரத்த ஓட்டத்தை தாக்கி இரத்த நாளங்களை சேதப்படுத்தினால், அது சருமத்தை பாதிக்கும். அதனால் தான் கொரோனா வைரஸ் பரவிய பல நாட்களுக்கு பின் கோவிட் டோஸ் என்ற ஒரு விசித்திரமான அறிகுறி கொரோனாவின் அறிகுறி பட்டியலில் இடம் பெற்றன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் சரும நிற மாற்றம் மற்றும் அரிப்புக்கள் போன்றவற்றை சந்திப்பதால், இது கோவிட்-19 இரத்தத்தில் நுழைந்துள்ளது என்பதற்கான ஓர் அறிகுறியாக கூறப்படுகிறது.

பக்கவாத அபாயம் அதிகம்

பக்கவாத அபாயம் அதிகம்

கோவிட்-19 வித்தியாசமாக, அறிகுறியற்ற, மிதமான அல்லது தீவிரமான நோயாளிகளிடையே பக்கவாதத்திற்கான அபாயம் அதிகம் இருப்பதுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அதுவும் இதய பிரச்சனை இல்லாதவர்களுக்கு கூட திடீர் பக்கவாதம் ஏற்படலாம். எனவே பக்கவாத அபாயம் அதிகம் இருப்பது என்பது அசாதாரண இரத்த ஓட்டம் அல்லது உறைதல் ஆகியவற்றின் விளைவாக ஏற்படக்கூடிய ஒரு சிக்கலாகும்.

நுரையீரல் மற்றும் இதயத்தில் சேதம்

நுரையீரல் மற்றும் இதயத்தில் சேதம்

கோவிட்-19 இரண்டு முக்கிய உறுப்புக்களான இதயம் மற்றும் நுரையீரலுக்கு சேதத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே இதற்கான பல அறிகுறிகள் விவரிக்கப்பட்டுள்ளன. பல மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியமான நோயாளிகள் கூட இதுப்போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதற்கு ஒரு வலுவான காரணம் கடுமையான இரத்த உறைவு தான். அதிகப்படியான அழுத்தம், இரத்த உறைவு போன்றவற்றின் தொந்தரவுகள் மற்றும் தீவிர அறிகுறிகள் வெளிப்படுவதற்கு வைரஸை எதிர்த்துப் போராடிய சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.

தி லான்செட் சுவாச மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இரத்தக் கட்டிகள் நுரையீரலை அடைத்து மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளது. அதேப்போல் மற்றொரு அமெரிக்க பத்திரிக்கை பல இரத்த உறைவுகள் இதய சுவர்களை பலவீனப்படுத்தி, அரித்மியாவை உண்டாக்கும் என்றும், சில நேரங்களில் மாரடைப்பு போன்ற தீவிர பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கிறது.

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

ஜான் ஹாப்கின்ஸ் மெடிசின் குறிப்பிட்டுள்ள ஒரு ஆய்வின்படி, சிறுநீரகத்தில் இரத்தக் கட்டிகளால் அடைப்பு ஏற்படுவது நோயாளியின் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் டயாலிசிஸை சிக்கலாக்கும். அதிலும் கொரோனா நோய்த்தொற்றின் கடுமையான வடிவத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு மிகவும் ஆபத்து உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs COVID-19 Is Impacting Your Blood flow

In this article, We tell you about some warning signs of trouble that can act as signs that COVID-19 has entered your blood. Read on...
Desktop Bottom Promotion