For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த காரணங்களால் கூட ஞாபக மறதி ஏற்படலாம்... உஷார்!!!

எப்போதாவது மறதி ஏற்படுவது என்பது அனைவருக்கும் இயல்பாக நடக்கக்கூடியது. அது சாதாரணமான ஒன்று தான். ஆனால், அதுவே அடிக்கடி மறதி ஏற்படுவது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

|

ஞாபக மறதி பிரச்சனை என்பது பெரும் அவதிக்குள்ளாக்கக் கூடிய ஒன்று. அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சிறு சிறு விஷயங்களை கூட நாம் மறக்கும் போது, நிஜமாகவே தொல்லையாக தான் இருக்கும். எப்போதாவது மறதி ஏற்படுவது என்பது அனைவருக்கும் இயல்பாக நடக்கக்கூடியது. அது சாதாரணமான ஒன்று தான். ஆனால், அதுவே அடிக்கடி மறதி ஏற்படுவது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இப்படிப்பட்ட பிரச்சனை எதிர்காலத்தில், நினைவு இழப்பிற்கு வழிவகுத்து விடும்.

Unusual Reasons That Cause Weakening Of Memory In Tamil

70 வயதுகளிலும் சிலருக்கு மிகவும் வலிமையான ஞாபக சக்தி இருக்கும். ஆனால், சிலருக்கு 20 வயதிலும் மிக மோசமான ஞாபக ஆற்றல் இருக்கும். இதுப்போன்ற, ஞாபக மறதி பிரச்சனைகளுக்கு காரணங்கள் ஏராளம் உள்ளன. மறதி பிரச்சனைகளுக்கு பொதுவான காரணங்களாக கருதப்படுவது, வயது, மோசமான உணவுப்பழக்கம், தலையில் ஏதேனும் அடிபடுவது போன்றவை தான்.

MOST READ: ஆப்பிளோட முழு சத்தும் கிடைக்கணுமா? அப்ப அத இந்த டைம்-ல சாப்பிடுங்க...

மறதிக்கான பொதுவான காரணங்களைப் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், மறதிக்கான சில அசாதாரண காரணங்கள் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாருங்கள், இப்போது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்க பற்றாக்குறை

தூக்க பற்றாக்குறை

எவ்வளவு தூங்குகிறோம் மற்றும் எப்படி தூங்குகிறோம் என்பது ஆரோக்கியமான அறிவாற்றலுக்கும், சிறந்த ஞாபக சக்திக்கும் மிகவும் முக்கியம். தூக்க நேரம் குறைவது, அடிக்கடி தூக்கத்தில் எழுந்திருப்பது போன்றவை உடற்சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்து, ஞாபக சக்தியை குறைத்திடும். இதுதவிர, நீங்கள் தூங்கும் விதம் மற்றும் எந்தப் பக்கம் சாய்ந்து தூங்குகிறீர்கள் என்பவையும், உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய கூறுகிறது. தினமும் குறைந்தது 6 முதல் 8 மணி நேர தூக்கத்தை பெற வேண்டியது மிகவும் அவசியம்.

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு

சிறந்த ஆரோக்கியமான உடலை பெற வேண்டுமென்றால், அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை சரியாக விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏதேனும் அத்தியாவசிய ஊட்டச்சத்தின் குறைபாடு ஏற்படும் போது, ஞாபக சக்தி குறைப்பாட்டை ஏற்படுத்தக்கூடும். புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு தேவைப்படுகின்றன. வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி12 பற்றாக்குறை தான் முக்கியமாக நினைவாற்றலை பாதிக்கும்.

ஆல்கஹால், புகையிலை மற்றும் போதைப்பொருள் பழக்கம்

ஆல்கஹால், புகையிலை மற்றும் போதைப்பொருள் பழக்கம்

அதிகப்படியான குடிப்பழக்கம் நினைவாற்றலை இழக்க ஒரு முக்கியமாக காரணமாக விளங்குகிறது. அதே நேரத்தில், புகைபிடித்தல் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைப்பதன் மூலம் நினைவாற்றலை சேதப்படுத்துகிறது. குறைக்கப்பட்ட ஆக்ஸிஜனேற்றம் பல உடல்நலக் கோளாறுகளுக்கு காரணியாகும். சில ஆய்வுகளில், அதிகப்படியாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு விஷயங்களை நினைவில் கொள்வதில் அதிகமான சிக்கல்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. அதே சமயத்தில், போதைப்பொருட்கள் உட்கொள்வது மூளையில் சில வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி, ஞாபக சக்தியை பாதிக்கிறது.

மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு

மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு

மனச்சோர்வு என்பது ஒருவது நினைவாற்றலை நேரடியாக பாதிக்கக்கூடிய ஒன்று. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்துவது என்பது கடினமான செயல். அதிகப்படியான கவன செலுத்தல் மூலம் சோர்வும், பதற்றமும் ஏற்படலாம். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி, உங்கள் மனம் அமைதியற்ற நிலையில் இருக்கும்போது, உங்கள் நினைவு திறன் பாதிக்கப்படும். உணர்ச்சி வசமான நிகழ்வுகள், அதிகப்படியான அதிர்ச்சி கூட நினைவாற்றலை பலவீனமடையச் செய்யும். எனவே, தேவையற்ற மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வைத் தவிர்ப்பது நல்லது.

மருந்துகள்

மருந்துகள்

நீங்கள் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பல மருந்துகள் நினைவு இழப்பை ஏற்படுத்தும். ஆண்டிடிரஸண்ட்ஸ், ஆண்டிஹிஸ்டமின்கள், மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள், தசை தளர்த்திகள், தூக்க மாத்திரைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலி நிவாரணி மருந்துகள் நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நீங்கள் வழக்கமாக எந்த வகையான மருந்துகளையும் எடுத்துக்கொண்டால், அதில் உபயோகிக்கப்பட்டிருக்கும் பொருட்களை பற்றி சரிபார்க்க மறவாதீர்கள். மேலும், நீங்கள் பயன்படுத்தும் மருந்து, எந்த வகையிலாவது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து கொள்ளலாம்.

தலையில் காயம்

தலையில் காயம்

தலையில் கடுமையான காயம் ஏற்படுவது, உயரமான இடத்திலிருந்து விழுவது அல்லது சாலை விபத்தில் ஏற்படக்கூடிய காயம் ஆகியவை குறுகிய கால அல்லது நீண்ட கால நினைவு இழப்பை ஏற்படச் செய்யலாம். இருப்பினும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், காலப்போக்கில் நினைவாற்றல் படிப்படியாக மேம்படவும் வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unusual Reasons That Cause Weakening Of Memory In Tamil

Here are some unusual reasons that cause weakening of memory in tamil. Read on...
Desktop Bottom Promotion