For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

வைட்டமின் சி என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின். இந்த வைட்டமின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து செயல்பட, கொலாஜன் உருவாக்கத்திற்கு உதவ என்று பலவற்றிற்கு மிகவும் அவச

|

வைட்டமின் சி என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின். இந்த வைட்டமின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து செயல்பட, கொலாஜன் உருவாக்கத்திற்கு உதவ என்று பலவற்றிற்கு மிகவும் அவசியமானது. இந்த வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள், சிவப்பு குடைமிளகாய், கேல், ப்ராக்கோலி போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது. ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவான அளவில் இருந்தால் ஏற்படும் நிலை தான் வைட்டமின் சி குறைபாடு.

Unknown Early Symptoms Of Vitamin C Deficiency

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் அதிகம் இருப்பதால், வைட்டமின் சி குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இருப்பினும் குறிப்பிட்ட சில காரணிகளான மோசமான உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், டயாலிசிஸ் மற்றும் தீவிர மனநல பிரச்சனைகள் போன்றவற்றால் வைட்டமின் சி குறைபாடு மக்களைத் தாக்குகிறது.

MOST READ: ஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா?

இப்போது ஒருவருக்கு வைட்டமின் சி குறைபாடு இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று காண்போம். அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறட்சியான சருமம்

வறட்சியான சருமம்

சருமத்தின் வெளிப்புற அடுக்கு தான் எபிடெர்மிஸ். இதில் தான் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. சருமத்தில் உள்ள வைட்டமின் சி தான் சூரியன் மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற பாதிப்பில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் இது கொலாஜன் உற்பத்திக்கும் உதவி, சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது. ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், சரும வறட்சி ஏற்படும்.

ஈறுகளில் இரத்தக்கசிவு

ஈறுகளில் இரத்தக்கசிவு

வைட்டமின் சி குறைபாட்டின் மற்றொரு பொதுவான அறிகுறி ஈறுகள் சிவந்தும், வீங்கியும், இரத்தக்கசிவையும் உண்டாக்குவது. போதுமான வைட்டமின் சி இல்லாமல் இருக்கும் போது, ஈறுகளில் உள்ள இரத்த நாளங்கள் பலவீனமாவதோடு அழற்சிக்கு உட்பட்டு, இரத்தக்கசிவை உண்டாக்கும். இது இப்படியே நிலைத்தால், ஈறுகள் பலவீனமாகி, பற்கள் விழுந்துவிடும்.

சரும காயம்

சரும காயம்

ஒருவருக்கு சருமத்தில் எளிதில் காயம் ஏற்படுமாயின், உங்கள் உடலில் வைட்டமின் சி குறைவாக உள்ளது என்று அர்த்தம். வைட்டமின் சி சத்து தான் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த சத்து குறைவாக இருந்தால் சருமத்திற்கு அடியின் உள்ள இரத்த நாளங்கள் எளிதில் காயமடைந்து, இரத்தக்கசிவை உண்டாக்கும்.

சொரசொரப்பான சருமம்

சொரசொரப்பான சருமம்

வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படுவது தான் கெரடோசிஸ் பிலாரிஸ். இது ஒருவகையான சரும பிரச்சனை. இந்த பிரச்சனையின் போது முழங்கையின் மேல் பகுதி, தொடை மற்றும் பிட்டப்பகுதியில் புள்ளி புள்ளிகளுடன் சொரசொரப்பாக இருக்கும்.

சிவப்பு நிற மயிர்க்கால்கள்

சிவப்பு நிற மயிர்க்கால்கள்

மயிர்க்கால்கள் பல சிறிய இரத்த நாளங்களைக் கொண்டுள்ளன. அவை தான் அந்த பகுதிக்கு இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. வைட்டமின் சி குறைபாடு மயிர்கால்களுக்கு அருகில் உள்ள இரத்த நாளங்களை பலவீனமடையச் செய்து, அதன் விளைவாக சிறிய அடர் சிவப்பு நிற புள்ளிகளை உண்டாக்கும்.

உடல் பருமன்

உடல் பருமன்

ஆய்வின் படி, வைட்டமின் சி குறைபாட்டிற்கும், உடல் பருமன் மற்றும் தொப்பை அதிகமாவதற்கும் தொடர்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒருவரது உடலில் வைட்டமின் சி அதிகமாக இருந்தால், அது கொழுப்புச் செல்களில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, உடல் பருமனைத் தடுக்க உதவும். மேலும் அதிகளவு வைட்டமின் சி உடலினுள் உள்ள உட்காயங்களைக் குறைக்கும் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களையும் குறைக்கும்.

மூட்டு வீக்கம்

மூட்டு வீக்கம்

மூட்டு வீக்கம் வைட்டமின் சி குறைபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நடக்கும் போது மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதற்கு வைட்டமின் சி குறைபாடும் ஓர் காரணம். எனவே மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்பது நல்லது.

களைப்பு

களைப்பு

வைட்டமின் சி குறைபாட்டின் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்று தான் களைப்பு மற்றும் சோர்வான மனநிலை. இந்த அறிகுறியை நீங்கள் அனுபவித்தால், வைட்டமின் சி உணவை அதிகம் சாப்பிட வேண்டுமென்று அர்த்தம்.

இரத்த சேகை

இரத்த சேகை

ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், அது இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கி இரத்த சோகையை உண்டாக்கும். ஏனெனில் வைட்டமின் சி தான் இரும்புச்சத்தை சிறப்பாக உறிஞ்சும். இதன் அளவு குறைவாக இருந்தால், இரும்புச்சத்து உறிஞ்சப்படுவது குறைந்துவிடும். இதன் விளைவாக இரத்த சோகை ஏற்படும்.

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி குறைபாடு ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கி, பல்வேறு நோய்த்தொற்றுக்களின் அபாயத்தை அதிகரிக்கும். உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை அழிக்கவும், எதிர்த்துப் போராடவும் அதிகளவு வைட்டமின் சி அத்தியாவசியமாகும்.

பலவீனமான எலும்புகள்

பலவீனமான எலும்புகள்

பல்வேறு ஆய்வுகளில் வைட்டமின் சி குறைபாடு எலும்பு இழப்பு விகிதத்தை அதிகரிப்பதாகவும், எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை உயர்த்துவதாகவும் தெரிய வந்துள்ளது.

தினசரி வைட்டமின் சி தேவை

தினசரி வைட்டமின் சி தேவை

பெண்கள் ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய வைட்டமின் சி-யின் அளவு 75 மி.கி. அதேப் போல் ஆண்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான அளவு 90 மி.கி ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Early Symptoms Of Vitamin C Deficiency

A deficiency in vitamin C causes weak bones, swollen joints, bleeding gums, bruised skin, weight gain, fatigue, and anaemia, to name a few.
Desktop Bottom Promotion