For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆழ்ந்த தூக்கத்தைப் பெற இரவு தூங்கும் முன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!

லாக்டவுன் காலத்தில் பலர் மோசமான மன ஆரோக்கியத்தைக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர். மோசமான மன ஆரோக்கியம், ஒருவரது தூக்கத்தில் இடையூறை உண்டாக்கி போதுமான தூக்கத்தைக் கிடைக்கப் பெறாமல் செய்துவிடுகிறது.

|

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கும், பிராந்தியங்களுக்கும் பரவியுள்ளது. மக்கள் சமூக விலகலையும், தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்கத் தொங்கிய பின்பு, ஏராளமானோர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். லாக்டவுன் காலத்தில் பலர் மோசமான மன ஆரோக்கியத்தைக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர். அதோடு தற்போது வலைத்தளங்களில் அதிகம் தேடப்பட்ட சொற்றோடர்களாக தூக்க பிரச்சனை மற்றும் தூக்கமின்மை போன்றவை உள்ளது.

Things You Must Stop Doing Before Bedtime Now

தூக்கமும், மன ஆரோக்கியமும் ஒன்றை ஒன்று தொடர்புடையது. மோசமான மன ஆரோக்கியம், ஒருவரது தூக்கத்தில் இடையூறை உண்டாக்கி போதுமான தூக்கத்தைக் கிடைக்கப் பெறாமல் செய்துவிடுகிறது. எனவே தான் ஒருவரின் மன ஆரோக்கியத்திற்கு போதுமான தூக்கம் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு ஆய்வுகளும் அதையே தெரிவிக்கின்றன.

MOST READ: தூங்கும் போது ஏன் கால்களுக்கு நடுவே தலையணை வெச்சு தூங்கணும்-ன்னு சொல்றாங்க தெரியுமா?

நீங்கள் ஒரு நாள் முழுவதும் ஆற்றலுடன் மற்றும் நல்ல எண்ணங்களுடன் செயல்பட நினைத்தால், இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டும். அதற்கு படுக்கைக்கு செல்லும் முன் ஒருசில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். கீழே அந்த விஷயங்கள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காப்ஃபைனை தவிர்க்கவும்

காப்ஃபைனை தவிர்க்கவும்

காப்ஃபைன் தூக்கத்தைப் பாதிக்கும். அதனால் தான் காலையில் எழுந்ததும் காபி குடிக்கிறோம். ஏனெனில் இது உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், ஒருவர் படுக்கைக்கு முன் காப்ஃபைன் உட்கொள்ளும் போது, அவரால் இரவில் தூக்கத்தைப் பெறுவது என்பது கடினம். ஆகவே படுக்கைக்கு குறைந்தது 3-4 மணிநேரத்திற்கு முன்பிருந்தே காப்ஃபைன் குடிப்பதை நிறுத்திவிடுங்கள்.

மொபைல் பயன்பாட்டைத் தவிர்க்கவும்

மொபைல் பயன்பாட்டைத் தவிர்க்கவும்

மொபைல் திரையில் இருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் கண்களுக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த வெளிச்சத்தைப் பார்ப்பது கண்களுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும். இரவு தூங்குவதற்கு முன் மொபைலைப் பார்த்தால், அதிலிருந்து வெளிவரும் வெளிச்சம் தூக்கம் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே இரவு தூங்க செல்வதற்கு குறைந்தது 1 மணிநேரத்திற்கு முன்பே மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். அதேப் போல் காலையில் எழுந்ததும் மொபைல் பார்ப்பதையும் தவிர்த்திடுங்கள். இது எண்ணங்களின் தரத்தை மேம்படுத்தவும், அவற்றை சிறப்பாக கட்டுப்படுத்தவும் உதவும்.

மதுவைத் தவிர்க்கவும்

மதுவைத் தவிர்க்கவும்

பலரும் மது அருந்தினால் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என்று நினைப்பர். ஆனால் இரவில் நல்ல தரமான தூக்கத்தைப் பெற நினைத்தால், இந்த பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்தினால் உடலில் ஹார்மோன்களின் அளவில் இடையூறு ஏற்பட்டு, சோகமாக உணர வைக்கும். மேலும் மது பழக்கம் இதயம் மற்றும் கல்லீரல் போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது.

உடற்பயிற்சி வேண்டாம்

உடற்பயிற்சி வேண்டாம்

பெரும்பாலானோர் இரவு நேரத்தில் ஜாக்கிங் செல்வார்கள். இருப்பினும், ஒருவர் அவ்வாறு செய்யக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் எண்டோர்பின்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இரவு நேரத்தில் எண்டோர்பின்கள் உடலில் அதிகளவு சுரந்தால், அது உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி தூங்க முடியாமல் செய்துவிடும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்

கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்

கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, அசிடிட்டி போன்றவற்றை உண்டாக்கி, இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட செய்துவிடும். கார்போஹைட்ரேட் அதிகமான உணவுகளும் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, உடலின் ஆற்றலை பெருக்கி, தூங்க முடியாமல் தடுத்திடும். ஆகவே இந்த மாதிரியான உணவுகளையும் இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Must Stop Doing Before Bedtime Now

Poor mental health and no control on your thoughts can make it difficult for you to fall and stay sound asleep, while not sleeping enough can cause adverse mental health effects.
Story first published: Saturday, July 11, 2020, 17:53 [IST]
Desktop Bottom Promotion