Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
பெண்களே! நீங்க வலிமையானவர்களாக இருக்க இந்த 5 உணவுகளை சாப்பிட்டா போதுமாம் தெரியுமா?
முட்டையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை தசைகளை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும், வைட்டமின் டி இன் அதிகரித்த அளவு உடல் வலிமைக்கு உதவியாக இருக்கும்.
பொதுவாக உடல் ரீதியாக பெண்களை மென்மையானவர்களாகவும், பலவீனமற்றவர்களாகவும் பார்க்கிறது, இந்த சமூகம். ஆனால், உண்மையாகவே பெண்கள் வலிமையானவர்கள். வீட்டு வேலை, அலுவலக வேலை, விவசாய வேலை என எல்லா வேலைகளிலும் பெண்கள் தங்கள் வலிமையான உடலால், மன உறுதியால் செய்து வருகிறார்கள். இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஆற்றல் வாய்ந்த உணவுகளை பெண்கள் எடுத்துக்கொள்வதில்லை. இது அவர்களின் வலிமையை குறைக்கிறது. அவர்களை பலவீனமானவர்களாக மாற்றுகிறது. செய்ய வேண்டிய பல வேலைகளைச் செய்து முடிக்க, ஆற்றல் பெண்களுக்கு அவசியம்.

இன்றைய பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதையெல்லாம் தொடர்ந்து சமாளிக்க அதிக வலிமை பெறுவது முக்கியமானது. ஆரோக்கியமான ஆற்றல் நிறைந்த உணவுகள் சோர்வு, பிடிப்புகள், மூட்டு வலி, பளபளப்பான தோல், பளபளப்பான முடி மற்றும் பலவற்றைப் பெற உதவும். நீங்கள் வலுவாக இருக்க உதவும் சில உணவுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கீரை
பச்சை இலை கீரைகள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும். அவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃபைபர் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன, ஆனால் குறைந்த கலோரிகள் உள்ளன. இலை கீரைகள் நிறைந்த உணவை உட்கொள்வது உடல் பருமன், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனநல குறைவு போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலும், இதிலுள்ள அபரிமிதமான வைட்டமின் ஏ, உங்கள் தசைகளை நேரடியாக வலுப்படுத்த உதவும். அதுமட்டுமின்றி படிப்படியாக உங்கள் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் நீங்கள் காலப்போக்கில் வலுவாக உணருவீர்கள்.

முட்டை
முட்டையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை தசைகளை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும், வைட்டமின் டி இன் அதிகரித்த அளவு உடல் வலிமைக்கு உதவியாக இருக்கும். ஏனெனில், இது உணவை விரைவாக உடைக்கவும், ஆற்றலை வேகமாகப் பரப்பவும் உதவுகிறது. ஆதலால், பெண்கள் தங்கள் உணவுகளில் முட்டையை சேர்த்துக்கொள்ளவும்.

பல தானியங்கள்
இந்திய குடும்பங்கள் பொதுவாக சாப்பாட்டுக்கு ஆட்டா மற்றும் அரிசியைத் தேர்வு செய்கின்றனர். பஜ்ரா, ராகி, ஜவ்வரிசி போன்ற பலவகையான தானியங்கள் கிடைக்கும் நிலையில், அவற்றையும் நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தானியங்கள், டிரான்ஸ் ஃபேட் கூறுகளை அதிகம் சேர்க்காமல், உங்கள் வழக்கமான உணவுடன் சேர்த்து, உடலுக்கு நிலையான ஆற்றலை வழங்குவதில் மிகவும் திறமையானவை. இதனால், நீங்கள் வலிமையான பெண்ணாக இருக்கலாம்.

வாழைப்பழம்
பழங்களில் நாம் தினமும் அலல்து அடிக்கடி எடுத்துக்கொள்வது வாழைப்பழம். அதற்கு காரணம் இதன் ஆரோக்கிய நன்மைகள். பெண்கள் குறைந்த ஆற்றலுடன் இருக்கும்போது, வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் நிறைய நார்ச்சத்து மற்றும் பி-6 போன்ற வைட்டமின்கள் உள்ளன. மேலும் முக்கியமாக பொட்டாசியம் தசை வலிமையை அதிகரிக்கிறது மற்றும் உடலுக்கு மிகவும் நீடித்த முறையில் ஆற்றலை வழங்குகிறது.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்
நட்ஸ்கள் மற்றும் விதைகள் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரங்கள். நட்ஸ்கள் மற்றும் விதைகள் உடல் எடையைக் கட்டுப்படுத்துகின்றன, ஏனெனில் அவற்றின் கொழுப்புகள் முழுமையாக உறிஞ்சப்படுவதில்லை, அவை உணவு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் ஆற்றலை எரிக்க உதவுகின்றன. இதனால், முன்பை விட அதிக ஆற்றலுடன் நீங்கள் செயல்பட முடியும்.



Click it and Unblock the Notifications