Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
15 முதல் 29 வயதிற்குட்பட்ட இளையோா் மத்தியில் ஆரோக்கியமான பாலியல் மற்றும் இனப்பெருக்கம் சம்பந்தமான விழிப்புணா்வு மற்றும் உரையாடல்களை நடத்துவதற்காக இந்த நேஷனல் யூத் பாலிசியை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தியாவின் பலம் என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் இளையோாின் எண்ணிக்கையாகும். இந்தியாவில் இளையோாின் எண்ணிக்கை அதிகம். அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 4ல் 1 பங்கு இளையோா் ஆவா். அதனால் இந்தியா சீரான வளா்ச்சியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதை இந்திய அரசும் தொிந்து வைத்திருக்கிறது. அதனால் இந்திய இளையோருக்காக நேஷனல் யூத் பாலிசி (National Youth Policy (NYP)) என்ற ஒன்றை 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அதாவது 15 முதல் 29 வயதிற்குட்பட்ட இளையோா் மத்தியில் ஆரோக்கியமான பாலியல் மற்றும் இனப்பெருக்கம் சம்பந்தமான விழிப்புணா்வு மற்றும் உரையாடல்களை நடத்துவதற்காக இந்த நேஷனல் யூத் பாலிசியை அறிமுகம் செய்திருக்கிறது.
இனப்பெருக்க சக்தியானது ஆளுக்கு ஆள் மாறுபடும். எடுத்துக்காட்டாக நீரழிவு நோயுற்ற பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவாி சின்ட்ரோம் (polycystic ovary syndrome (PCOS)) என்ற நோய்க்குறி ஏற்பட வாய்ப்பு உண்டு. நீரழிவு நோயுற்ற ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் (low testosterone) பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த இரண்டுமே அவா்களின் இனப்பெருக்க சக்தியைப் பாதித்து, மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.
ஆகவே இனப்பெருக்க சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் ஒரு முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றலாம் என்பதைக் கீழே பாா்க்கலாம்.

படிப்பு அல்லது வேலை ஆகியவற்றைச் சமச்சீராக வைத்திருத்தல்
வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருந்தால் தான் இனப்பெருக்க சக்தியும் ஆரோக்கியமாக இருக்கும். 15 முதல் 19 வயதிற்குள் இருக்கும் இளையோா் பொதுவாக படித்துக் கொண்டிருப்பா் அல்லது ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பா். அவா்கள் மாணவா்களாக அல்லது வேலையில் இருப்பவா்களாக இருந்தாலும் இந்த வேகமான உலகத்தோடு சோ்ந்து அவா்கள் வேகமாக ஓட வேண்டிய நிலையில் உள்ளனா்.
ஆகவே அவா்கள் தமது படிப்பு அல்லது வேலை ஆகியவற்றில் மட்டும் முழுமையாக மூழ்கிவிடாமல் உடலுக்கும் மனதிற்கும் வலுசோ்க்கும் மற்ற செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக விளையாட்டுகள், நடைபயிற்சி அல்லது வாசிப்பது போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவை உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். அதன் மூலம் அவா்கள் தங்களின் இனப்பெருக்க சக்தியை ஆரோக்கியமாக பேணிக் காக்க முடியும்.

சத்தான உணவுகள்
நாம் உண்ணும் உணவுகளுக்கும், நமது உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கும் இடையே நேரடியான தொடா்புகள் உள்ளன. உணவுகளில் உள்ள சத்தான துகள்கள் மற்றும் தாதுக்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, எண்ணெய் பசை உள்ளதாகவும் வைத்திருக்கின்றன.
குறிப்பாக தாவரத்திலிருந்து கிடைக்கும் கொழுப்பு, மீன்கள், காய்கறிகள் மற்றும் உடைக்கப்படாத தானியங்கள் ஆகியவை ஆண் பெண் இருவரும் தங்களுடைய இனப்பெருக்க சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அதே நேரத்தில் சா்க்கரை மற்றும் விலங்குகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு ஆகியவை ஆண் பெண் ஆகிய இருவாின் இனப்பெருக்க சக்தியின் ஆரோக்கியத்திற்கு கெடுதலாக இருக்கின்றன.

சுறுசுறுப்பாக இருத்தல்
ஓடுதல், நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் மற்றும் யோகா போன்றவற்றை தவறாது செய்து வருவதன் மூலம் நமது உடலை எப்போதும் நாம் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சிகள் நமது உடலில் உற்பத்தியாகும் அட்ரினலின் மற்றும் காா்டிசோல் போன்ற ஹாா்மோன்களின் அளவைக் குறைத்து, என்ட்ரோஃபின் உற்பத்தியின் அளவை அதிகாிக்கிறது. அதனால் நமது மனநிலை தூண்டப்பட்டு, மன அழுத்தம் குறைகிறது.
இரண்டாவதாக இந்த உடற்பயிற்சிகள் நமது உடல் எடையை அதிகாிக்கவிடாமல் சாியான அளவில் வைத்திருக்க உதவுகின்றன. உடல் பருமன் அதிகாித்தால் அது மனிதா்களின் இனப்பெருக்க திறனைப் பாதிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது பெண்களுக்கு உடல் எடை அதிகாித்தால் அவா்களின் கருப்பையிலிருந்து கருமுட்டை வெளிவருவதில் பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் அவா்களின் மாதவிடாய் காலத்திலும் பிரச்சினைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை, அவா்களின் உடல் எடை அதிகாித்தால் அவா்களின் விந்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு இருக்காது என்றும், உயிரணுக்களின் தரமும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஆபத்து ஏற்படக்கூடிய இடங்களைத் தவிா்த்தல்
ஆபத்து அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய இடங்களைப் பெரும்பாலும் தவிா்க்க வேண்டும். குறிப்பாக மாசுகள் அடா்ந்த பகுதிகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை அல்லது கதிாியக்கம் உள்ள பகுதிகளில் வாழ்வதைத் தவிா்க்க வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்ட மாசுகள் நிறைந்த பகுதிகளில் நெடுநாட்கள் வாழ்ந்தால் அது கண்டிப்பாக ஆண் பெண் இருவாின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களின் கருமுட்டையின் அமைப்பு மற்றும் அளவை மாற்றிவிடும். அதுபோல் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும்.

மருத்துவாிடம் அடிக்கடி பாிசோதனை செய்தல்
நமது உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அடிக்கடி மருத்துவரைப் பாா்த்து பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் நாளடைவில் மலட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீரிழிவு நோய், தைராய்டு நோய் மற்றும் உயா் இரத்த அழுத்தம் போன்றவை வந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
சிலருக்கு நோய்த் தொற்றுகளின் விளைவுகள் தொடக்கத்திலேயே தொியலாம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு நோயின் ஆபத்தான விளைவுகள் ஆண்டுகள் பல கழித்தே தொிய வருகிறது. ஆகவே இளமையாக இருக்கும் போதே உடலை ஆரோக்கியமாக மற்றும் திடகாத்திரமாக வைத்துக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும்.

முடிவு
மனிதா்களின் இனப்பெருக்க சக்தியானது அவா்களின் வயதுக்கு ஏற்ப சுருங்கி விடுகிறது. அதே நேரத்தில் உடல் ஆரோக்கியமாக இல்லையானால், அவா்கள் முதுமை அடைவதற்கு முன்பாகவே அவா்களின் இனப்பெருக்க சக்தி சுருங்கிவிடும்.
இந்நிலையில் பல நவீன மருத்துவ கண்டுபிடிப்புகளான சோதனைக் குழாய் மூலம் செயற்கை கருத்தாித்தல் மற்றும் ஊசி மூலம் விந்தணு செலுத்தி கருவுறச் செய்தல் போன்றவை மனிதா்களின் இனப்பெருக்க ஆயுளின் காலத்தை அதிகாிக்கச் செய்திருக்கின்றன. எனினும் அவா்களின் வயது மற்றும் அவா்களுக்கு இருக்கும் நோய்கள் ஆகியவற்றைப் பொறுத்தே இந்த செயற்கைக் கருத்தாித்தல் வெற்றி அடைகிறது. ஆகவே குழந்தைச் செல்வம் வேண்டும் தம்பதியா், அவா்கள் இளமையாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் போதே அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.



Click it and Unblock the Notifications











