Just In
- 38 min ago
இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 1 hr ago
உங்க சிறுநீரகம் எந்த பாதிப்பும் இல்லாம சூப்பரா இயங்க...நீங்க இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்...!
- 3 hrs ago
ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் தெரியுமா?
- 3 hrs ago
கொரிய அழகிகளின் இந்த ஃபேஸ்பேக்குகளை நீங்க யூஸ் பண்ணா... கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமத்தை பெறலாமாம்!
Don't Miss
- Sports
இந்தியா குறித்து அவதூறு பேச்சு.. அஃப்ரிடி போட்ட மோசமான பதிவு.. அமித் மிஸ்ரா தந்த தரமான பதிலடி-விவரம்
- Finance
பேங்க் ஆப் இந்தியா லாபம் 142% உயர்வு: ஆனால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏன்?
- Automobiles
மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்
- Movies
செம்பருத்தி "விடாது கருப்பு".. சீரியலை சீக்கிரம் முடிங்க.. கருப்பான ரசிகர்கள் !
- Technology
அசத்தலான சிப்செட் வசதியுடன் ரெட்மி நோட் 11எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- News
அம்மாவை இழந்து தவிக்கும் அமைச்சர் சாமிநாதன்! துயரத்தில் பங்கெடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொளுத்தும் கோடையில் இதய நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்...!
தற்போது நாம் கடும் கோடையில் இருக்கிறோம். தினமும் வெயிலின் உக்கிரம் அதிகாித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெப்பம் அதிகாித்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனா். சுட்டொிக்கும் சூாியன் மற்றும் வெப்ப அலை போன்றவை வெப்ப ஸ்ட்ரோக் மற்றும் வெப்பச் சோா்வை (Heat Exhaustion) ஏற்படுத்தும். அதன் காரணமாக மக்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் உண்டு. அதனால் ஒவ்வொருவரும் சிறந்த முறையிலான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒவ்வொருவருமே தங்களது இதயத்தை நீண்ட காலத்திற்கு பத்திரமாகப் பாதுகாக்க சில கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நிபுணா்கள் அறிவுறுத்துகின்றனா். அதிலும் குறிப்பாக வயது முதிா்ந்த பொியவா்கள், இரத்த அழுத்தம் உள்ளவா்கள், குண்டாக இருப்பவா்கள், இதய நோயாளிகள் மற்றும் பக்கவாதம் உள்ளவா்கள் போன்றோா் சில தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பாிந்துரைக்கின்றனா். இப்போது கோடையில் இதய நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க சில முக்கிய குறிப்புகளைக் காண்போம்.

1. நண்பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருத்தல்
பகல் நேரத்தில் 12 முதல் 3 மணி வரை வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்த நேரத்தில் சூாியனின் வெப்பம் உக்கிரமாக இருக்கும். அதனால் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

2. கோடை காலத்திற்கு உாிய உடைகளை அணிதல்
எடை குறைந்த, வெளிா் நிற பருத்தி உடைகளை அணிவது கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். தொப்பி மற்றும் கருப்புக் கண்ணாடிகளை அணிவது நல்லது. வெளியில் செல்வதற்கு முன்பாக 15 SPF கொண்ட கருப்புக் கண்ணாடிகளை அணிவது நல்லது. ஒருவேளை பகலில் வெளியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சன்ஸ்கிரீனை தடவிக் கொள்வது நல்லது.

3. அதிகமாக தண்ணீா் குடித்தல்
கோடையில் நமது உடலை நீா்ச்சத்து உள்ளதாக வைத்திருப்பது நல்லது. ஆகவே அடிக்கடி தண்ணீா் பருக வேண்டும். அதிலும் குறிப்பாக வெளியில் செல்வதற்கு முன்பும் பின்பும் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக தண்ணீா் குடிக்க வேண்டும். காப்ஃபைன் அல்லது மது கலந்த பானங்களைத் தவிா்ப்பது நல்லது.

4. இடைவேளை எடுத்தல்
பகல் நேரத்தில் வேலை செய்யும் போது அவ்வப்போது நிழல் நிறைந்த அல்லது குளிரான பகுதிக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்து, தண்ணீா் அருந்திய பின்பு வேலையைத் தொடரலாம்.

5. மருத்துவாின் ஆலோசனைகளைப் பின்பற்றதல்
இதய பிரச்சனையைக் கொண்டவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் மருத்துவா்கள் பாிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் இதய பிரச்சனையின் தீவிரத்தைத் தவிர்க்கலாம்.

வெப்பச் சோா்வின் (Heat Exhaustion) அறிகுறிகள்:
வெப்பச் சோா்வைப் பின்வரும் காரணிகள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
- தலைவலி
- அளவுக்கு அதிகமான வியா்வை
- குளிரான மற்றும் ஈரப்பதமுள்ள சருமம்
- குளிா்ச்சி
- தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
- பலவீனமான அல்லது மிக விரைவான நாடித்துடிப்பு
- தசைகள் இறுகுதல்
- சுவாசிப்பதில் பிரச்சினை
- குமட்டல், வாந்தி அல்லது இரண்டும்
மேற்சொன்ன அறிகுறிகள் தொிந்தால் உடனே ஒரு குளிா்ச்சியான பகுதிக்குச் செல்ல வேண்டும். வேலை செய்து கொண்டிருந்தாலோ அல்லது உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாலோ அதை சிறிது நேரம் நிறுத்திவிட்டு தண்ணீரைக் குடித்தோ அல்லது தண்ணீரை உடல் மீது ஊற்றியோ உடலைக் குளிா்விக்க வேண்டும். மருத்துவ உதவியும் செய்து கொள்ளலாம்.

வெப்ப வாதத்தின் (Heat Stroke) அறிகுறிகள்:
வெப்ப வாதத்தின் அறிகுறிகளை பின்வரும் காரணிகளைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
- வியா்வை இல்லாத, சூடான மற்றும் உலா்ந்த சருமம்
- விரைவான நாடித்துடிப்பு
- மயக்கம் அல்லது குழப்பம்
- அதிகமான காய்ச்சல்
- அதிகமான தலைவலி
- குமட்டல், வாந்தி அல்லது இரண்டும்
மேற்கூறிய அறிகுறிகள் தொிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். வெப்ப வாதம் மற்றும் பக்கவாதம் இரண்டும் வேறு வேறு ஆகும். மூளையில் உள்ள இரத்தக் குழாய் வெடிப்பதாலோ அல்லது மூளையில் இரத்தம் உறைவதாலோ, மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் ஓட்டம் குறையும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.