For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?

படுக்கைக்கு முன் உலர் திராட்சையை சாப்பிடுவது உடலில் மெலடோனின், டிரிப்டோபேன் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் அளவை அதிகரிக்கிறது, இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

|

திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் உலர் திராட்சை. திராட்சையைப் போன்றே உலர் திராட்சையிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது ஒரு சூப்பர்உணவுகளில் ஒன்றாகும். உலர் திராட்சையை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மக்கள் சாப்பிடுகிறார்கள்.

Health Benefits Of Eating Raisins Before Sleeping At Night In Tamil

ஆனால் இன்று நாம் காணப் போவது உலர் திராட்சையை இரவு தூங்கும் முன் சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைப் பற்றி தான். உலர் திராட்சையை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் அல்லது தூக்கமின்மை பிரச்சனையைக் கொண்டவர்கள் சாப்பிடுவது நல்லது. படுக்கைக்கு முன் உலர் திராட்சையை சாப்பிடுவது உடலில் மெலடோனின், டிரிப்டோபேன் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் அளவை அதிகரிக்கிறது, இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது தவிர, காலையில் எழும் போது உடல் வலி என்று கூறுபவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். இப்போது தினமும் இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் பார்வையை அதிகரிக்கும்

கண் பார்வையை அதிகரிக்கும்

பலவீனமான கண்களைக் கொண்டவர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் உள்ள பாலிஃபீனால்கள் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட், கண்களில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். மேலும் ப்ரீ-ராடிக்கல்களால் கண்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. இது மட்டுமின்றி, மாகுலர் தசை சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றைத் தடுக்கும். அதற்கு இரவில் உலர் திராட்சையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.

சோடியத்தைக் குறைக்கும்

சோடியத்தைக் குறைக்கும்

அதிகளவு உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உப்பில் உள்ள சோடியம் உடலில் அதிகம் சேரும் போது, இது இரத்த நாளங்களுடன், உடலில் வீக்கத்தை அதிகரிக்க செய்கிறது. உலர் திராட்சை சோடியத்தை உறிஞ்சி, உடலில் உள்ள அதிகளவு சோடியத்தைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு வழிகளின் மூலம், உலர் திராட்சை இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இது தவிர, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

குடலியக்கத்தை எளிதாக்கும்

குடலியக்கத்தை எளிதாக்கும்

உலர் திராட்சை குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். இவை குடலியக்கத்திற்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, உடலில் மலத்தை அதிகமாக சேர்த்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம், உடலில் உள்ள அழுக்கு மற்றும் கழிவுப் பொருட்களை எளிதில் அகற்றி, நச்சுக்களை நீக்க உதவுகிறது.

எலும்புகளை ஆரோக்கியமாக்கும்

எலும்புகளை ஆரோக்கியமாக்கும்

உலர் திராட்சையை சாப்பிடுவது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதுவும் உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதோடு, இது கால்சியம் மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் தாதுக்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் எலும்புகளை வலிமையாக்குகிறது.

எடை இழப்பிற்கு உதவும்

எடை இழப்பிற்கு உதவும்

உலர் திராட்சை எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் தான் இதை சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு எழுகிறது. அதுவும் உலர் திராட்சையை இரவு தூங்கும் போது சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் பசியைத் தடுக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

பிற நன்மைகள்...

பிற நன்மைகள்...

இது தவிர, உலர் திராட்சையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இதன் காரணமாக இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இதய நோய், கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் அல்சைமர் நோய்களுக்கு எதிராக எதிர்த்துப் போராடும். ஒருவரது நல்ல தூக்கத்திற்கு ஆன்டி-ஆக்சிடன்ட் உணவுகள் மிகவும் அவசியம். ஏனெனில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நல்ல தரமான தூக்கத்தில் நேரடி விளைவைக் கொண்டிருப்பதோடு, அதை மேம்படுத்தவும் உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eating Raisins Before Sleeping At Night In Tamil

Here are some health benefits of eating raisins before sleeping at night. Read on...
Story first published: Thursday, November 4, 2021, 14:07 [IST]
Desktop Bottom Promotion