For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் முன்னோர்கள் ஏன் வெள்ளித் தட்டில் சாப்பிட்டனர் என்று தெரியுமா?

ராஜ மரியாதையையும் தாண்டி வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் நமது முன்னோர்கள் ஏன் வெள்ளித் தட்டில் சாப்பிட்டனர் என்பதைப் பற்றியும் விரிவாக இங்கு காணலாம்.

|

வெள்ளித் தட்டில் சாப்பிடுபவர்களைப் பார்த்தால் மனதில் கலவையான எண்ணங்கள் தோன்றும். தொடக்க காலத்திலிருந்தே வெள்ளிப் பொருள்கள் ராஜ மரியாதையாகப் பார்க்கப்பட்டு வருகின்றன. பணக்காரர்களும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெள்ளித் தட்டில்தான் சாப்பிடுவார்கள் என்று நம்மில் பலர் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் ராஜ மரியாதையையும் தாண்டி வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் நமது முன்னோர்கள் ஏன் வெள்ளித் தட்டில் சாப்பிட்டனர் என்பதைப் பற்றியும் விரிவாக இங்கு காணலாம்.

Health Benefits Of Eating Food In Silverware

வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம். குறிப்பாக வெள்ளித் தட்டில் உணவை வைத்து குழந்தைகளுக்கு ஊட்டினால் அது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் வெள்ளி கரண்டி கொண்டு சாப்பிட்டால் அது உணவை சத்தாக மாற்றுவதோடு பலவிதமான நோய்களையும் தடுக்கிறது. நாம் வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் ஏராளமான பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எளிதான செரிமானத்திற்கு வழிவகுக்கும்

எளிதான செரிமானத்திற்கு வழிவகுக்கும்

வெள்ளிப் பாத்திரங்கள் உணவிலுள்ள கிருமிகளை அழிக்கிறது என்று ஒருசில ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் அவை உணவுகளை நீண்ட நேரம் கெடாமல் பதமாக வைத்திருக்கும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உணவு விரைவாக செரிமானம் அடைவதற்கு உதவி செய்கிறது. அதோடு நமது உடலுக்குள் செல்லும் உணவை எரிக்கும் சக்தியையும் அதிகரிக்கிறது. ஆகவே வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

உடல் செல்களுக்கு புத்துணர்ச்சி தரும்

உடல் செல்களுக்கு புத்துணர்ச்சி தரும்

வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உடலில் உள்ள நிலையற்ற அணுக்களுடன் போரிட்டு நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்வைத் தருகிறது. அதோடு பாதிப்படைந்த உடல் செல்களையும் மீண்டும் தூண்டி எழுப்பி நன்றாக இயங்க வைக்கிறது. மேலும் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, ஆபத்தான நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது. உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் வெள்ளிக்கு உண்டு.

நச்சுத் தன்மையற்றவை மற்றும் பாதுகாப்பானவை

நச்சுத் தன்மையற்றவை மற்றும் பாதுகாப்பானவை

மற்ற உலோக பாத்திரங்களுடன் ஒப்பிடும் போது வெள்ளி நச்சுத் தன்மையற்ற மற்றும் பாதுகாப்பான உலோகமாக இருக்கிறது. வெள்ளியில் இருக்கும் வேதியியல் பொருட்கள் உணவை கெடவிடாமல் நீண்ட நேரம் பாதுகாக்கிறது. பிளாஸ்டிக் பாத்திரங்கள் தீங்கு தரக்கூடிய துகள்களை விரைவில் வெளிப்படுத்தும். ஆனால் வெள்ளிப் பாத்திரங்கள் எளிதில் துரு பிடிக்காது. அதனால் நமது உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய நச்சுப் பொருட்களை உருவாக்காது.

தீய பாக்டீரியாக்களிலிருந்து உணவைப் பாதுகாப்பவை

தீய பாக்டீரியாக்களிலிருந்து உணவைப் பாதுகாப்பவை

தீய பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையை வெள்ளி கொண்டிருப்பாத நிபுணர்கள் கருதுகின்றனர். அதனால் காற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிலிருந்து உணவை வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்கின்றன. அதனால் வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடும் போது அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

வெள்ளித் தட்டில் சாப்பிடும் போது அது தீய பாக்டீரியாக்களிடமிருந்து நம்மை பாதுகாப்பதோடு, நமது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது. மேலும் பலவிதமான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான பலவிதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது.

வெள்ளிப் பாத்திரங்களில் ஏன் உணவைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்?

வெள்ளிப் பாத்திரங்களில் ஏன் உணவைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்?

உணவில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் நச்சுக் கிருமிகளை வெள்ளி அழிக்கக்கூடியவை. பழைய காலத்தில் பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் வெள்ளி நாணயங்களை பாலில் இட்டு வைப்பார்கள். மேலும் தண்ணீர் மற்றும் ஒயின் போன்றவை நீண்ட நேரம் கெடாமல் இருக்கவும் அதே நேரம் அவை சுவையாக இருக்கவும் அவற்றை வெள்ளிப் பாத்திரங்களில் மக்கள் ஊற்றி வைத்திருக்கின்றனர்.

சமையலறைக் குறிப்புகள்

சமையலறைக் குறிப்புகள்

தற்போது சமையலறைகளில் துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை எதிர்வினை செய்யாதவை. அதோடு எந்தவிதமான நச்சுக்களை அவை வெளியிடுவதில்லை. மேலும் இவை எந்த விதமான தீங்கு தரக்கூடிய இரசாயனப் பொருள்களையும் வெளியிடாமல் சமைத்த உணவை சத்தோடு வைத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Eating Food in Silver Utensils

Here Are Some Health Benefits Of Eating Food In Silverware. Read On...
Desktop Bottom Promotion