For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

இரவு தூங்கும் முன்பு 2 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால், இன்னும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதுவும் 2 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்தால் இன்னும் நல்லது.

|

உலர் பழங்களில் ஒன்றான பேரிச்சம்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் அனைத்துமே உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இவை அனைத்துமே ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. பேச்சரிம்பழத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் நல்லது. இதனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு எளிதில் கிடைக்கும்.

Health Benefits Of Eating 2 Dates Before Bed In Tamil

இருப்பினும், இரவு தூங்கும் முன்பு 2 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால், இன்னும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதுவும் 2 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்தால் இன்னும் நல்லது. இப்போது இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்புகள் வலுவாகும்

எலும்புகள் வலுவாகும்

பேரிச்சம் பழத்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது.

கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கண் பார்வை அதிகரிக்கும். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கொரோனா காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏனெனில் நல்ல நோயெதிர்ப்பு சக்தியை கொண்டவர்களை கொரோனா அதிகம் பாதிப்பதில்லை. பேரிச்சம் பழத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள புரோட்டீன் தசைகளை வலுவாக்குகிறது. முக்கியமாக பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி எப்போதும் வலுவாக இருக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்

மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளதா? தினமும் 2 பேரிச்சம் பழத்தை இரவு தூங்கும் முன் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். மேலும் இது செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவுகிறது.

இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

பேரிச்சம் பழத்தை தினமும் தவறாமல் உட்கொண்டு வருவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பேரிச்சம் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் உள்ள கெட்ட கெழுப்புக்களை நீக்க உதவுகிறது.

எடை இழப்பிற்கு உதவும்

எடை இழப்பிற்கு உதவும்

நீங்கள் தொப்பை மற்றும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது வயிற்றுக் கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பிற பண்புகள், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது

தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது

2 பேரிச்சம் பழத்தை தினமும் இரவு தூங்கும் முன் சாப்பிடுவது தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது. ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது. இது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. அதே வேளையில் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி சத்தும் உள்ளது. இது சருமத்தை பொலிவாக்குவதோடு, சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

மூட்டு வலியை நீக்கும்

மூட்டு வலியை நீக்கும்

இன்று பெரும்பாலான மக்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். இப்படி மூட்டு வலியை சந்திப்பவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் இரவு தூங்கும் முன் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் பேரிச்சம் பழத்தில் கால்சியம் உள்ளது. இது உடலில் கால்சியம் பற்றாக்குறைப் போக்கும். அதே வேளையில், தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eating 2 Dates Before Bed In Tamil

In this articles, we listed some health benefits of eating 2 dates before bed. Read on...
Story first published: Monday, July 11, 2022, 18:27 [IST]
Desktop Bottom Promotion