For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த எண்ணெய் உங்களின் பாலுணர்வை அதிகரிக்கும் தெரியுமா?

இலவங்கப்பட்டை மரத்திலிருந்து பெறப்படும் இலை, பட்டை, எண்ணெய் ஆகியவை மருத்துவ சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

|

பொதுவாக இலவங்க மரத்தின் பட்டை, இலை, எண்ணெய் ஆகியவை உணவு வகைகளில் சேர்த்து உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதாக பலர் நினைக்கலாம். ஆனால், இலவங்கத்திற்கு இதைவிட முக்கியமான மருத்துவ பயன்கள் உள்ளன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. இலவங்கப்பட்டை மரத்திலிருந்து பெறப்படும் இலை, பட்டை, எண்ணெய் ஆகியவை மருத்துவ சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

health-benefits-of-cinnamon-essential-oil

இலவங்கப்பட்டை இலைகளிலிருந்து இலவங்கப்பட்டை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் முகம், உடல் மற்றும் சரும பாதுகாப்புக்கு உதவுகிறது. சின்னமாம் என்பது இதன் தாவரவியல் பெயர். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் இலவங்கப்பட்டை எண்ணெய்க்கு உள்ளது. இந்த எண்ணெய் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு இயற்கையான தீர்வாகவும் பயன்படுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டை எண்ணெய் நறுமண சிகிச்சையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இலவங்கப்பட்டையின் சாறுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது. இலவங்கப்பட்டை எண்ணெய், உடலின் லிப்பிட் வளர்சிதை மாற்றத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின்போது உடலில் உள்ள எதிர்வினை கலவையான மாலோண்டீல்டிஹைட்டின் அளவை இந்த எண்ணெய் குறைக்கக்கூடும். மேலும் இது அழற்சியை எதிர்த்து போராடுகிறது. மேலும் இதய சக்தி மற்றும் சுருக்கத்தன்மையை மேம்படுத்தி இதயத்தை பாதுகாக்க உதவுகிறது இலவங்கப்பட்டை எண்ணெய்.

நீரிழிவு நோய் சிகிச்சைக்கு உதவும்

நீரிழிவு நோய் சிகிச்சைக்கு உதவும்

பல்வேறு நீரிழிவு நோய் அறிகுறிகளை போக்க வல்லது இலவங்கப்பட்டை. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறன், வீக்கம் மற்றும் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றிற்கு இலவங்கப்பட்டை எண்ணெய் பயனளிக்கும். இது நீரிழிவு நோய் எதிர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்துகிறது.

 புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும்

புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும்

இலவங்கப்பட்டை எண்ணெய் தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கு எதிரான எதிர்விளைவுகளையும் இது ஏற்படுத்தும்.

பாலுணர்வை தூண்டும்

பாலுணர்வை தூண்டும்

இலவங்கப்பட்டை எண்ணெய் பாலியல் உந்துதலை அதிகரிக்கும். இதனால் ஒருவரின் பாலியல் வாழ்க்கை மேம்படும். இந்த எண்ணெய்யைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், விந்து வெளியேறுவதற்கான நேரத்தை அதிகரிக்கும்.

மேலும் இது ஹார்மோன் அளவையும் தூண்டுகிறது. இந்த எண்ணெய்யைத் தவறாமல் உட்கொண்டுவந்தால் ஆண் இனப்பெருக்க அமைப்பை பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

MOST READ:அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்கள் பிரச்சனைக்கான தீர்வுதான் இது...!

அல்சருக்கு சிகிச்சையளிக்கும்

அல்சருக்கு சிகிச்சையளிக்கும்

இலவங்கப்பட்டை எண்ணெய் வயிற்றுப் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக்கூடிய சக்தியுடையது. இந்த எண்ணெயை பயன்படுத்தும்போது ஹெலிகோபாக்டர் பைலோரி என அழைக்கப்படும் பாக்டீரியாக்களின் அளவு குறைந்து வருவது ஆய்வில் கண்டறியப்பட்டது.

மற்றொரு ஆய்வில், ஹெலிகோபாக்டர் பைலோரிக்கு எதிராக மிகவும் சக்திவாய்ந்ததாக இந்த எண்ணெய் கண்டறியப்பட்டுள்ளது. ஹெலிகோபாக்டர் பைலோரி புண்கள் உள்ளிட்ட பல்வேறு செரிமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

தொண்டை வலியை குணப்படுத்தும்

தொண்டை வலியை குணப்படுத்தும்

தொண்டை புண் வலியைக் குணப்படுத்த இலவங்கப்பட்டை எண்ணெய் பயன்படுகிறது. ஒரு ஆய்வில், இலவங்கப்பட்டை, கேரட், ரோஸ்மேரி மற்றும் யூகலிப்டஸ் ஆகியவற்றின் எண்ணெய்கள் அடங்கிய கலவையானது தொண்டைப் புண் உட்பட நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுவதாக கண்டறியப்பட்டது.

பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்கிறது

பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்கிறது

கால் விரல், நகம் போன்ற இடங்களில் பூஞ்சை ஏற்படுத்தும் நுண்ணுயிரிதான் கேண்டிடா. பூஞ்சை தொற்றுநோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரியான கேண்டிடாவிற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்த கூடியது இலவங்கப்பட்டை எண்ணெய்.

இலவங்கப்பட்டை எண்ணெய் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

மன அழுத்தத்தைக் குறைக்கும்

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை போக்க நீண்ட காலமாக அரோமாதெரபி பயன்படுத்தப்படுகிறது. அரோமாதெரபி மசாஜ் உள்ளிழுக்கும் நறுமண சிகிச்சையை விட அதிக நன்மைகளைக் கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், மனச்சோர்வு அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான நறுமண சிகிச்சையிலும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

இலவங்கப்பட்டை எண்ணெய் உடலின் வாய்வழி, தோல் மற்றும் அதிவேக பத்திகளை ஊடுருவக்கூடிய சேர்மங்களை கொண்டுள்ளன. இது மனச்சோர்வு சிகிச்சைக்கு உதவக்கூடும். நறுமண சிகிச்சையில் இலவங்கப்பட்டை எண்ணெய் பயன்படுத்துவதால் மன அழுத்தத்தைக் குறைத்தது விழிப்புணர்வை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

MOST READ:World Piles Day : உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா? அப்ப இத பண்ணுங்க...!

 தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

இலவங்கப்பட்டை எண்ணெய் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இலவங்கப்பட்டை எண்ணெய் தோல் அழற்சி மற்றும் தோல் தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆரோக்கியமற்ற நிறம், சிறிய சுருக்கங்கள், சொறி மற்றும் அதிக கொழுப்பு உள்ளடக்கம் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.

இலவங்கப்பட்டை ஈத்தர் மூலம் உடலின் தோல் நிலையை மேம்படுத்துகிறது. சருமத்தின் அடர்த்தி மற்றும் நெகிழ்ச்சியை அதிகரிக்கும் திறன் உடையது.

முடி உதிர்வை தடுக்கும்

முடி உதிர்வை தடுக்கும்

நம்முடைய உடல் பொதுவாக வெப்பமடைதல் மற்றும் எரிச்சல் தரும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது முடி உதிர்வதை தடுக்கவும், வேர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை எண்ணெய் தலைவலி, தலையில் பொடுகு மற்றும் பூஞ்சை நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் திறன் உள்ளது.

இலவங்கப்பட்டை எண்ணெய் மிகவும் பிரபலமான பொருட்களில் ஒன்றாகும். இந்த எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் உடலுக்கும் சருமத்துக்கும் பல நன்மைகளை நாம் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Cinnamon Essential Oil

Read to know the ways Cinnamon Essential Oil Can Protect Your Health.
Story first published: Thursday, November 21, 2019, 13:01 [IST]
Desktop Bottom Promotion