Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'இந்த' இரண்டு பொருட்கள் கலந்த தேநீரை குடிச்சா போதுமாம்...!
சீரக விதைகளில் இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் வானிலை மாற்றத்தால் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.
இந்திய பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சமையலறையில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கும், நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும் உதவும். மேலும், இது அனைத்து வயதினருக்கும் அதிகபட்ச நன்மைகளை வழங்குகிறது.மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த மசாலாப் பொருட்களால் பானங்களைத் தயாரித்துக் குடிப்பதே உங்கள் உடலுக்கு சிறந்தது.

இதனால் உடலின் மூலைமுடுக்குகளில் தேங்கியிருக்கும் டாக்ஸின்கள் நீங்கி உடல் சுத்தமாவதோடு, உடலுறுப்புக்களின் ஆரோக்கியமும் மேம்படும். அந்தவகையில், பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இது உங்கள் செரிமான அமைப்பை ஆற்றவும் செய்கிறது. இதன் விளைவாக உங்களை பல நோய்களிலிருந்து விலக்கி வைக்கிறது. இக்கட்டுரையில், பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேநீர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வழங்குகிறது என்பதை பற்றி காணலாம்.

உங்களுக்கு தேவையான பொருட்கள்
- தண்ணீர் 1 கப்
- பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி
- சீரகம் 1/2 தேக்கரண்டி
- இஞ்சி 1/2 அங்குலம்
- சுவைக்கேற்ப தேன்

பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேயிலை செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். இப்போது, அதில் பெருஞ்சீரகம், சீரகம், இஞ்சி சேர்க்கவும். பின்னர், மூடி 8-10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர், உங்கள் பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேநீரின் சுவைக்கு ஏற்ப தேனுடன் கலந்துகொள்ளுங்கள். இப்போது சூடான சுவையான தேநீர் தயார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.

பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் விதைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிகல்ஸ் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும். பெருஞ்சீரகம் விதைகளில் ஆண்டிமைக்ரோபியல் கூறுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. அவை குளிர், இருமல் மற்றும் காய்ச்சல் அபாயத்தைத் தணிக்கவும் உடனடி நிவாரணம் அளிக்கவும் உதவுகின்றன.

பெருஞ்சீரகத்தின் பிற நன்மைகள்
பெருஞ்சீரக தேநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இது வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. பெருஞ்சீரகத்தில் ஏராளமான மருத்துவ பண்புகள், வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.

சீரகம்
சீரக விதைகளில் இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் வானிலை மாற்றத்தால் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

சீரகத்தின் பிற நன்மைகள்
தண்ணீர் செரிமான மேம்படுத்துவதோடு, செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு, குமட்டல் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். சீரகம் கணையத்தில் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும்.



Click it and Unblock the Notifications