Just In
- 6 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 7 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 18 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 20 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Movies
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- News
சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெண் இனப்பெருக்க உறுப்புகளில் வரும் இந்த புற்றுநோய்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா..?
பெண்களுளைப் பொதுவாக தாக்கும் புற்றுநோய்களில் அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளை தாக்கும் புற்றுநோய்கள் அதிகம். இப்படி தாக்கும் புற்றுநோய்களின் அறிகுறிகளைப் பற்றியோ, அதைப் பற்றிய விவரங்களை பற்றியோ நிறைய பெண்களுக்கு தெரிவதில்லை. பெண் இனப்பெருக்க உறுப்புகளான கர்ப்பப்பை வாய், யோனி, ஓவரைன் மற்றும் வல்வார் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது. இந்த புற்றுநோய்களை சரியான நேரத்தில் கவனித்து சிகச்சை பெற வேண்டும்.
அசாதாரண செல்கள் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் பரவி இது போன்ற புற்றுநோய் கட்டிகளை உருவாக்குகின்றன. இந்த புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய ஸ்கிரினிங், செக் அப் முறைகள் உதவுகின்றன. சிலருக்கு இது பரம்பரை பரம்பரையாக வரலாம். அந்த மாதிரியான சமயங்களில் மரபணு சோதனை தேவைப்படுகிறது.
MOST READ: கற்பழிப்பு குற்றத்திற்கு மற்ற நாடுகளில் கொடுக்கப்படும் மிருகத்தனமான தண்டனைகள்!
இந்த புற்றுநோய் கட்டிகளை ஆரம்ப காலத்திலயே கண்டறிந்துவிட்டால் சிகிச்சை முறைகள் எளிதாக இருக்கும். குணப்படுத்தியும் விட முடியும். சீரான உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் கருப்பை வாய் புற்றுநோய்களை தடுக்கலாம். அதே நேரத்தில் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. கீழ்க்கண்ட அறிகுறிகளைக் கொண்டு எந்த மாதிரியான புற்றுநோய் என்பதை கண்டறிந்து முன்கூட்டியே சிகச்சை பெறலாம்.

கருப்பை புற்றுநோய்
இந்த வகை புற்றுநோய் பெண்களின் கர்ப்பப்பையில் உண்டாகிறது. கருமுட்டையை உருவாக்கும் கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டிகள் வளர்கின்றன. இது பொதுவாக வயதான பெண்களை தாக்குகிறது. இதன் அறிகுறிகளாவன பசியின்மை, வயிறு நிரம்பிய உணர்வு, வீக்கம், குடல்/சிறுநீர் பழக்கவழக்கங்களில் மாற்றம், வயிற்று போக்கு மற்றும் வலி ஏற்படுதல். இந்த மாதிரியான அறிகுறிகள் 2 வாரங்களுக்கு மேல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய் அதாவது கர்ப்பப்பையின் கழுத்து பகுதியில் இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. இது உடலுறவு மூலம் பரவும் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று மூலம் ஏற்படுகிறது. உடலுறவுக்கு பிறகு வெளிப்படும் இரத்தம், யோனி பகுதியில் துர்நாற்றம் வீசுதல், இடுப்பு வலி ஆகியவை கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் புறக்கணிக்காதீர்கள்.

கருப்பைக்குள் புற்றுநோய்
இந்த புற்றுநோய் எண்டோமெட்ரியல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பையின் உள் பகுதிகளில் ஏற்படுகிறது. பெண்களின் கருப்பை பார்ப்பதற்கு வெற்று, பேரிக்காய் வடிவில் இருக்கும். மாதவிடாய் நின்ற பிறகு இரத்த போக்கு ஏற்படுதல் இதன் அறிகுறியாகும். புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன், குழாய்களைக் கொண்டு கருப்பையை முன்கூட்டியே அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது இந்த புற்றுநோயை குணப்படுத்த முடியும். அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து இந்த நோய்களை குணப்படுத்தலாம்.

யோனி வகை புற்றுநோய்
இது ஒரு அரிய வகை புற்று நோயாகும். அசாதாரணமாக வெள்ளைப்படுதல், இரத்த போக்கு, உடலுறவின் போது வலி ஏற்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

வல்வார் புற்றுநோய்
இது புற்றுநோயின் அரிய வடிவமாகும். வயதான பெண்களில் பெண்ணுறுப்புகளின் வெளிப்புறத்தில் அசாதாரண வளர்ச்சி ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் வல்வார் புற்றுநோயை நீங்கள் குணப்படுத்தலாம். நிலையான அரிப்பு, வலி அல்லது எரியும் உணர்வு, மாதவிடாய் ஒழுங்கற்று போதல், நிற மாற்றம், வெள்ளைப்படுதல், இரத்த போக்கு போன்றவை வல்வார் புற்றுநோயின் அறிகுறிகளாகும். நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.