Latest Updates
-
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க...
யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது? பப்பாளி சாப்பிடும் போது செய்யக்கூடாதவைகள்!
பப்பாளியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த சுவையான பழத்தில் சில பக்கவிளைவுகளும் உள்ளன.
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் என்றால் அது பப்பாளியாகத் தான் இருக்கும். பழங்களிலேயே எளிதில் செரிமானமாகக்கூடிய மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டது பப்பாளி. இது பலருக்கும் மிகவும் விருப்பமான பழமும் கூட. சிலர் இந்த பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட விரும்புவார்கள். இன்னும் சிலர் சாலட் அல்லது ஸ்நாக்ஸ் நேரங்களில் சாப்பிடுவார்கள்.

இத்தகைய பப்பாளியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதோடு, பப்பாளி இலைகளின் சாறு கொசுக்களால் வரும் டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்த சுவையான பழத்தில் சில பக்கவிளைவுகளும் உள்ளன. கருச்சிதைவை உண்டாக்குவது முதல் உணவுக் குழாயில் பிரச்சனை உண்டாக்குவது வரை, பப்பாளியை சாப்பிடுவதால் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது பப்பாளி சாப்பிடும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைக் காண்போம்.

பிறப்பு குறைபாடுகள்
பப்பாளி இலைகளில் பாப்பைன் என்னும் சேர்மம் உள்ளது. நீங்கள் கர்ப்பமாக இருந்தால், இது குழந்தைகளுக்கு நச்சுத்தன்மை அளிக்கும். சில சமயங்களில் இது பிறப்பு குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும். தாய்ப்பால் கொடுக்கும் போது பப்பாளியின் பக்க விளைவுகள் பற்றி அதிகம் தெரியவில்லை. ஆகவே கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் சிறிது காலம் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அழற்சி
பழுக்காத பப்பாளி/பப்பாளி காய் சிலருக்கு அழற்சியை உண்டாக்கும். ஆகவே பப்பாளி காயை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள் அல்லது சென்சிட்டிவிட்டி/உணர்திறனை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதனால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

உணவுக்குழாய் சேதம்
பப்பாளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன என்பது அனைவருக்குமே தெரியும். அதோடு அந்த பழம் சுவையானதும் கூட. அதற்காக அந்த பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது உணவுக்குழாயை சேதப்படுத்தும்.

கருக்கலைப்பு
பப்பாளியின் விதைகளும், வேரும் கருக்கலைப்பை ஏற்படுத்தும். பழுக்காத பப்பாளி கருப்பையின் சுருக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் மறந்தும் பப்பாளி சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

இரத்த சர்க்கரை குறையும்
நீங்கள் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை எடுத்து வருபவராயின், அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று குறைத்துவிடும். இது மிகவும் ஆபத்தானது. ஆகவே அளவாக சாப்பிட்டு, பப்பாளியின் பலனைப் பெற முயற்சி செய்யுங்கள்.

கருவளம் பாதிக்கும்
பப்பாளியின் விதைகள் ஆண்களின் கருவளத்தைப் பாதிக்கும். முக்கியமாக இதன் விதைகள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் மற்றும அதன் நீந்தும் திறனைப் பாதிக்கும். இதனால் கருத்தரிப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.

நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்
பப்பாளியை அதிகம் உட்கொள்வது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். ஏனெனில் பப்பாளியில் பென்சில் ஐசோதியோசயனேட் என்னும் பொருள் உள்ளது. இது தான் இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாகும்.

சிறுநீரக கற்கள்
பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. என்ன தான் வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க அவசியமானதாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான வைட்டமின் சி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்பதை மறவாதீர்கள்.
எனவே பப்பாளியை அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.



Click it and Unblock the Notifications











