Latest Updates
-
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்..
இந்தியர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய ஆயுஷ் அமைச்சகம் கூறிய வழிகள் இதாங்க...
கொரோனா வைரஸ் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களை எளிதில் தாக்கக்கூடியது என்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கும் வழிகளைப் பின்பற்றுங்கள்.
இன்று உலகெங்கிலும் பேசப்படும் ஒரு விஷயம் என்றால் கொரோனா பற்றியதாக தான் இருக்கும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு, அவஸ்தைப்பட்டு வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் உயிரை இழந்துள்ளனர்.

இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரைத் தாக்கியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். இந்த வைரஸ் இந்திய மக்களிடையே பரவ ஆரம்பித்தால், பின் நாடே சுடுகாடாகிவிடும். எனவே இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 21 நாள் ஊரடங்கை பிறப்பித்திருந்தார். எனினும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையாமல் பெருகிக் கொண்டிருப்பதால், இந்தியாவில் ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.
இன்று தொலைக்காட்சியில் அரைமணி நேரம் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டினார். அதோடு கொரோனா வைரஸ் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களை எளிதில் தாக்கக்கூடியது என்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாற்று சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளை ஊக்குவிக்கும் இந்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கும் சில வழிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
கீழே இந்திய ஆயுஷ் அமைச்சகம் இந்தியர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூறும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சில அன்றாட பழக்கங்கள்:
வழி #1
தினமும் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். மனதை அமைதிப்படுத்தும் பழக்கங்களான யோகா, பிராணயாமம் போன்றவற்றை தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் மேற்கொள்ள வேண்டும்.

வழி #2
அன்றாட சமையலில் மஞ்சள், சீரகம், மல்லி மற்றும் பூண்டு போன்ற பொருட்களைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இவை உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்க்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில ஆயுர்வேத வழிகள்:
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வழிகளைத் தான் இந்திய ஆயுஷ் அமைச்சகம் அன்றாடம் பின்பற்ற கூறுகிறது. இந்த வழிகளால் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி உடலுக்கும் கிடைக்கும் என்றும் இந்திய ஆயுஷ் அமைச்சகம் கூறுகிறது.

வழி #1
ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்த தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் சியவன்பிரஷ் (Chyavanprash) சாப்பிட வேண்டும். இதில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான உட்பொருட்கள் அடங்கியுள்ளன.

வழி #2
துளசி, டால்சினி, கலிமிர்ச், சுக்கு ஆகியவற்றின் மூலிகை நீரை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உட்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பானத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்தும் பருகலாம். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் சி கிடைக்கும்.

வழி #3
பழங்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நம் முன்னோர்கள் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்தனர். ஆயுர்வேதத்தில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் சிறப்பான பானமாக மஞ்சள் கலந்த பால் கருதப்படுகிறது.

வழி #4
காலை மற்றும் மாலையில் மூக்கின் இரண்டு துவாரங்களிலும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நெய் போன்றவற்றைத் தடவ வேண்டும். இதனால் மூக்கின் வழியே கிருமிகள் நுழைந்து படிவது தடுக்கப்படும்.

வழி #5
ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி நன்கு 2-3 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். அதன் பின் எண்ணெயை துப்பிவிட்டு, வாயை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய வேண்டும்.

வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புண்ணிற்கான நிவாரணிகள்!
கொரோனா வைரஸ் தொற்று சுவாச மண்டலத்தைப் பாதிப்பதால், ஆயுஷ் அமைச்சகம் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படும் போது ஒருசில ஆயுர்வேத வைத்தியங்களைப் பின்பற்றப் பரிந்துரைக்கிறது. இப்போது அவை என்னவென்று காண்போம்.

வழி #1
தொண்டை புண் அல்லது தொண்டை கரகரப்பு சந்திக்கும் போது, நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் புதினா அல்லது ஓமம் சேர்த்து நன்கு கொதித்த பின், அந்த நீரைக் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும்.

வழி #2
வறட்டு இருமலால் மிகுந்த அவஸ்தைப்படும் போது, கிராம்பை பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, தினமும் 2 முதல் 3 முறை உட்கொள்ள வேண்டும்.

குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் சாதாரண இருமல் மற்றும் சளி பிரச்சனை இருந்தால் குணமாகிவிடும். ஒருவேளை அறிகுறிகள் பல நாட்களாக நீடித்திருந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, கொரோனா வைரஸிற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, சிகிச்சை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications