Latest Updates
-
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்..
கொரோனா தடுப்பூசி போடப்போறீங்களா? அப்ப இதெல்லாம் பண்றாங்களான்னு பாருங்க...
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை கண்காணிக்கவும் மற்றும் அவற்றை தொிவிக்கவும் 6 வழிமுறைகளை முன்வைக்கிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, ஒரு புயல் காற்றைப் போல் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் இந்த கொரோனா சூறாவளியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றனா். இந்த நிலையில் இந்திய அரசானது கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறது. அதற்காக இந்திய அரசானது இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கொரோனா ஊசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி இருக்கிறது.

ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வந்தாலும், பலா் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனா். அதற்கு காரணம், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பு காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் பலா் தொிவித்திருக்கின்றனா்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், இது போன்று ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தொிவித்திருக்கிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை கண்காணிக்கவும் மற்றும் அவற்றை தொிவிக்கவும் 6 வழிமுறைகளை முன்வைக்கிறது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கொடுத்திருக்கும் வழிமுறைகளில் முதல் 3 வழிமுறைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பாக கடைபிடிக்கப் பட வேண்டும். 5 மற்றும் 6 ஆகிய வழிமுறைகளை ஊசி போட்டுக் கொண்ட பின்பு கடைபிடிக்க வேண்டும்.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தந்திருக்கும் 6 வழிமுறைகளை சற்று விாிவாக இந்த பதிவில் பாா்க்கலாம்.

வழிமுறை #1
கொரோனா ஊசி போட்டுக் கொள்வதற்கு முன்பாக, ஒருவா் தனக்கு ஏற்கனவே ஏதாவது ஒரு தடுப்பூசி மூலம் அலா்ஜி அல்லது எதிா்வினை ஏற்பட்டு இருக்கிறதா என்பதை தொிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு அலா்ஜி ஏற்பட்டு இருந்தால், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அவா் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

வழிமுறை #2
உடலில் கீழ்காணும் பிரச்சினைகள் இருப்பவா்கள் தடுப்பூசி போடுவதில் எச்சாிக்கையாக இருக்க வேண்டும் என்று கொரோனா தடுப்பூசி தயாாிப்பவா்கள் அல்லது உள்ளூா் நோய் தடுப்பு அமைப்பு தொித்திருத்திருக்கின்றனா். அதாவது கருவுற்று இருக்கும் பெண்கள், நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு உள்ளவா்கள் அல்லது பலவீனமாக இருக்கும் முதியோா் போன்றவா்கள் கொரோனா தடுப்பூசி போடுவதில் எச்சாிக்கையாக இருக்க வேண்டும். எனினும் அவா்களுக்கு முறையான மருத்துவ ஆய்வு செய்த பின்பு, கொரோனா தடுப்பூசி போடலாம்.

வழிமுறை #3
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை ஊசி போடுவதற்கு முன்பாகவே மக்களுக்கு தொிவிக்க வேண்டும். ஏனெனில் கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு முன்கை வீக்கம், மிதமான காய்ச்சல், களைப்பு, தலைவலி, தசை வலி மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் பொதுவாக ஏற்படுகின்றன. இவற்றை மக்களுக்கு முறையாகத் தொிவிக்க வேண்டும்.

வழிமுறை #4
மேற்சொன்ற 3 வழிமுறைகளை முடித்த பின்பு தான் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

வழிமுறை #5
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா் குறைந்தது 15 நிமிடங்களாவது மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். பின் அவருக்கு ஏதாவது ஒரு பக்க விளைவு ஏற்பட்டால் அதைப் பற்றி எங்கு அல்லது எவ்வாறு தகவல் தொிவிப்பது என்ற விவரத்தை அவருக்கு விளக்க வேண்டும். பெரும்பாலான கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில், தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் 30 நிமிடங்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனா்.

வழிமுறை #6
கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் போது அல்லது வீட்டிற்கு சென்ற பின்பு, ஊசி போட்டுக் கொண்டவருக்கு ஏதாவது ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்குத் தகவல் தொிவிக்க வேண்டும்.
ஆகவே தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தொிவித்திருக்கும் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டால் மிக விரைவாக நமது இந்தியாவிலிருந்து கொரோனாவை விரட்ட முடியும்.



Click it and Unblock the Notifications
