For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் குறித்து ஒவ்வொருவரின் மனதில் எழும் கேள்விகளும்... அதற்கான பதில்களும்...

|

COVID-19 என்பது கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக ஏற்படும் ஒரு பெருந்தொற்று நோயாகும். இந்நோய் மூன்று மாதங்களுக்குள் உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பரவியுள்ளது. இதுவரை இந்த நோய்க்கு தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசியோ இல்லை. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.

இது ஒரு புதிய வைரஸ் மற்றும் வரலாற்றில் இம்மாதிரியான வைரஸ் ஏதும் இல்லை. தற்போது இந்த வைரஸ் மக்களிடையே பரவாமல் இருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திடீரென்று வேகமாக பரவி பல உயிர்களைப் பறித்து வரும் இந்த வைரஸ் குறித்து பலரது மனதில் ஒருசில கேள்விகள் எழும். இந்த கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? அப்ப இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செஞ்சு சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
COVID-19 கொரோனா வைரஸிலிருந்து வேறுபட்டதா?

COVID-19 கொரோனா வைரஸிலிருந்து வேறுபட்டதா?

கொரோனா வைரஸ்கள் பல நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் கொண்ட குடும்பமாகும். அதில் சில லேசானவை மற்றும் பிற தீவிரமானவை. ஆனால் COVID-19 என்பது ஒரு புதிய கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது ஒரு விலங்கிலிருந்து மனிதர்களிடம் வந்ததாக நம்பப்படுகிறது.

MOST READ: நிம்மதியான தூக்கமும், கொரோனாவை எதிர்க்கும் சக்தியும் கிடைக்கணுமா? அப்ப தினமும் இத சாப்பிடுங்க...

மளிகை பொருட்களில் இருந்து வைரஸ் பரவுமா?

மளிகை பொருட்களில் இருந்து வைரஸ் பரவுமா?

மளிகைப் பொருட்களில் இருந்து வைரஸ் பரவாது. ஆனால் மளிகை கடைக்கு செல்லும் போது, அந்த கடைக்கு வைரஸ் பாதித்த நபர் வருகை தந்து, இருமல் தும்மலால் வெளிவரும் துகள்கள் கடையின் ஏதேனும் மேற்பரப்பில் இருந்து, அந்த மேற்பரப்பை நீங்கள் தொட்டுவிட்டு, உங்கள் முகத்தை தொட்டால் வைரஸ் தொற்றிக் கொள்ளும். எனவே வெளியே எங்கு சென்றாலும், முகத்தை தேவையின்றி தொடாதீர்கள் மற்றும் வீட்டிற்கு வந்ததும் சோப்பால் கை, முகத்தை நன்கு கழுவுங்கள். மறவாமல் உடுத்தியுள்ள உடைகளை மாற்றுங்கள். அதேப் போல் வாங்கி வந்த பொருட்களையும் சுத்தப்படுத்துங்கள்.

ஸ்மார்ட்போன் மூலமாக வைரஸ் தொற்றிக் கொள்ளுமா?

ஸ்மார்ட்போன் மூலமாக வைரஸ் தொற்றிக் கொள்ளுமா?

உங்கள் ஸ்மார்ட்போனை பாக்கெட்டிலேயே வைத்திருந்து, வெளியே எடுக்காமல் இருந்தால், வைரஸ் எதுவும் பரவாது. ஆனால் இது ஒரு கேட்ஜெட், அதோடு முகத்தின் அருகே வைத்து பயன்படுத்தக்கூடியது. எனவே போனை கண்ட இடத்தில் வைப்பதைத் தவித்திடுங்கள். குறிப்பாக அசுத்தமான இடத்தை தொட்ட பின், போனைத் தொடும் முன் கைகளைக் கழுவுங்கள். இதனால் போன் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்.

MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்... ரொம்ப எச்சரிக்கையா இருங்க...

COVID-19 அறிகுறிகள் என்ன?

COVID-19 அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், உடல் வலி, சோர்வு, தொண்டைப் புண் மற்றும் வறட்டு இருமல் போன்றவை COVID-19-இன் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில் மூக்கடைப்பு மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் சந்திக்கலாம். அதைத் தொடர்ந்து மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியா போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

COVID-19 என்னைத் தொற்றிக் கொள்ள எவ்வளவு சாத்தியம் உள்ளது?

COVID-19 என்னைத் தொற்றிக் கொள்ள எவ்வளவு சாத்தியம் உள்ளது?

நீங்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் COVID-19 பரவியுள்ள பகுதிகளில், சமூக பரவலால் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

MOST READ: கொரோனா வைரஸை ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' அழிக்க உதவுமா? உண்மை என்ன?

யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

COVID-19 வயது, பாலினம் மற்றும் பின்னணி என்று எதையும் பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆனால் வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களை எளிதில் தாக்குவதற்கான அபாயம் உள்ளது. இத்தகையவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

யார் உடனே மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும்?

யார் உடனே மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும்?

COVID-19 ஹாட் ஸ்பாட்களுக்கு பயணித்தவர்கள் மற்றும் அந்த பயணிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். அதிலும் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

MOST READ: எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்... இப்படியும் பரவுமாம்..

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

இது மிகவும் பயங்கரமான தொற்றுநோயை வைரஸ் ஆகும். இது பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மலின் போது காற்றில் வெளியாகும் நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது. இந்த நீர்த்துளிகள் ஏதேனும் பொருட்கள் அல்லது மேற்பரப்புகளிலும் இருக்கலாம் மற்றும் இந்த பகுதியை ஒருவர் தொட்டால், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம்.

தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

சோப்பு மற்றும் நீரால் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். அதுவும் குறைந்தது 20 நொடிகள் கைகளின் இடுக்குகளில் எல்லாம் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்கவும், சமூக மற்றும் உடல் ரீதியான தூரத்தைப் பராமரிக்கவும் மற்றும் ஆரோக்கியமான சுவாசத்தைக் கடைப்பிடிக்கவும்.

MOST READ: உலகை கதற வைக்கும் கொரோனா மற்ற வைரஸ்களை விட ஏன் மிகவும் கொடியது தெரியுமா?

கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமா?

கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமா?

இல்லை, மாஸ்க் கட்டாயம் அணிய தேவையில்லை. நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்க்கச் செல்லும் போது அல்லது வைரஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ள வேலையில் இருப்போர் தான் கட்டாயம் அணிய வேண்டும். அதேப் போல் இருமல் மற்றும் தும்மல் அறிகுறிகள் உள்ளவர்களும் மாஸ்க் அணிய வேண்டும். இது மற்றவர்களைப் பாதுகாக்கும்.

மற்றவர்களுடன் நாம் எவ்வளவு தூரம் பராமரிக்க வேண்டும்?

மற்றவர்களுடன் நாம் எவ்வளவு தூரம் பராமரிக்க வேண்டும்?

COVID-19 வைரஸின் கேரியர் யார் என்று உங்களுக்குத் தெரியாததால், மக்களிடமிருந்து 1 மீட்டர் அல்லது 3 அடி தூரத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும்.

MOST READ: காசநோய் மற்றும் கொரோனா - இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்னென்ன தெரியுமா?

COVID-19 காற்றின் மூலம் பரவுமா?

COVID-19 காற்றின் மூலம் பரவுமா?

இந்த நோய் காற்று வழியாக இல்லாமல், பாதிக்கப்பட்டோரின் சுவாசத் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. ஆனால் சில ஆய்வுகள் சுவாச நுண்ணுயிர்கள் தரையில் விழுவதற்கு முன்பு சிறிது நேரம் காற்றில் நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறுகின்றன.

சோப்பு மற்றும் நீருக்கு பதிலாக சானிடைசரைப் பயன்படுத்துவது தான் சிறந்ததா?

சோப்பு மற்றும் நீருக்கு பதிலாக சானிடைசரைப் பயன்படுத்துவது தான் சிறந்ததா?

ஆல்கஹால் அடிப்படையான சானிடைசர்கள் வைரஸ்களை அழிக்கும். ஆனால் சோப்பு மற்றும் நீர் பயன்படுத்த முடியாத பட்சத்தில் இதைப் பயன்படுத்துங்கள். மற்றபடி இரண்டுமே வைரஸ்களை அழிக்கும் திறன் கொண்டவையே.

MOST READ: மே 29-ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் - இது நிஜம் தானா? உண்மை என்ன?

COVID-19-ஐ தடுக்க அல்லது குணப்படுத்தக்கூடிய மருந்துகள் அல்லது சிகிச்சைகள் ஏதேனும் உள்ளதா?

COVID-19-ஐ தடுக்க அல்லது குணப்படுத்தக்கூடிய மருந்துகள் அல்லது சிகிச்சைகள் ஏதேனும் உள்ளதா?

இந்த நோய்க்கு இன்னும் சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. உலகெங்கிலும் உள்ள பல இடங்களில் மருத்துவ பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விஞ்ஞானிகள் ஏற்கனவே இருக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பார்க்கிறார்கள். ஆனால் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை.

தடுப்பு மருந்துகள் ஏதேனும் உள்ளதா?

தடுப்பு மருந்துகள் ஏதேனும் உள்ளதா?

இல்லை. தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதைத் தவிர, இந்த நோயைத் தடுக்க உதவும் எந்த மருந்துகளும் இல்லை.

MOST READ: கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா?

COVID-19 SARS-க்கு சமமானதா?

COVID-19 SARS-க்கு சமமானதா?

இல்லை. கொரோனா வைரஸ் COVID-19 ஐ உண்டாக்கும். SARS-ஐ உண்டாக்கக்கூடியவை அதே மரபணுக்களுடன் தொடர்புடைய வைரஸ் ஆகும். ஒரே மரபணு தொடர்பை கொண்டிருந்தாலும், இவை உண்டாக்கும் நோய்கள் முற்றிலும் வேறுபட்டவை. COVID-19-ஐ விட SARS மிகவும் கொடியது. ஆனால் இது குறைவான அளவிலேயே மக்களைத் தாக்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coronavirus Scare: All Your COVID-19 Concerns Answered By A Doctor

COVID-19: What is this disease all about? How do you keep yourself safe and a few other commonly asked questions answered.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more