For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள் - அது என்ன அறிகுறி?

சமீபத்திய புதிய ஆய்வு ஒன்றில், கொரோனா வைரஸ் மனித உடலின் தசைக்கூட்டு அமைப்பையும் பாதிக்கக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது. இது மிகுந்த வலிக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

|

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து 11 மாதங்களாகிவிட்டது. உலகெங்கிலும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் இந்த கொடிய வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வளவு மாதங்களாகியும் இந்த வைரஸ் குறித்து ஒவ்வொரு நாளும் விஞ்ஞானிகள் புதிய விஷயங்களை அறிந்து வருகின்றனர். அதோடு இந்த வைரஸ் தொற்றின் அறிகுறி பட்டியலும் நீண்டு கொண்டு இருக்கிறது.

Coronavirus: Muscle Or Back Pain Can Be A Less Common Symptom Of COVID-19

ஆரம்பத்தில் ஒரு சுவாச நோயாக அறியப்பட்ட கொரோனா வைரஸ், தலை முதல் பாதம் வரை அனைத்து பகுதிகளையும் கருணையின்றி தாக்கி வருகிறது. இந்த தொற்றுநோயால் முதியவர்கள், நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த தொற்றுநோய் இளம் வயதினரையும் தாக்கி உயிரைப் பறிக்கும் அளவில் மோசமானது என்பது போக போக தெரிந்தது.

MOST READ: கொரோனா வரக்கூடாதா? அப்ப இந்த 3 பொருளை தினமும் மறக்காம சுத்தம் செய்யுங்க...

எனவே இதற்கான சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, நம்மை நாம் தான் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முறையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு

புதிய ஆய்வு

ஏற்கனவே கொரோனா வைரஸின் மிகவும் பொதுவான மற்றும் உன்னதமான அறிகுறிகளை நாம் அறிந்திருந்தாலும், சமீபத்திய புதிய ஆய்வு ஒன்றில், கொரோனா வைரஸ் மனித உடலின் தசைக்கூட்டு அமைப்பையும் பாதிக்கக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது. இது மிகுந்த வலிக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே மயால்ஜியா என்று அழைக்கப்படும் தசை வலி, கொரோனாவின் அறிகுறியாக அங்கீகரிக்கப்படுகிறது.

மிகவும் பொதுவான கொரோனா அறிகுறிகள்

மிகவும் பொதுவான கொரோனா அறிகுறிகள்

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவ ஆரம்பித்ததில் இருந்து, இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு வித்தியாசமான அறிகுறிகளை சந்தித்து வருகின்றனர். இன்று வரை இந்த கொரோனா அறிகுறியின் பட்டியலும் நீண்டுக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் சில பொதுவான கொரோனா அறிகுறிகள் பின்வருமாறு:

* காய்ச்சல்

* தொண்டை புண்/தொண்டை வலி

* வறட்டு இருமல்

* மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பு

* நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல்

* களைப்பு

* சுவை மற்றும் வாசனை இழப்பு

* இரைப்பை குடல் தொற்று

கோவிட்-19-க்கும் தசை அல்லது முதுகு வலிக்கும் உள்ள தொடர்பு

கோவிட்-19-க்கும் தசை அல்லது முதுகு வலிக்கும் உள்ள தொடர்பு

மயால்ஜியா அல்லது தசை வலி என்பது ஒரு நிலை. இதன் மூலம் ஒரு நோயாளி தசைநார்கள், தசைநாண்கள் மற்றும் திசுப்படலம் மற்றும் தசைகள், எலும்புகள் மற்றும் உறுப்புக்களை இணைக்கும் மென்மையான திசுக்களில் வலியை உணரலாம். உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின் படி, சீனாவில் கோவிட்-க்கு உறுதிப்படுத்தப்பட்ட 55,924 வழக்குகளில், 14.8 சதவீத நோயாளிகள் மயால்ஜியா அல்லது மூட்டு வலியால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. பிற பொதுவான அறிகுறிகளான தொண்டை புண் அல்லது வலி, தசைவலி மற்றும் குளிர்ச்சியால் போராடும் மக்களின் சதவீதம் அதிகமாக இருந்தாலும், தசை வலியாலும் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறி

வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறி

அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு மியால்ஜியா/தசை வலி ஒரு பொதுவான அறிகுறியாக அடையாளம் காணப்பட்டது.

பிற மிதமான கோவிட்-19 அறிகுறிகள்

பிற மிதமான கோவிட்-19 அறிகுறிகள்

தசை மற்றும் முதுகு வலி தவிர, கோவிட்-19 இன் மிகவும் குறைவாக அறியப்பட்ட அறிகுறிகளும் உள்ளன. கீழே அப்படி பலரும் கவனிக்காத மிகவும் குறைவாக அறியப்பட்ட கோவிட்-19 அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

* வயிற்று வலி

* மூளை மூடுபனி அல்லது குழப்பம்

* விழிவெண்பட அழற்சி

தடுக்கும் வழிகள்

தடுக்கும் வழிகள்

நீங்கள் காலநிலை மாற்றத்தால் அல்லாமல், தொடர்ச்சியான இருமலை சந்திப்பவரானால், குறைந்தபட்சம் ஒரு வாரமாவது உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை இம்மாதிரியான அறிகுறிகளை கொண்டவருடன் நீங்கள் வாழ்பவரானால், அவர்களைத் தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் அவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தவிர்க்கலாம். அதோடு எப்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, உங்கள் பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: Muscle Or Back Pain Can Be A Less Common Symptom Of COVID-19

Coronavirus: Muscle or back pain can be a less common symptom of COVID-19, here's how? Read on...
Desktop Bottom Promotion