For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா?

தற்போது நோயெதிர்ப்பு சக்தி முக்கியமான ஒன்றாக இருப்பதால், அவற்றை அதிகரித்து, பல வகையான நாள்பட்ட நோய்கள் பெருகுவதைத் தடுக்கும் ஒரு அற்புதமான உணவுக் கலவை தான் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை.

|

தற்போதைய சூழ்நிலையினால் ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வண்ணமயமான மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக, ஊட்டச்சத்துக்க நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதே புத்திசாலித்தனம். மாத்திரைகளை அதிகம் விழுங்கும் போது, அவற்றால் தற்காலிகமாகவே நன்மை கிடைக்கும். அதுவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணும் போது, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, அனைத்து வகையான ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் குணமாக முடியும். அதுவும் சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம்.

Combining Jaggery And Roasted Black Gram Helps To Boost Immunity

அதோடு குறிப்பிட்ட சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அவற்றில் உள்ள சத்துக்கள் உடலால் விரைவில் உறிஞ்சப்பட்டு, ஒரு நல்ல மாற்றத்தை உடலில் வேகமாக காண முடியும். அந்த வகையில் தற்போது நோயெதிர்ப்பு சக்தி முக்கியமான ஒன்றாக இருப்பதால், அவற்றை அதிகரித்து, பல வகையான நாள்பட்ட நோய்கள் பெருகுவதைத் தடுக்கும் ஒரு அற்புதமான உணவுக் கலவை தான் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை.

MOST READ: ஒருவருக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் விஷயங்கள் எவையென்று தெரிஞ்சுக்கணுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொட்டுக்கடலை

பொட்டுக்கடலை

பெரும்பாலான இந்திய சமையலறையில் கட்டாயம் இருக்கும் பொதுவான பொருள் தான் பொட்டுக்கடலை. சட்னி செய்ய பயன்படுத்தப்படும் பொட்டுக்கடலை, சிலருக்கு அது ஒரு ஸ்நாக்ஸ் என்பது தெரியுமா? ஆம், சும்மா இருக்கும் போது பொட்டுக்கடலையை சாப்பிடுவோர் ஏராளம். பழங்காலத்தில் கூட பொட்டுக்கடலை நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்ட உணவுப் பொருட்களுள் ஒன்று எனலாம்.

பொட்டுக்கடலையில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஃபோலேட், நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளன.

வெல்லம்

வெல்லம்

தற்போது ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரித்தவுடன், பலரது வீடுகளில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் செலினியம் அதிகம் இருப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளது.

இத்தகைய வெல்லத்தை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடும் போது, உடலினுள் பல அற்புதங்கள் நிகழும். கீழே பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை ஒன்றாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இரண்டிலுமே ஜிங்க் அதிகம் உள்ளது. இந்த கனிமச்சத்து உடலினுள் 300 நொதிகளை செயல்படுத்தக்கூடியது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். தற்போது மருத்துவர்கள் கூட நோயெதிர்ப்பு சக்தியை வலுபெற ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

சுவாச பிரச்சனைகள்

சுவாச பிரச்சனைகள்

இந்த உணவுக் கலவை சுவாச மண்டலம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் இரவு தூங்கும் முன், சிறிது பொட்டுக்கடலையை, வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.

நுரையீரல் சுத்தமாகும்

நுரையீரல் சுத்தமாகும்

தற்போது பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நுரையீரலை பெரிதும் பாதிக்கக்கூடியது என்பதால், நுரையீரலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகம் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலால் அசுத்தமான காற்றினை சுவாசிப்பதால், நம் நுரையீரலில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறோம். இதைத் தவிர்க்க, தினமும் சிறிது வெல்லத்தை பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதனால் நுரையீரல் சுத்தமாகி, சுவாச பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனைகள்

வெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது மற்றும் பொட்டுக்கடலையில் புரோட்டீன் உள்ளது. இவை இரண்டுமே பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள். மாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் தினமும் பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை சாப்பிட்டால், அப்பிரச்சனை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதய பிரச்சனைகள்

இதய பிரச்சனைகள்

பொட்டாசியம் நிறைந்த உணவுகள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க உதவும். இந்த உணவுக் கலவையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதய பிரச்சனைகள் வராமல் இருக்க பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை தினமும் சிறிது சாப்பிடுவது நல்லது.

அதோடு இந்த உணவுக் கலவை சொத்தைப் பற்களைத் தடுப்பதில் நல்லது மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும்.

எப்போது சாப்பிடுவது நல்லது?

எப்போது சாப்பிடுவது நல்லது?

பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை காலையில் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். வேண்டுமானால், இவற்றைக் கொண்டு லட்டு தயாரித்து தினமும் ஒரு உருண்டை சாப்பிடலாம். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். எனவே உங்கள் குழந்தைகளுக்கும் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை சாப்பிட கொடுக்க மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Combining Jaggery And Roasted Black Gram Helps To Boost Immunity

Foods that we eat every day are naturally dense in nutrients and possess qualities that can help to heal all kinds of illnesses. You just need to have the right food at the right time.
Story first published: Friday, October 30, 2020, 14:30 [IST]
Desktop Bottom Promotion