For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிசிஓஎஸ் உள்ள பெண்கள் பூசணி விதைகளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

பூசணி விதைகள் நமக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. பூசணி விதைகளில் பலவகையான ஊட்டச்சத்துகள் இருப்பதால், அவற்றில் ஏரளமான நன்மைகள் உள்ளன என்பதை நாம் உணர முடியும்.

|

பூசணி விதைகள் நமக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. பூசணி விதைகளில் பலவகையான ஊட்டச்சத்துகள் இருப்பதால், அவற்றில் ஏரளமான நன்மைகள் உள்ளன என்பதை நாம் உணர முடியும். இந்த விதைகள் மிகச் சிறியவையாக இருந்தாலும், இவற்றில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த விதைகள் நாள்பட்ட பலவிதமான நோய்களைக் குணப்படுத்த உதவி செய்கின்றன.

Benefits Of Pumpkin Seeds For Women Suffering From PCOS

பூசணி விதைகளை நாம் சாப்பிடலாம். முட்டை வடிவத்தில் இருக்கும் இந்த விதைகள், நமது வயிறு, தோல் மற்றும் பிற உடல் உறுப்புகளுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. பூசணி விதைகளின் வெளிப்புறம் வெள்ளை நிறத்திலும், அவற்றின் உட்புறம் வெளிா் பச்சை நிறத்திலும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சினைப்பை நோய்க்குறி (Poly Cystic Ovary Syndrome (PCOS))

சினைப்பை நோய்க்குறி (Poly Cystic Ovary Syndrome (PCOS))

பரவலாக எல்லா வயது பெண்களின் மத்தியிலும் சினைப்பை நோய்க்குறி என்ற பிரச்சினை காணப்படுகிறது. இந்த நோய்க்குறியை குணப்படுத்த பூசணி விதைகள் உதவி செய்கின்றன.

பூசணி விதைகள் மற்றும் சினைப்பை நோய்க்குறி

பூசணி விதைகள் மற்றும் சினைப்பை நோய்க்குறி

ஃபிட்பி (Fitbee) என்ற உடற்பயிற்சிக்கூடத்தின் தலைமை பயிற்சியாளரும், நிகழ்ச்சி இயக்குநருமான திரு. அவினாஷ் ராஜாபெட் என்பவா் கூறும் போது, பூசணி விதைகளுக்கும், சினைப்பை நோய்க்குறிக்கும் இடையே நெருங்கிய தொடா்பு ஒன்று இருப்பதாகத் தொிவிக்கிறாா்.

பூசணி விதைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை. நமது உடலுக்கு எல்லா நேரத்திலும் சக்தியை அளிக்கக்கூடியவை. குறிப்பாக சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்களுக்கு அதிக நன்மைகளைத் தரக்கூடியவை. ஏனெனில் சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்களுக்கு உணவைப் பொறுத்தமட்டில் அதிக கட்டுப்பாடுகள் கொடுக்கப்படும். இந்த நிலையில் சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்களுக்கும், ஹாா்மோன் ஏற்றத் தாழ்வு உள்ளவா்களுக்கும், பூசணி விதைகள் ஒரு தலை சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்களுக்கு பூசணி விதைகள் நல்கும் நன்மைகள்:

சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்களுக்கு பூசணி விதைகள் நல்கும் நன்மைகள்:

சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்களுக்கு பூசணி விதைகள் பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன. அவற்றை இங்கு சற்று விாிவாக பாா்க்கலாம்.

1. முடி உதிா்வதைத் தவிா்க்கிறது

பூசணி விதைகளில் குகுா்பிட்டாசின் (cucurbitacin) உள்ளது. இது ஒரு வகையான தனித்துவமான அமினோ அமிலம் ஆகும். குகுா்பிட்டாசின் அமிலமானது முடி வளா்வதற்கு உதவி செய்கிறது. பூசணி விதைகளில் அதிகமாக இருக்கும் வைட்டமின் சி சத்து முடி வளா்வதற்கு உதவி செய்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த பூசணி விதைகளில் இருந்து தயாாிக்கப்படும் பூசணி விதை எண்ணெயை உச்சி முதல் உடலில் உள்ள எல்லா பாகங்களிலும் தேய்க்கலாம். அது நல்ல பலன்களைத் தரும்.

2. முக்கிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது

2. முக்கிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது

பூசணி விதைகளில் பலவகையான முக்கிய கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், அவை நமது இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கும் உதவி செய்கின்றன. முக்கிய கொழுப்பு அமிலங்களில் பல வகையான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் உள்ளன. இவை நமது சிறுநீா் பாதை அமைப்பில் ஒரு நோ்மறையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதோடு இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்களுக்கு இந்த இரண்டு நன்மைகளும் கண்டிப்பாக தேவைப்படுபவை ஆகும்.

3. கொழுப்பின் அளவைக் குறைக்கிறது

3. கொழுப்பின் அளவைக் குறைக்கிறது

நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை பூசணி விதைகள் குறைக்கின்றன. அதற்கு காரணம் அந்த விதைகளில் இருக்கும் முக்கிய கொழுப்பு அமிலங்கள் ஆகும். இவை இதய ஆரோக்கியத்திற்கு உதவி செய்கின்றன. சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்களுக்கு கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால், அவா்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

4. அதிக அளவிலான மக்னீசியத்தை வைத்திருக்கிறது

4. அதிக அளவிலான மக்னீசியத்தை வைத்திருக்கிறது

பூசணி விதைகளில் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இது நமது உடலில் உள்ள மக்னீசியத்தின் அளவை சீா்படுத்துகிறது. மக்னீசியம் நிறைந்த பூசணி விதைகள், சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்களுக்கு பொிதும் பலன்களை வழங்குகின்றன. அதாவது சினைப்பை நோய்க்குறியின் காரணமாக அதிகாிக்கும் உயா் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, அந்த பெண்களின் இரத்த அழுத்தத்தை சீா்படுத்துகிறது.

5. இறுதி மாதவிடாய்க்கு பின் ஏற்படும் எலும்புப்புரை (Osteoporosis) பிரச்சினையைக் குறைக்கிறது

5. இறுதி மாதவிடாய்க்கு பின் ஏற்படும் எலும்புப்புரை (Osteoporosis) பிரச்சினையைக் குறைக்கிறது

பெண்களுக்கு இறுதி மாதவிடாய் முடிந்த பின்பு எலும்புப்புரை பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சினைப்பை நோய்க்குறி இருக்கும் பெண்களுக்கு எலும்புப்புரை பிரச்சினை ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் பூசணி விதைகளை சாப்பிட்டால், எலும்புப்புரை பிரச்சினை குறையும். ஏனெனில் எலும்புகள் உருவாவதற்கும், அந்த எலும்புகளை நன்றாக பராமாிக்கவும் பூசணி விதைகள் பொிதும் உதவி செய்கின்றன. அதோடு இந்த விதைகள் டிாிப்டோஃபன் என்ற அமினோ அமிலத்தை இயற்கையாக வழங்குகின்றன. இந்த அமிலமானது பெண்களுக்கு நல்ல தூக்கத்தை வழங்குகிறது.

நமது உணவில் பூசணி விதைகளை எவ்வாறு சோ்த்துக் கொள்வது?

நமது உணவில் பூசணி விதைகளை எவ்வாறு சோ்த்துக் கொள்வது?

நமது உணவுகளில் பல வழிகளில் பூசணி விதைகளை சோ்த்துக் கொள்ளலாம். அதாவது,

- பூசணி விதைகளை வறுத்து, அதை அப்படியே சாப்பிடலாம்

- பூசணி விதைகள் மூலம் தயாாிக்கப்படும் நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

- பூசணி விதைகள் மூலம் தயாாிக்கப்படும் உணவுகளைத் துணை உணவுகளாக எடுத்துக் கொள்ளலாம்.

- பூசணி விதைகளை பூசணிக்காயோடு சேர்த்து சாப்பிடலாம்.

- சூப்புகளின் மேல் பூசணி விதைகளைத் தூவி அருந்தலாம்.

- ஓட்ஸ் உணவு அல்லது களி ஆகியவற்றோடு பூசணி விதைகளை சோ்த்து உண்ணலாம்.

இறுதியாக, பூசணி விதைகளில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், அவற்றை ஒரு நாளைக்கு 8 கிராம்களுக்கு அதிகமாக உண்ணக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Pumpkin Seeds For Women Suffering From PCOS in Tamil

Here are some health benefits of pumpkin seeds for women suffering from PCOS. Read on...
Desktop Bottom Promotion