For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட்டு முடிச்சதும் கடைசியா கையை நக்கும் பழக்கம் இருக்கா? அப்ப இத படிங்க...

கைகளை நக்கி சாப்பிடுபவர்களைப் பார்க்கும் பலர், விசித்திரமாகவும், அருவெறுப்பாகவும் பார்ப்பார்கள். ஆனால் கைகளை நக்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால், நீங்களும் அதை செய்வீர்கள்.

|

ஒவ்வொருவருக்கும் சாப்பிடுவதில் ஒவ்வொரு மாதிரியான பழக்கம் இருக்கும். இது உணவுச் சேர்க்கையாகட்டும், சாப்பிடும் முறையாகட்டும் அல்லது சாப்பிட்ட பின்பான பழக்கமாகட்டும், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த உணவுப் பழக்கங்களில் ஒன்று சாப்பிட்ட பிறகு கைவிரல்களை நக்குவது. பலருக்கும் சாப்பிட்டு முடித்த பின் கைகளில் உள்ள உணவையும் நக்கும் பழக்கம் இருக்கும். சொல்லப்போனால், கைகளில் ஒட்டியுள்ள உணவை நக்கும் போது, அந்த உணவானது ஒரு மடங்கு சுவை அதிகமாக இருக்கும். அதெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும்.

Benefits of Licking Fingers After Eating In Tamil

கைகளை நக்கி சாப்பிடுபவர்களைப் பார்க்கும் பலர், விசித்திரமாகவும், அருவெறுப்பாகவும் பார்ப்பார்கள். ஆனால் கைகளை நக்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால், நீங்கள் இனிமேல் உணவு உண்ட பின் கைகளை நக்காமல் இருக்கமாட்டீர்கள். உங்களில் சிலருக்கு இது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்களுக்கு சாப்பிட்ட பிறகு விரல்களை நக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த பழக்கம் இஸ்லாத்தின் கடைசி மற்றும் சிறந்த தீர்க்கதரிசியான முஹம்மது நபி அவர்களிடமிருந்து பெறப்பட்டதால், சாப்பிட்ட பிறகு விரலை நக்குவது உங்களுக்கு இரக்கத்தைத் தருமாம்.

இப்போது சாப்பிட்ட பின் கைவிரல்களை நக்குவதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

MOST READ: தினமும் 2 கிராம்பு சாப்பிடுவதால் உடம்புல என்னென்ன அற்புதம் நடக்கும்-ன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர, சில பழக்கங்களை மேற்கொள்வதன் மூலமும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். அதில் ஒரு பழக்கம் தான் சாப்பிட்ட பின் கைவிரல்களை நக்குவது. மனித கைகளில் ஆன்.என்.ஏ என்னும் நன்மை பயக்கும் நொதி வெளிப்படுகிறது. இந்த நொதி பாக்டீரியா பைண்டராக செயல்படுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும். அதற்கு நாம் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவு உண்ட பின் கைவிரல்களை நக்குவது என்பது கைகளில் இருந்து அழக்கு மற்றும் உணவுகளை உடனடியாக சுத்தம் செய்யும் செயல்களில் ஒன்றாகத் தான் தெரியும். ஆனால் சாப்பிட்ட பின்பு கைவிரல்களை நக்குவது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும் ஆர்.என்.ஏ நொதியின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

பாக்டீரியாவுக்கு உணர்திறனை மேம்படுத்தும்

பாக்டீரியாவுக்கு உணர்திறனை மேம்படுத்தும்

உடலிலேயே பாக்டீரியா அதிகம் தங்கியிருக்கும் இடமாக நாம் கைகள் மற்றும் விரல்களைத் தான் கூறுவோம். இருப்பினும், விரல்களை நக்குவது என்பது முற்றிலும் ஆபத்தானது என்று அர்த்தமல்ல. நம் உடலுக்கு சில பாக்டீரியாக்கள் நல்லது அல்லது நன்மை பயக்கும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும், சாப்பிட்ட பிறகு கைவிரல்களை நக்குவது பாக்டீரியா மீதான நமது உணர்திறன் மேம்படுவதோடு, அதிக ஆர்.என்.ஏ-வும் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆபத்தான பாக்டீரியாக்களின் செயல்பாடு குறையும் மற்றும் நல்ல பாக்டீரியாக்களின் வேலையை செய்ய அனுமதிக்கும்.

நல்ல செரிமானத்திற்கு உதவும்

நல்ல செரிமானத்திற்கு உதவும்

பெரும்பாலான மக்கள் சாப்பிட்ட பிறகு கைவிரல்களை நக்கும் பழக்கமானது, பாக்டீரியாக்களின் வெளிப்பாட்டிற்கான பெரிய வாய்ப்பாக நினைக்கிறார்கள். ஆனால் கைவிரல்களைப் பயன்படுத்தி சாப்பிடுவதை விட ஸ்பூன்களைக் கொண்டு சாப்பிடுவது ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், சாப்பிடும் பாத்திரங்கள் பாக்டீரியாக்களால் எளிதில் மாசடைந்து, நம் செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கும். மறுபுறம், கைகளால் சாப்பிட்டு கைவிரல்களை நக்கும் போது, செரிமான அமைப்பினுள் பாக்டீரியாக்கள் மீதான நமது நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்.

பசியை அதிகரிக்கும்

பசியை அதிகரிக்கும்

நமது கைகளின் நரம்பு மண்டலம் நேரடியாக நம் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் உண்ணும் உணவின் அமைப்பு மற்றும் வெப்பநிலையை எளிதில் கண்டறிய நம் கைகளுக்கு உதவுகின்றன. இந்த வழியால் நரம்பு மண்டலம் வேகமாக மூளையை தயார் செய்து உண்ணும் உணவுகளை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. இந்த செயல்முறை ஒருவரது பசியை மேம்படுத்தவும் செய்யலாம்.

சாப்பிடுவதில் இன்பத்தை மேம்படுத்துகிறது

சாப்பிடுவதில் இன்பத்தை மேம்படுத்துகிறது

சாப்பிட்ட பின் கைவிரல்களை நக்குவதைக் கொண்டே உண்ட உணவின் சுவையை விவரிக்க முடியும் என்பது தெரியுமா? அதோடு ஒருவர் உணவை எவ்வாறு அனுபவித்து சாப்பிட்டுள்ளார் என்பதையும் இச்செயல் மூலம் அறிய முடியும்.

நன்றியுணர்வை மேம்படுத்தும்

நன்றியுணர்வை மேம்படுத்தும்

சில சமயங்களில், எளிய செயல் நமது மனநிலையை பாதிக்கும். எப்படி கைகளை பிடிப்பது மன சிகிச்சைகளுக் நன்மை அளிக்கிறதோ, அதேப் போல் உண்ட பின் கைகளை நக்குவதும் நமது மனநிலையைப் பாதிக்கிறது. உதாரணமாக, இது நாம் நன்றியுணர்வை எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதை பாதிக்கிறது.

முடிவு

முடிவு

உணவுகள் உட்பட நம்மிடம் உள்ள அனைத்திற்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். உண்ட பின் கைவிரல்களை நக்குவது நம் தட்டில் இருக்கும் ஒரு உணவைக் கூட விட்டுவிடாமல் நன்றியுடன் இருக்க கற்றுக் கொடுக்கிறது. இது நம் கைகளில் இருந்தும் தட்டில் இருந்தும் உணவுகளை முழுமையாக சுத்தம் செய்ய உதவுகிறது. கூடுதலாக, நன்றியுடன் இருப்பது எப்படி என்பது பற்றிய இஸ்லாமிய மதிப்புக்கு ஏற்ப இது அமைந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Licking Fingers After Eating In Tamil

Here we listed some health benefits of licking fingers after eating in tamil. Read on...
Desktop Bottom Promotion