For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

பாதாம் மற்றும் பால் ஆகிய இரண்டுமே ஏராளமான அத்தியாவசிய சத்துக்களைக் கொண்டுள்ளன. இவற்றை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

|

Almond Milk Benefits: பாதாம் அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான நட்ஸ் என்பதை அனைவருமே அறிவோம். தினமும் பாதாம் சாப்பிட்டால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும் என்பார்கள். அதுவும் பாதாம் பாலைக் குடித்தால், உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் சிலருக்கு பாதாம் பால் குடிக்கப் பிடிக்காது. அத்தகையவர்கள் பாதாமை சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் பாலைக் குடிக்கலாம். பாதாம் மற்றும் பால் ஆகிய இரண்டுமே ஏராளமான அத்தியாவசிய சத்துக்களைக் கொண்டுள்ளன. இவற்றை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

Almond Milk Benefits: Benefits Of Eating Almonds With A Glass Of Milk In Tamil

பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அதேப் போல் பாலில் கால்சியம், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த இரண்டையும் ஒருவர் தினமும் எடுக்கும் போது, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, சரும பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது. குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பாதாம் மற்றும் பாலை உட்கொள்வது மிகவும் நல்லது. இப்போது ஒரு தினமும் ஒரு கையளவு பாதாம் மற்றும் ஒரு டம்ளர் பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்

உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்

பாதாமில் மக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. அப்படிப்பட்ட பாதாமை ஒரு கையளவு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் பாலைக் குடிக்கும் போது, உடலின் ஊட்டச்சத்தின் அளவு அதிகரிக்கும். அதுவும் நீங்கள் சைவ உணவாளராக இருந்தால் மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனை இல்லாதவரானால், தினமும் பாதாம் பாலைக் குடிப்பது மிகவும் நல்லது.

வைட்டமின் ஈ அதிகரிக்கும்

வைட்டமின் ஈ அதிகரிக்கும்

உங்களுக்கு வைட்டமின் ஈ குறைபாடு உள்ளதா? அப்படியானால் தினமும் பாதாம் பாலைக் குடியுங்கள். இப்படி குடிக்கும் போது, உடலில் வைட்டமின் ஈ சத்தின் அளவு அதிகரித்து, சருமமும், தலைமுடியும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்

எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்

பாலில் கால்சியம் அதிகம் உள்ளன. இந்த கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். தினமும் பாதாம் பாலை குடித்து வரும் போது, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, எலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயமும் குறையும். எனவே உங்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பின், தினமும் பாதாம் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

கலோரி குறைவு

கலோரி குறைவு

ஒரு டம்ளர் பாதாம் பாலில் 39 கலோரிகளே உள்ளன. மேலும் ஒரு டம்ளர் பாதாம் பால் வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவரானால், உங்களது தினசரி டயட்டில் பாதாம் பாலைக் குடித்து வாருங்கள். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலும் போதுமான சத்துக்களுடன் நிறைந்திருக்கும்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

ஒரு கையளவு பாதாம் மற்றும் பால் அல்லது பாதாம் பால் என எந்த வகையில் உட்கொண்டாலும், அது குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, மலச்சிக்கல் பிரச்சனையையும் தடுக்கும். அதோடு பாதாம் பால் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனையும் மேம்படுத்தும்.

முக்கியமாக பாதாம் பாலை குடித்து வந்தால், சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் குறையும். எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தால், உங்களின் தினசரி டயட்டில் பாதாம் பாலை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Eating Almonds With A Glass Of Milk In Tamil

Almond Milk Benefits: Here are some health benefits of eating almonds with a glass of milk. Read on...
Story first published: Friday, February 3, 2023, 11:36 [IST]
Desktop Bottom Promotion