For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா?

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்று இப்போதெல்லாம் பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் என்னென்னவோ செய்கின்றனர்.

|

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடுவது என்பது பற்றி இன்றைக்கு பலரும் பலவிதமாக கூறி வருகின்றனர். தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் என்னென்னவோ செய்கின்றனர். நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப் போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும் தான் இருக்க வேண்டுமே த‌விர அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. காலை எழுந்த உடன் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

Benefits Of Drinking Healthy Juices On Empty Stomach

உடலில் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

MOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

நாம் முதல் நாள் இரவு சாப்பிட்ட உணவின் மீதம் மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம் இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனாலோ, இஞ்சி சாறு குடிப்பதனாலோ என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ந்த தண்ணீர்

குளிர்ந்த தண்ணீர்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம். தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.

வெந்தயத் தண்ணீர்

வெந்தயத் தண்ணீர்

வெந்தயம் சிறந்த மருந்து. சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல மருந்து இது உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்து. வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து குடிக்க வேண்டும். அதற்கு பதிலாக வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது. வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

இஞ்சிச் சாறு

இஞ்சிச் சாறு

இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்

வெள்ளைப்பூசணி சாறு

வெள்ளைப்பூசணி சாறு

வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.

அருகம்புல் சாறு

அருகம்புல் சாறு

அல்சருக்கு அரு மருந்து வெறும் வயிற்றில் குடிக்கும் அருகம்புல் சாறுதான். நாட்டு மருந்து கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Drinking Healthy Juices On Empty Stomach

Here we listed some of the healthy juices that can drink on empty stomach. Read on to know more...
Story first published: Tuesday, January 28, 2020, 16:43 [IST]
Desktop Bottom Promotion