For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலை உணவில் பழங்களை ஏன் சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!

ஆயுர்வேதத்தின் படி, பழங்கள் இனிப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளுடன் பச்சையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். பழங்களில் எளிய கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை விரைவாக ஜீரணிக்கப்படுகின்றன

|

பண்டைய காலம் முதல் இன்று வரை ஆயுர்வேத மருத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நம் முன்னோர்களும் ஆயுர்வேத மருத்துவ முறைகளை பின்பற்றி பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளனர். அந்த வகையில், காலை உணவில் பழங்களை சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதம் கூறுகிறது.

Ayurveda Food Tips: Here’s why you should not eat fruits in breakfast in tamil

நீங்கள் காலை உணவில் பழங்களை சேர்த்து சாப்பிடுபவரா? அல்லது சாப்பிட விரும்புகிறீர்களா? ஆம். எனில், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. ஆயுர்வேதத்தின்படி, காலை 6-10 மணிக்கு இடைப்பட்ட நேரம் கப காலம். இந்த காலகட்டத்தில், நமது செரிமான அக்னி மிகவும் குறைவாக உள்ளது. இதனால், உங்கள் செரிமான செயல்பாடுகள் சரியாக இருக்காது.

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்பதற்கு இதுவே முக்கிய காரணம். அதைப் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின் படி, பழங்கள் இனிப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளுடன் பச்சையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். பழங்களில் எளிய கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை விரைவாக ஜீரணிக்கப்படுகின்றன. பழங்கள் கபவை போன்ற குணங்களைக் கொண்டுள்ளன. கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும். இதனால் அவை கபாவை மோசமாக்கும் மற்றும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அது தொடர்பான அசாதாரணங்களுக்கு வழிவகுக்கும்.

காலை உணவில் பழங்கள் இல்லை

காலை உணவில் பழங்கள் இல்லை

பழங்களை காலை உணவில் தவிர்க்க வேண்டிய முக்கிய காரணங்களில் ஒன்று, அக்னி அல்லது செரிமான தீ குறைவாக இருக்கும் போது, குளிர் உணவுகள் அதை மேலும் குறைக்கும். முன்பு கூறியது போல், பழங்கள் குளிர்ச்சியானவை. அதனால்தான் எந்த வகையான பழங்களையும் காலை உணவில் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் சாப்பிட வேண்டாம் என ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆயுர்வேத காலை உணவு

ஆயுர்வேத காலை உணவு

சிறந்த காலை உணவு சூடாகவும் ஜீரணிக்க எளிதாகவும் இருக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். உதாரணமாக, அரிசி கஞ்சி அல்லது டேலியா போன்ற சமைத்த தானியங்களுடன் சிறிது சீரகம், உலர் இஞ்சி போன்ற செரிமான மசாலாப் பொருட்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் ஒரு கிளாஸ் சூடான பால் போன்றவற்றையும் காலை உணவாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்காமல், அவை எளிதாக ஜீரணமாக உதவும்.

மக்கள் ஏன் காலை உணவாக பழங்களை சாப்பிடுகிறார்கள்?

மக்கள் ஏன் காலை உணவாக பழங்களை சாப்பிடுகிறார்கள்?

நாம் நீண்ட காலமாக பழங்களை காலை உணவாக உட்கொண்டு வருகிறோம். இது நடைமுறையில் இருப்பதால், நம்மில் பலர் ஏன் என்று கேள்வி கேட்கலாம். சிலர் காலையில் பழங்களை உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாலும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு வலுவான செரிமான செயல்பாடு இருப்பதாலும், சிலருக்கு இவை பொருந்தலாம். இந்த நடைமுறை வெப்பமான வெப்பமண்டல இடத்தில் வசிப்பவர்களுக்கும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இன்னும், காலை உணவை சாப்பிட வேண்டுமா?

இன்னும், காலை உணவை சாப்பிட வேண்டுமா?

நீங்கள் யாராக இருந்தாலும், பழங்கள் இல்லாமல் காலை உணவு முழுமையடையாது என உணர்ந்தால், அதில் இலவங்கப்பட்டை அல்லது உலர்ந்த இஞ்சி போன்ற சில மசாலாப் பொருட்களுடன் சாப்பிடலாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும், வெப்பமான வானிலை இருக்கும் போது காலையில் பழங்களை உட்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதை பற்றி உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை செய்து பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurveda Food Tips: Here’s why you should not eat fruits in breakfast in tamil

Here we are talking about the Ayurveda Food Tips: Here’s why you should not eat fruits in breakfast in tamil.
Story first published: Tuesday, December 13, 2022, 14:17 [IST]
Desktop Bottom Promotion