For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் வலியைப் போக்க ரன்பீர் கபூர் மேற்கொண்ட இந்த சிகிச்சை என்னன்னு தெரியுமா?

கிரையோதெரபி ஒரு வலி குறைப்பு நுட்பமாகும். மற்ற வலி குறைப்பு நுட்பங்களைப் போல இந்த சிகிச்சை பிரபலமாக இல்லை என்றாலும், இது நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

|

கிரையோதெரபி ஒரு வலி குறைப்பு நுட்பமாகும். மற்ற வலி குறைப்பு நுட்பங்களைப் போல இந்த சிகிச்சை பிரபலமாக இல்லை என்றாலும், இது நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதையே நிறைய பிரபலங்கள் நம்புகின்றனர். சமீபத்தில் ஃபர்ஹான் அக்தரும் அவரது காதலர் ஷிபானி தண்டேகரும் தங்களது இன்ஸ்டா கதைகளில் கிரையோதெரபி பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

All About Cryotherapy

இந்த பதிவு கிரையோதெரபி சிகிச்சையை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது மற்றும் இந்த வித்தியாசமான வலி நிவாரண முறையைப் பற்றி மக்கள் அறிய ஆர்வமாக இருக்கும் ஒரு நிலையை உருவாக்கியது. லிண்ட்சே லோகன், மாண்டி மூர் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் கூட இந்த சிகிச்சையைப் பற்றி புகழ்ந்து பேசுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரையோதெரபி என்றால் என்ன?

கிரையோதெரபி என்றால் என்ன?

கிரையோதெரபி அல்லது குளிர் சிகிச்சை அல்லது உறைபனி சிகிச்சை என்பது ஒரு நபரின் உடல் 150 டிகிரி தீவிர உறைபனி வெப்பநிலையில் வைக்கப்படும் ஒரு சிகிச்சையாகும். இந்த வலி-குறைப்பு சிகிச்சை வலி அல்லது வீக்கத்தால் எரிச்சலூட்டப்பட்ட நரம்புக்கு வலி மரத்துப் போகும் ஒரு உணர்வைத் தருகிறது. இதனால் அந்த நபருக்கு நிவாரணம் கிடைக்கும்.

சரும பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க இந்த சிகிச்சையானது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் இறந்த செல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டு வர உதவுகிறது.

மேற்கத்திய நாடுகளில் பிரபலம்

மேற்கத்திய நாடுகளில் பிரபலம்

மேற்கத்திய நாடுகளில் இந்த சிகிச்சை பொதுவாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இந்தியாவிற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் புதியது. பலர் இந்த சிகிச்சையை இன்னும் முயற்சி செய்யவில்லை. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குளிர்ந்த வெப்பநிலை ஏற்கனவே பழக்கப்பட்டது என்பதால் அவர்கள் இந்த சிகிச்சையைத் தாங்க முடியும். மேலும் கிரையோதெரபி அங்கு வெற்றிபெற இதுவே காரணம்.

கிரையோதெரபியின் நன்மைகள்!

கிரையோதெரபியின் நன்மைகள்!

வலி நிவாரணி

இந்த சிகிச்சையின் முக்கிய நன்மை வலி நிவாரணம். நீங்கள் தசை வலி அல்லது சில வகை மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த சிகிச்சை உங்களுக்கு மிகுந்த நன்மையை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சிகிச்சையால் நிறைய விளையாட்டு வீரர்கள் வேகமாக குணமடைந்ததாகக் கூறுகின்றனர்.

தசைகளில் காயம் அல்லது வலி போன்றவற்றிற்கு நாம் ஐஸ் பேக் அல்லது ஐஸ் ஒத்தடம் தருவது வழக்கம். இதேபோல், உறைபனி சிகிச்சையும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, குணமடையும் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. கீல்வாதம் போன்ற பாதிப்புகளுக்கு கிரையோதெரபி சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

அழற்சியைக் குறைக்கிறது

அழற்சியைக் குறைக்கிறது

நமது நோயெதிர்ப்பு அமைப்பு ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராட முயற்சிக்கும் போது, அது சில நேரங்களில் அளவுக்கு மீறி வினை புரிகிறது. இது நாள்பட்ட அழற்சிக்கு வழிவகுக்கிறது. இதனால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க தகுந்த சிகிச்சையளிக்கப்பட வேண்டும். கிரையோதெரபி வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

புற்றுநோயைப் போக்கும்

புற்றுநோயைப் போக்கும்

அழற்சியின் காரணமாக ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கவும் கிரையோதெரபி சிகிச்சை உதவுவதாக அறியப்படுகிறது. ஆனால் இது ஒரு மருத்துவ சிகிச்சை என்பதால் மருத்துவரால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் புற்றுநோய் அணுக்களை உறைய வைத்து புற்றுநோயை போக்குகின்றனர்.

மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மூளையில் ஏற்படும் அழற்சி காரணமாக, நினைவாற்றல் இழப்பு, குறைவான கவனம், பதட்டம், மன அழுத்தம், முதுமை போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. கிரையோதெரபி மூளை வீழ்ச்சியின் அறிகுறிகளை கிட்டத்தட்ட 50% குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

All About Cryotherapy

Want to know all about cryotherapy? Read on...
Desktop Bottom Promotion