Just In
- 6 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 7 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 18 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 20 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Automobiles
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒயிட் ஒயின் - ரெட் ஒயின் ரெண்டுல எது ஆரோக்கியம்? தெரிஞ்சிக்கங்க...
பொதுவாக வொயின் என்றால் அழகுக்காகவும் வயதாகாமல் இருக்கவும் பயன்படுத்தும் விஷயம் என்று நினைச்சு இருந்தோம். ஆனால் வொயினில் ஏராளமான உடல் நல நன்மைகளும் பொதிந்துள்ளது. திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த வொயின் இல்லாத கொண்டாட்டங்களையே நாம் பார்க்க முடியாது. அந்தளவுக்கு எல்லாருக்கும் பிடித்த ட்ரிங் என்றே கூறலாம்.
இதை சரியான அளவு நீங்கள் எடுத்து வந்தால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதோடு, புற்றுநோய் வராமல் காக்க, மன நிலையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதே மாதிரி பிரஞ்சு மக்கள் இந்த வொயினை உணவில் சேர்த்துக் கொண்ட பிறகு இதய நோய்கள் ஏற்படுவது குறைந்துள்ளது என்கின்றனர்.

எப்படி வந்தது?
ஹார்வார்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி படி ஸ்கார்பியன் அரசன் கி.பி 3150 வருடத்திற்கு முன்பு இந்த வொயினை தயாரித்தார். இதில் ஏகப்பட்ட மூலிகை குணங்கள் இருப்பதும் தெரிய வந்தது. அப்படியே இதன் டேஸ்ட்டாலும் நன்மையாலும் உலகம் முழுவதும் பருகப்பட்டது. இதை குடித்தாலே மனநிலை ரிலாக்ஸ் அடையும். இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
MOST READ: இந்த ரெண்டு ராசியும் பணம், பதவி எல்லாத்துலயுமே டாப் தான்ப்பா... அப்ப உங்க ராசி?

வொயின் வகைகள்
இந்த வொயின்களிலே 5 வகைகள் இருக்கின்றன.
ரெட் வொயின், வொயிட் வொயின், ரோஸ் வொயின், ஸ்பார்க்கிளிங் வொயின் மற்றும் ஃபோர்டிபைடு வொயின்.
சரி வாங்க ரெட் மற்றும் வொயிட் வொயினில் எது சிறந்தது என்று நாம் பார்க்கலாம். பேரை பார்க்கும் போது இரண்டுக்கும் நிறத்தில் வேறுபாடு இருக்கும் என்று தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல.

திராட்சை பழங்களில் வேறுபாடு
ரெட் மற்றும் வொயிட் வொயின் வித்தியாசமான திராட்சை பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ரெட் வொயின் சிவப்பு திராட்சை பழங்களில் இருந்தும் வொயிட் வொயின் வெள்ளை திராட்சை பழங்களில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. பீனாட் நோயர், காபர்னட், சவிக்னான் போன்றவை ரெட் வொயின் வகைகள். சர்டோனாய், பீனாட் க்ரைசியோ போன்றவை வொயிட் வொயின் வகைகள்.

பாகங்களில் வேறுபாடு
அதே மாதிரி திராட்சை பாகங்களும் வேறுபடுகின்றன. ரெட் வொயின் திராட்சையின் தோல் மற்றும் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே தான் ரெட் வொயின் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதுவே வொயிட் வொயின் தயாரிக்கும் போது திராட்சை பழங்களை அழுத்தி அதிலுள்ள தோல், விதை மற்றும் தண்டுகள் நொதித்தலின் போது நீக்கப்பட்டு விடும். சில நேரங்களில் வொயிட் கலர் திராட்சையை கொண்டும் செய்யலாம். இதே மாதிரி ஆரஞ்சு வொயின் கூட இருக்காம். அதன் டேஸ்ட் ரெட் வொயின் மாதிரியே இருக்கும்.

வொயின் தயாரிக்கும் முறைகள்
ரெட் வொயின் அடர்ந்த நிறத்தில் மென்மையாக இருக்க காரணம் அதன் அமிலத்தன்மை, அரோமேட்டிக் நறுமணம் தான்.
இரண்டு வொயின் தயாரிக்கும் போது அதன் ஆக்ஸிடேஷன் முறை வேறுபடுகிறது.ரெட் வொயின் ஆக்ஸிடேஷன் செயலின் போது நெடியுடைய நறுமணம், மென்மையான தன்மையை பெறுகிறது. ஓக் பேரலில் வைத்து காய்ச்சும் போது ஆக்ஸிஜனுடன் வொயின் வினைபுரிந்து ரெட் வொயினுக்கு அடர்ந்த நிறத்தை தருகிறது.
ஆனால் வொயிட் வொயின் தயாரிக்கும் போது ஸ்டீல் பாத்திரத்தை பயன்படுத்துவதால் ஆக்ஸினேற்றம் குறைந்து ப்ளவர் நறுமணமும் லேசான நிறமும் கிடைக்கிறது.
MOST READ: ஜோடின்னா இப்படிதான் இருக்கணும்... கல்யாணத்துல இவங்க செஞ்ச காரியத்த பாத்திங்களா?

ஊட்டச்சத்து அளவுகள்
வொயிட் வொயின்
கலோரிகள் - 82
கார்போஹைட்ரேட் - 2.6 கிராம்
சர்க்கரை - 1 கிராம்
புரோட்டீன் - 0.1கிராம்
சோடியம் - 5 கிராம்
பொட்டாசியம் - 71 மில்லி கிராம்
மக்னீசியம் - 71 மில்லி கிராம்
இரும்புச் சத்து - 0.5 மில்லி கிராம்
விட்டமின் பி6-7 மில்லி கிராம்
ரெட் வொயின்
கலோரிகள் - 85
கார்போஹைட்ரேட் - 2.6 கிராம்
சர்க்கரை - 0.6கிராம்
புரோட்டீன் - 0.1கிராம்
சோடியம் - 4 கிராம்
பொட்டாசியம் -127 மில்லி கிராம்
மக்னீசியம் - 127 மில்லி கிராம்
இரும்புச் சத்து - 1 மில்லி கிராம்
விட்டமின் பி6-7மில்லி கிராம்
மேற்கண்ட ஊட்டச்சத்து பட்டியலை பார்த்தால் ரெட் வொயினில் சில விட்டமின்கள், மினரல்கள் அதிகமாக இருக்கும். வொயிட் வொயினில் கலோரிகள் குறைவு.

வொயிட் வொயின் நன்மைகள்
நுரையீரல் ஆரோக்கியம்
வொயிட் வொயினில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நுரையீரல் திசுக்களை ஆரோக்கியமாக இருக்கவும், சுவாசம் இயல்பாக இருக்கவும் பயன்படுகிறது. பவ்வலோ என்ற யுனிவர்சிட்டி செய்த ஆராய்ச்சி படி இதன் ஊட்டச்சத்துக்கள் நுரையீரல் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

இதய பாதுகாப்பு
25% இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்தது.

உடல் எடை குறைப்பு
இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான எபிகேட்டசின், க்யூர்சிட்டின் மற்றும் ரெஸ்வரட்டோல் போன்றவை உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. எனவே தினமும் 1-2 கிளாஸ் வொயிட் வொயின் குடித்து வந்தால் ஸ்லிம்மாக சுத்தலாம்.

நோய்களை தடுக்கும் ஆற்றல்
இதிலுள்ள ப்ளோனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய்களை நம் உடலில் இருந்து துரத்துகிறது. குறிப்பாக புற்றுநோய் குறிப்பாக குடல் புற்று நோய் வராமல் காக்கிறது

தீமைகள்
அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது கலோரிகள் அதிகமாகி உடல் எடை அதிகரிக்கலாம். அதிகமான ஆல்கஹால் உடலுக்கு நல்லது கிடையாது. சில பேருக்கு கணைய அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
அளவுக்கு அதிகமாக குடித்தால் உயர் இரத்த அழுத்தம், பக்க வாதம், இதய தசைகள் பாதிப்பு, இறப்பு கூட நேரிடலாம்.
கருவுற்ற பெண்கள் குடிக்க வேண்டாம். குழந்தையை பாதிக்க வாய்ப்புள்ளது.
இதன் அசிட்டிக் தன்மை பற்களை அரிக்க வாய்ப்புள்ளது.
MOST READ: உங்க ஆணுறுப்பு நார்மலா இருக்கானு தெரிஞ்சிக்கணுமா? இப்படி செஞ்சு பாருங்க...

ரெட் வொயின் நன்மைகள்
இதய ஆரோக்கியம்
பாலிபினோல், ரெஸ்வரட்டோல் மற்றும் க்யூர்சிட்டின் போன்றவை இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆந்த்ரோஸ்கிலாரிஸ் வராமல் தடுக்கிறது. சரியான அளவு எடுத்து வந்தால் இதய செயல் பிரச்சினை, ரெஸ்வரட்டோல் பக்க வாதத்தால் ஏற்படும் இதய செல்கள் திசுக்கள் பாதுகாப்பு போன்றவற்றிற்கு உதவுகிறது. இரத்த தட்டுகள் உற்பத்தியை தடுத்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது

டயாபெட்டீஸ்
ரெட் வொயின் குடிக்கும் போது சிறுகுடலில் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு சிறந்தது.

கொலஸ்ட்ரால் சமநிலை
ரெட் வொயின் சாப்பிடும் போது ஹெச்டிஎல் (நல்ல) கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து எல்டிஎல் (கெட்ட) கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இதனால் இதய நோய்கள் வராது.

உடல் பருமனை எதிர்த்தல்
ரெட் வொயினில் ரெஸ்வரட்டோல் போலவே பைசிடனட்டோல் அமைந்துள்ளது. இது உடல் பருமன், அதிக உடல் எடை போன்றவற்றை தடுக்கிறது.

செல்களின் பெருக்கம்
தானாகவே செல்கள் பெருகுதல், செல்கள் பிறழ்ச்சி போன்றவற்றால் ஏற்படும் புற்று நோய்கள், ஆட்டோஇம்பினியூ நோய்கள், நிமோட்டிக் ஆர்த்ரிட்டீஸ், இதய நோய்கள், நரம்பு நோய்கள் போன்றவை வராமல் காக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதற்கு உதவுகிறது.
இது போக வயதாகும் போது ஏற்படும் மூட்டு வலி போன்றவற்றையும் போக்குகிறது.

தீமைகள்
இதை அதிகமாக குடிக்கும் போது நோயெதிர்ப்பு சக்தி குறைந்து நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரெட் வொயின் சுத்திகரிப்பு முறைகளால் அடிவயிற்று வலி, வயிற்று போக்கு, ஆஸ்துமா ஏற்படும்.
நாள்பட்ட குடிப்பழக்கம் உடலுறுப்புகளை பாதிக்கும்.

எது ஆரோக்கியம்?
ஆல்கஹால், பீருக்கு பதிலாக வொயின் சிறந்தது. மேற்கண்ட தகவல்கள் படி ஊட்டச்சத்து அளவுகளிலும், நன்மைகளிலும் ரெட் வொயின் சிறந்தது. வொயிட் வொயினால் உங்களுக்கு அதிகமான நன்மைகள் கிடையாது. ரெட் வொயினின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு வொயிட் வொயினை விட சிறந்தது. ரெட் வொயினில் உள்ள பாலிபினோல்கள் வயதாகுவதை தடுக்கிறது.
வொயிட் வொயினில் இது இல்லை. கலோரி அடிப்படையிலும் ரெட் வொயின் 127 கலோரிகள், வொயிட் வொயின் - 121 மட்டுமே. ரெட் வொயினில் வொயிட் வொயினில் இல்லாத அளவுக்கு சிலிக்கான் உள்ளது. இது எலும்பு வலிமைக்கு சிறந்தது. ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் காக்கிறது.
MOST READ: வெறும் கிவி பழத்த வெச்சு எப்படி எடையை வேகமாக குறைக்கலாம்? ட்ரை பண்ணுங்க...

அதிக குடிப்பழக்கம்
ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ரெட் வொயின் போதுமானது. அதீத குடிப்பழக்கம் நியூரோடாக்ஸின் என்ற நச்சை உருவாக்கி மூளை மற்றும் இதயத்தை பாதிக்கும். இறப்பு கூட நேரிடலாம். ஏன் மார்பக புற்று நோய் வரும் அபாயம் இருக்கிறது என்று தற்போதைய ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் வொயினுக்கு நிறத்தை மணத்தை கொடுக்க பயன்படுத்தப்படும் சல்பைட்டுகள் சரும அழற்சி, அடிவயிற்று வலி, வயிற்று போக்கு, சுவாச பிரச்சினை, அனபைலேசிஸ் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து அளவோடு எடுங்கள். வளமோடு வாழுங்கள்.