For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா? அது நல்லதா, கெட்டதா?

மயிர் கூச்செறிவது அல்லது புல்லரிப்பது என்பது அனைவருக்குமே ஏற்படும் ஒரு அன்றாட நிகழ்வாகும்.

|

மயிர் கூச்செறிவது அல்லது புல்லரிப்பது என்பது அனைவருக்குமே ஏற்படும் ஒரு அன்றாட நிகழ்வாகும். அதிகமான குளிர், மகிழ்ச்சியான சூழ்நிலைகள் போன்ற தருணங்களில் கை, கால்களில் இருக்கும் முடிகள் அனைத்தும் திடீரென எழுந்து நிற்கும். சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் இது அனைவருக்கும் பிடித்த ஒரு உணர்வாகும்.

When do you get Goose bumps?

தினமும் நமக்கு இந்த அனுபவம் ஏற்பட்டாலும் அது ஏன் ஏற்படுகிறது? அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை. எந்தெந்த தருணத்தில் எல்லாம் இந்த அனுபவம் ஏற்படும் மனிதர்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த பதிவில் பதிலை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பாடும்போது

பாடும்போது

குளிராக இருக்கும் நேரம் தவிர்த்து பிடித்த பாடலை பாடும்போதும், கேட்கும்போதும் புல்லரிப்பு ஏற்படுவதை நாம் உணர்ந்திருப்போம். புல்லரிப்பு ஏற்படுவது நமக்கு அந்த பாடலை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பதின் அடையாளமாகும். பொதுவாக பலருக்கும் தேசிய கீதத்தை கேட்கும்போது புல்லரிப்பதாக ஆய்வில் கூறுகிறார்கள்.

அறிவியல் காரணம்

அறிவியல் காரணம்

புல்லரிப்பு என்பது சருமத்தில் ஏற்படும் சிறு சிறு கொப்புங்கள் போல காட்சியளிக்கும். நாம் மகிழ்ச்சியாக, துன்பமாக, குளிராக உணரும்போது நமது மூலை உற்பத்தி செய்யும் ஹார்மோன் நமது முடியின் துளைகளை எழ செய்கிறது. இது உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாகும்.

உணர்ச்சிகள்

உணர்ச்சிகள்

விஞ்ஞானத்தின் படி புல்லரிப்பு ஏற்பட உணர்ச்சிகள்தான் முக்கியமான காரணமாக உள்ளது. பல உணர்ச்சிகள் இதனுடன் தொடர்புடையதாகும். குறிப்பாக பயம் ஏற்படும்போது மயிர் கூச்செரிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி ஏக்கம், மகிழ்ச்சி, பிரமிப்பு, ஆச்சரியம், பாலியல் உணர்ச்சி என இதற்கு பல உணர்ச்சிகள் காரணமாக இருக்கிறது.

MOST READ:எந்த காரியத்தையும் தொடங்கும் முன் இந்த செயல்களை செய்தால் அது வெற்றியாக முடியும் என்கிறார் சாணக்கியர்

 மற்ற உயிரினங்கள்

மற்ற உயிரினங்கள்

மனிதர்கள் மட்டுமின்றி மற்ற உயிரினங்களுக்கும் இந்த உணர்வு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக முள்ளம்பன்றி, கடல்வாழ் பாலூட்டிகள் போன்றவை அதற்கான சிறந்த உதாரணங்களாகும்.

பூனைகள்

பூனைகள்

நீங்கள் நன்கு கவனித்து பார்த்தால் பூனைகள் சண்டையிடும் போதும், பயத்தில் இருக்கும் போதும் அவற்றின் முடி அனைத்தும் நமக்கு இருப்பது போல தூக்கி கொண்டு நிற்கும். இதுவும் புல்லரிப்பதை போன்ற உணர்வுதான்.

 குளிர்

குளிர்

முடி அதிகமாக இருக்கும் மிருகங்கள் அனைத்துமே குளிர் அதிகமாக இருக்கும்போது இவ்வாறு தங்கள் முடியை தூக்கிக்கொள்ளும். அவை நினைத்தால் கூட இதனை தடுக்க இயலாது. இவரை அவற்றை கடுமையான குளிரிலிருந்து பாதுகாக்கும்.

MOST READ:தூங்குவதற்கு முன் குளித்தால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

எதிரிகளை உணர

எதிரிகளை உணர

புல்லரிப்பது எதிரிகளின் வருகையை உணர்த்துவதாகவும் இருக்கிறது. இது அவர்களின் உயிரை காப்பாற்றும் ஒரு எச்சரிக்கை உணர்வாக இருக்கிறது. சிம்பான்சி, எலி மற்றும் வேறு சிலவகை குரங்குகளுக்கு எதிரிகள் வரும் முன்னரே இந்த உணர்வு வந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

When do you get Goose bumps?

Check out in which situations we can get goosebumps.
Story first published: Saturday, June 1, 2019, 15:11 [IST]
Desktop Bottom Promotion