For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விந்தணு குறைபாடு முதல் கல்லீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும் வாட்டர் பாட்டில்கள்.. இனியாவது ஜாக்கிரதை

பிளாஸ்டிக் நமது சுற்றுசூழலுக்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்திற்கும் பல தீங்குகளை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில் இப்பொழுது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

|

இன்றைய காலக்கட்டத்தில் எவராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட ஒரு ஆரோக்கியமற்ற பழக்கமென்றால் அது பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதுதான். தண்ணீர் என்பது அனைத்து உயிர்களும் உயிர்வாழ் அடிப்படையான தேவையாகும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

Does Drinking Water in Plastic Bottles Leads To Cancer?

பிளாஸ்டிக் நமது சுற்றுசூழலுக்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்திற்கும் பல தீங்குகளை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில் இப்பொழுது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. முடிந்தவரை அதனை தவிர்ப்பதே நல்லது, குறிப்பாக கோடைகாலங்களில் வெளிப்புறங்களில் வைக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது உங்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பிளாஸ்டிக் மற்றும் சோடா நிரப்பப்பட்ட பாட்டில்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும்போது அவை சில நச்சுப்பொருள்களையும் மற்றும் பிஷபெனால் ஏ(BPA) என்னும் பொருளையும் வெளியிடுகிறது. BPA உங்கள் இரத்தத்தில் அதிகம் கலக்கும் போது அது உங்கள் ஹார்மோனில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் இதய கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, அல்சர் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஏன் பாட்டில் குடிநீர்?

ஏன் பாட்டில் குடிநீர்?

90 களில் சாதாரண நிலையில் இருந்த பாட்டில் நீர் வியாபாரம் இப்பொழுது உலகம் முழுவதும் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. பொதுவாக பாட்டில் குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை விட சுகாதாரமானதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கான எந்த சான்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆய்வுகளின் படி நான்கில் ஒரு பாட்டில் குழாய் நீரைத்தான் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீங்கை ஏற்படுத்தும் கெமிக்கல்கள்

தீங்கை ஏற்படுத்தும் கெமிக்கல்கள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் பல கெமிக்கல்களால் உருவாக்கப்பட்டவை அவற்றில் சில உங்கள் ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கிறது. அதில் முக்கியமானவை BPA மற்றும் பெத்தலேட்ஸ் ஆகும். பாட்டில்கள் வெப்பமடையும் போதும், பலசாகும் போதும் அவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருட்களாக மாறும். பாட்டில்களில் இருக்கும் குறியீடுகளை வைத்து அவை எந்தமாதிரியான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டவை என்று தெரிந்து கொள்ளலலாம்.

MOST READ:கடக ராசியில் பிறந்தவர்களிடம் இருக்கும் மோசமான குணங்கள் என்னென்ன தெரியுமா?

நீரே ஆபத்தாகிறது

நீரே ஆபத்தாகிறது

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் இரசாயனங்கள் மட்டுமின்றி பிளாஸ்டிக் பாட்டிலில் இருக்கும் தண்ணீரே ஆபத்தானதாக மாற வாய்ப்புள்ளது. உண்மைதான், பாட்டிலில் சேமிக்கப்படும் தண்ணீர் நாளடைவில் ஃப்ளுரைடு, ஆர்சனிக் மற்றும் அலுமினியம் போன்ற மனிதர்களுக்கு கேடுவிளைவிக்க கூடிய நச்சுப்பொருட்களை வெளியிடக்கூடும். பிளாஸ்டிக் பாட்டிலில் தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உங்களை நீங்கள் மெல்ல விஷம் வைத்து கொள்வது போன்றதாகும்.

வைட்டமின் தண்ணீர் பாட்டில்கள்

வைட்டமின் தண்ணீர் பாட்டில்கள்

சமீப காலமாக ஆரோக்கியத்தை அதிகரிக்க செறிவூட்டப்பட்ட தண்ணீர் என்று சில தண்ணீர் பாட்டில்கள் சந்தையில் கிடைக்கிறது. நிறுவன உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கவர வைட்டமின் நிறைந்த தண்ணீரை விற்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் இவையும் நமக்கு தீங்கை மட்டுமே ஏற்படுத்தக்கூடும். இதனால் இரத்தத்தில் ப்ராக்ட்டோசின் அளவு அதிகரிக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும்

நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும்

நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும், நோயில் விழாமல் இருக்கவும் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் இரசாயனங்கள் நீரில் கலக்கும்போது அது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

புற்றுநோய் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை

புற்றுநோய் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் பெத்தலேட் என்னும் இரசாயனம் நீரில் கலக்கிறது. அதனை குடிக்கும் போது உங்கள் இரத்தத்தில் அது கலப்பதால் உங்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் இது ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் குறைக்கும்.

MOST READ:உங்கள் வீட்டில் இத்தனை விநாயகர் சிலைகள் இருக்கிறதா? உங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படலாம் ஜாக்கிரதை...!

குப்பைகளை உருவாக்கும்

குப்பைகளை உருவாக்கும்

இன்று உலகை அச்சுறுத்தும் மாபெரும் ஆயுதமாக பிளாஸ்டிக் மாறிவிட்டது. இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்யலாம் என்றாலும் பொதுமக்கள் யாரும் அதனை செய்வதில்லை. ஆய்வுகளின் படி ஆறில் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மட்டுமே மறுசுழற்சிக்கு செல்கிறது. மீதமுள்ள பாட்டில்கள் குப்பையாக பூமிக்கு செல்கிறது. மக்காத இந்த பாட்டில்கள் நம்முடைய சுற்றுசூழலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Drinking Water in Plastic Bottles Leads To Cancer?

Do you know a presence of chemicals called phthalates in plastic bottles leads to liver cancer.
Desktop Bottom Promotion