For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் காலையில் 8 நிமிடம் இதை செய்யுங்க... அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு..!

|

பெரும்பாலும் காலை நேரத்தில் செய்ய கூடிய செயல்கள் அனைத்துமே நமது உடல் நலத்திற்கு உதவ கூடிய வகையில் இருக்கும். காலையில் எழுந்து கொள்ளும் முறை முதல் படிக்கும் முறை வரை இதில் அடங்கும். காலையில் சில முக்கிய வேலைகளை செய்து வந்தால் அவை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தினமும் காலையில் 8 நிமிடம் இதை செய்யுங்க... அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு!

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் அதற்கான பலனை அவ்வப்போது தந்து கொண்டே இருக்கும். அதே போல தான் காலையில் உடல் எடை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் பல பயிற்சிகளை செய்து வந்தால் அதனால் நிச்சயம் பல்வேறு பயன்கள் கிடைக்கும்.

அதுவும் இந்த பதிவில் கூறும் பயிற்சிகளையும் தினமும் காலையில் 8 நிமிடம் வரை செய்து வந்தால் நீங்கள் நினைக்கும் படி உடல் எடையை குறைத்து விட முடியும். இந்த 7 வகையான பயிற்சிகளை எப்படி முறைப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை நிலை

குழந்தை நிலை

இந்த பயிற்சியை குழந்தையை போன்ற நிலையில் இருந்து செய்ய வேண்டும். அதற்கு முதலில் குழந்தை 4 கால்களில் நடப்பது போன்ற நிலையில் உட்கார வேண்டும்.

அடுத்து உடலை மட்டும் அப்படியே படுத்த நிலையில் வைத்து கொண்டு இடது புறம் திரும்பவும். இந்த நிலையில் 30 நொடிகள் வரை இருக்க வேண்டும். இதே போன்று வலது புறமும் செய்து வர வேண்டும்.

பயன்கள்

பயன்கள்

இந்த பயிற்சியை தினமும் காலையில் செய்து வருவதால் இரத்த ஓட்டம் சீராக மற்ற உறுப்புகளுக்கு செல்லும். மேலும், தசை வலி, மூட்டு வலி, எலும்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்றவை குணமாகும். கூடவே, நுரையீரலின் செயல்பாடும் சீராகும்.

MOST READ: இதே போல 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாகும்?

கழுத்து பகுதி

கழுத்து பகுதி

தினமும் காலையில் எழுந்து கழுத்து பகுதியிலும் பயிற்சி செய்தல் வேண்டும். அதற்கு முதலில் தரையில் அமர்ந்து இடது கையை இடதுபக்கமாக நீட்டி, வலது கையை கொண்டு தலையை வலது பக்கம் மெல்ல இழுக்கவும். இவ்வாறு மறுபுறத்தில் செய்ய வேண்டும். இதனால் கழுத்து, தோல் பட்டை, மணிக்கட்டு உறுதி பெறும்.

ஒட்டக நிலை

ஒட்டக நிலை

இது மிகவும் எளிய பயிற்சி முறையாகும். முட்டி போடுவது போன்ற நிலையில் இருந்து கொண்டு மெல்ல உடலை பின்னோக்கி தள்ளவும். அப்படியே இரு கைகள் கால்களை தொட வேண்டும். இந்த நிலையில் 60 நொடிகள் வரை இருக்கவும். இதை மெல்லமாக மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் இடுப்பு பகுதி, முதுகுப் பகுதி கை, கால் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வலி குணமாகும்.

பிறை நிலா

பிறை நிலா

இது சற்று ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். இந்த நிலையை செய்ய முதலில் தரையை தொடும் படியான நிலையில் இருத்தல் வேண்டும்.

அடுத்து வலது கையை மட்டும் தரையில் படும்படி செய்தல் வேண்டும். இந்நிலையில் இடது கையையும் இடது காலையும் மேலே தூக்க வேண்டும். 30 நிமிடம் வரை இந்நிலையில் இருத்தல் வேண்டும்.

பயன்கள்

பயன்கள்

இந்த பயிற்சியை செய்து வருவதால் முழு உடலுக்கும் நன்மை கிடைக்கும். முதுகு வலி, மன அழுத்தம், பயம், தடுமாற்றம், போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டு விடலாம். அத்துடன் உடலில் உள்ள வலிகள் அனைத்துமே பறந்து விடும்.

MOST READ: தினமும் குட்டி தூக்கம் போடுவதால் இப்படிப்பட்ட பயங்கர நோய்கள் உங்களுக்கு வராதாம்..!

முக்கோண வடிவம்

முக்கோண வடிவம்

உடலை முக்கோண வடிவில் வைத்து கொள்வதே இந்த நிலையின் அர்த்தமாகும். இதற்கு முதலில் கால்களை அகற்றி வைத்து கொள்ள வேண்டும்.

அடுத்து கால்களையும் உடலையும் முக்கோண வடிவில் வைத்து கொள்ளவும். அதன் பின் இடது காலை முன்னோக்கி வைத்து, வலது கையை மேல் நோக்கி தூக்கவும்.

பயன்கள்

பயன்கள்

இந்நிலையில் வலது-இடது கைகள் மேலும் கீழுமாக நேராக இருத்தல் வேண்டும். இந்த பயிற்சி நிலையில் 30 நொடிகள் வரை இருப்பது அவசியம்.

தினமும் காலையில் இந்த பயிற்சியை செய்து வருவதால் செரிமான கோளாறுகள், தசை பிடிப்பு, முதுகு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து காத்து கொள்ளலாம்.

பின்னி பிணைதல்

பின்னி பிணைதல்

இந்த பயிற்சியை செய்ய முதலில் சம்மன நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அடுத்து இடது காலை வலது காலின் மீதும் வலது காலை இடது காலின் மீதும் வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு உடலை நேராக வைத்து கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக மேல் நோக்கி பின்னி பிணைந்து கொள்ள வேண்டும்.

பயன்கள்

பயன்கள்

இந்த பயிற்சியானது நம் முன்னோர்கள் பல காலமாக கடைபிடித்து வந்த பயிற்சியாகும். இதனை செய்து வருவதால் மன அழுத்தம் குறைந்து, நிம்மதியான வாழ்வை மேற்கொள்ளலாம். மேலும், புத்தி கூர்மையை அதிகரிக்கவும் இந்த பயிற்சியானது உதவும்.

MOST READ: தொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா? அப்போ இந்த பயிற்சியை தினமும் செய்தாலே போதும்!

மேற்சொன்ன பயிற்சிகளை தினமும் காலையில் 8 நிமிடம் செய்து வந்தால் தொப்பை முதல் உடல் எடை வரை தீர்வு தந்து விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Doing These Stretches for 8 Minutes in the Morning

Here we listed some of the stretches to do in the morning for 8 minutes and see the benefits
Desktop Bottom Promotion