For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா?

தண்ணீர் குடிப்பது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கினாலும் சரியான முறையில் தண்ணீர் குடிப்பது அதன் பலனை அதிகரிக்கும்.

|

மனிதர்கள் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று தண்ணீர் ஆகும். தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினத்தாலும் உயிர்வாழ முடியாது. ஒரு சராசரி மனிதன் ஆரோக்கியாமாக வாழ ஒருநாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். ஒருவேளை நீங்கள் அதனை செய்யும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் இன்றே அதனை தொடங்கிவிடுங்கள்.

Ayurvedic Tips to Drink Water

தண்ணீர் குடிப்பது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கினாலும் சரியான முறையில் தண்ணீர் குடிப்பது அதன் பலனை அதிகரிக்கும். அதன்படி ஆயுர்வேதத்தில் தண்ணீரை முறையாக குடிப்பதற்கு சில குறிப்புகள் உள்ளது. இந்த பதிவில் தண்ணீரை எப்படி குடிக்க வேண்டுமென்று ஆயுர்வேதம் கூறும் வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உட்காந்து தண்ணீர் குடிக்கவும்

உட்காந்து தண்ணீர் குடிக்கவும்

ஆயுர்வேதத்தின் படி நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை விட உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிப்பது நல்லது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது அது உங்கள் உடலில் திரவங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இதனால் உங்களுக்கு மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிக்கும் போது உங்கள் தசைகளும், நரம்புகளும் மிகவும் நன்கு செயல்படும். இதனால் உணவும் மற்ற திரவங்களும் எளிதில் ஜீரணமடைகிறது. மேலும் இதன்மூலம் உங்களின் சிறுநீரக செயல்பாடும் நன்றாக இருக்கும்.

 ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்

ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்

அதிகளவு தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பதை தவிர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பதற்கு இடையில் இடைவெளி விட்டு, மூச்சு விட்டு குடிக்கவும். சாப்பிடும் போதும் இதையே கடைபிடியுங்கள். ஆயுர்வேதத்தின் படி நமது உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் என்று மொத்தம் மூன்று தோஷங்கள் உள்ளது. இவ்வாறு தண்ணீர் குடிப்பது உங்களை வேகமாக எடைகுறைக்க உதவும்.

அறை வெப்பநிலை தண்ணீரை குடிக்கவும்

அறை வெப்பநிலை தண்ணீரை குடிக்கவும்

குளிர்ந்த நீரை குடிப்பதை தவிருங்கள், ஏனெனில் இது செரிமான பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த நீர் உங்கள் உடலின் பல பாகங்களுக்கு இரத்தம் செல்வதை தடுக்கிறது இதனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது செரிமானம், வளர்ச்சிதை மாற்றம், எடை குறைப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மேலும் இளஞ்சூடான நீர் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்கும்.

MOST READ:இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் அடுத்தவர்களின் விஷயங்களில் மூக்கை நுழைத்து கொண்டே இருப்பார்கள்

 தாகமாக இருக்கும்போது மட்டும் தண்ணீர் குடிக்கவும்

தாகமாக இருக்கும்போது மட்டும் தண்ணீர் குடிக்கவும்

உங்கள் உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது உங்கள் உடல் தானாக சிக்னல் அனுப்பும். ஆயுர்வேதத்தின் படி நீங்கள் தாகமாக இருக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரியானது எனவே ஒரே அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறமுடியாது. நமது உடலால் அளவிற்கு அதிகமான நீரை ஏற்றுக்கொள்ள இயலாது. அதிகளவு தண்ணீர் குடிப்பதே பல ஆபத்துகளை உண்டாக்கும். எனவே தாகம் எடுக்கும்போது மட்டும் போதுமான அளவு நீர் குடியுங்கள்.

தண்ணீர் தேவைப்படும் அறிகுறிகளை உணர்ந்து கொள்ளுங்கள்

தண்ணீர் தேவைப்படும் அறிகுறிகளை உணர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் உடல் உங்களுக்கு தண்ணீர் வேண்டுமென்று அனுப்பும் அறிகுறிகளை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சிறுநீரின் நிறம் உங்களுக்கு தண்ணீர் வேண்டுவதற்கான அறிகுறியாகும். உங்கள் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உங்கள் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம். உங்கள் உதடுகள் வறண்டு போவதன் உங்கள் உடலில் நீர் பற்றாக்குறை இருப்பதன் அறிகுறிதான்.

காலையில் முதல் வேலையாக தண்ணீர் குடியுங்கள்

காலையில் முதல் வேலையாக தண்ணீர் குடியுங்கள்

காலை நேரத்தில் முதல் வேலையாக நீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கமென ஆயுர்வேதம் கூறுகிறது. இது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடும். காலை நேரத்தில் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதுடன் உங்கள் குடலையும் சுத்தம் செய்கிறது.

MOST READ:கடவுளாகவே இருந்தாலும் இந்த தவறு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்...என்ன தவறு தெரியுமா

வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

ஆயுர்வேதத்தின் படி வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இதில் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் அனைத்து தோஷங்களையம் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும். செம்பு பாத்திரத்தில் நீர் குடிக்கும் போது அதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதுடன் உங்கள் குடல் இயக்கங்களை சீராக்குவதுடன் செரிமானத்தை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Tips to Drink Water

These Ayurvedic tips, to drink water helps you to get more benefits from the water.
Story first published: Wednesday, June 12, 2019, 17:48 [IST]
Desktop Bottom Promotion