உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கா? உடனே இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கும். இத்தகையவர்கள் சமையலறை செல்லும் போதெல்லாம் சிறிது அரிசியை வாயில் போட்டு மெல்லுவார்கள். அரிசியை வேக வைக்காமல் சாப்பிடும் போது, அதன் சுவை நன்றாக இருக்கும் தான். மேலும் பலர் அரிசியை வேக வைத்து சாப்பிட்டாலும், வேக வைக்காமல் சாப்பிட்டாலும், அதில் உள்ள சத்துக்கள் கட்டாயம் கிடைக்கும் என்று நினைக்கலாம்.

சில வகை தானியங்களை வேக வைக்காமல் சாப்பிட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அரிசி அப்படி இல்லை. அரிசியை வேக வைக்காமல் தொடர்ந்து சாப்பிடக்கூடாது. இதற்கு வேக வைக்காத அரிசியில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம்.

இங்கு அரிசியை வேக வைக்காமல் சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை அனுபவிக்கக்கூடும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து இனிமேல் உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

மற்ற தானியங்கள் மற்றும் காய்கறிகளை விட அரிசியில் செல்லுலோஸ் என்னும் பொருள் உள்ளது. இது தானியங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் மனித செரிமான மண்டலத்தினால் இந்த செல்லுலோஸை முழுமையாக செரிக்க முடியாது. ஆகவே அரிசியை வேக வைக்காமல் சாப்பிடும் போது, அது விரைவில் செரிமானமாகாமல் அஜீரண கோளாறை உண்டாக்கும்.

பாக்டீரியா

பாக்டீரியா

ஏன் அரிசியை வேக வைக்காமல் சாப்பிடக்கூடாது என்றால், இது பேசில்லஸ் சீரஸ் என்னும் பாக்டீரியாவால் சூழப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா உடலினுள் செல்லும் போது, உடலினுள் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். இதன் விளைவாக வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரும்பாலும், இம்மாதிரியான விளைவு அரிசி சாப்பிட்ட 24 மணிநேரத்தில் அனுபவிக்க நேரிடும்.

லெசித்தின்

லெசித்தின்

லெசித்தின் என்பது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி. இது மனித உடலினுள் செல்லும் போது, குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அரிசியை வேக வைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள லெசித்தின் என்னும் பூச்சிக்கொல்லி அழிக்கப்பட்டு, அந்த உணவை ஆரோக்கியமாக்குகிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

அரிசியில் உள்ள லெசித்தின் என்னும் பூச்சிக் கொல்லி உடலினுள் செல்லும் போது, செரிமான செல்களை அழித்துவிடுவதோடு, இது அதிகமாக உடலினுள் சேரும் போது, குடல் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

பிகா

பிகா

பிகா என்பது ஒரு உணவு சீர்குலைவு பிரச்சனையாகும். இது ஆரோக்கியமற்ற மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்ணத் தூண்டும். பெரும்பாலும் இது சாக்பீஸ், கிரையான்ஸ், மாவு, அரிசி, சர்க்கரை, உப்பு போன்றவற்றால் வரக்கூடியது. பெரும்பாலும் குழந்தைகள் தான் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையானது உடலில் கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவற்றில் தொடர்ந்து குறைபாடு ஏற்படும் போது இந்த நிலை வரும்.

குறிப்பு

குறிப்பு

ஒருவருக்கு தொடர்ந்து வேக வைக்காத அரிசி அல்லது பச்சை உணவுகள் சாப்பிடும் ஆவல் அதிகமானால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். இதனால் வேக வைக்காத அரிசியால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனை, தீவிரமாகி மோசமாவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is Eating Raw Rice Bad For You

Some grains may be eaten raw without causing alarm. However, there are also those that are simply not suited for consumption uncooked, and rice is one of them. Here are some reasons why is eating raw rice bad for you. Read on...