Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வெறும் 4 பாதாம் தினமும் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா..?
நாம் சாப்பிட கூடிய ஒவ்வொரு உணவுகளுக்கு பின்னும் பல வித அறிவியல் பூர்வ தன்மைகள் உள்ளன. ஒரு சில உணவுகள் உடலுக்கு நன்மையை தர கூடிவையாக இருக்கும். ஒரு சில உணவுகள் உடல் நலத்தை கெடுப்பவையாக இருக்கும். இவற்றில் உடல் நலத்திற்கு நன்மை தர கூடிய உணவுகளில் இந்த பாதாமும் அடங்கும். நீங்கள்.

தினமும் வெறும் 4 பாதாம் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கும். அத்துடன் பல வகையான வியாதிகளில் இருந்தும் இவை விடுவிக்க செய்யும். தினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதை இந்த பதிவில் அறிவோம்.

மகத்துவம் பெற்ற பாதாம்..!
பாதாமில் பல வகையான நன்மைகள் உள்ளன. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வை தரும். 4 பாதாமை தினமும் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது.

கொலஸ்ட்ரால் குறைய
தினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் முதல் பயன் உங்களின் கொலஸ்ட்ரால் குறைவதே. குறிப்பாக ரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இவை குறைய வைக்கிறது. மேலும், உடல் பருமனையும் கூடாமலும் இந்த பாதாம் பார்த்து கொள்கிறது.

முக சுருக்கங்களை போக்க
நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருப்பது தான். ஆனால், உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அண்ட் ஆசையை நிராசையாக மாற்றுகிறதா...? இனி உங்களின் முக சுருக்கங்களை போக்குவதற்கு இந்த 4 பாதாம்கள் போதும். இதில் உள்ள மக்னெஸ் சுருக்கங்களை மறைய வைக்கிறது.

பச்சையாகவா..? வருத்ததா..?
பாதாமில் எது சிறந்தது என்பதே பலரின் கேள்வியாக இருக்கும். குறிப்பாக பாதாமை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு அதிக நலனை தருமா..? அல்லது வறுத்து சாப்பிட்டால் அதிக பலனை தருமா..? என்பது பலரின் கேள்வியாக உள்ளது. உண்மையில் பாதாமை அப்படியே வறுத்த பாதாமை விட பச்சையாக சாப்பிட்டால் அதிக பயன்கள் கிடைக்குமாம். மேலும், நீரில் ஊற வைத்த பாதாமையும் சாப்பிடுவது சிறந்தது.

இதய பாதுகாப்பிற்கு
ஆரோக்கியமான இதயம் வேண்டுமென்றால் அதற்கு ஏராளமான வித்தைகளை எல்லாம் செய்ய வேண்டியதில்லை. மாறாக 4 பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால் நன்று. பாதாமில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், மெக்னீசியம், காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டத்தை வைத்து, இதய நோய்களில் இருந்து காக்கும்.

உடல் எடை குறைக்க
உடல் பருமனால் இன்று பலர் பாதிக்கபட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு எளிய வழியாக இந்த பாதாம் இருக்கிறது. 4 பாதாமை தினமும் சாப்பிடுவதால் இவை மிக குறைந்த அளவிலான கார்போஹைட்ரேடுகளை எடுத்து கொள்ளும். எனவே, உடல் எடை கூடும் பிரச்சினையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

மூளை சுறுசுறுப்பிற்கு
எப்போ பார்த்தாலும் சோர்வாகவே உள்ளீர்களா..? உங்களுக்கென்று ஒரு அருமையான வைத்தியம் உள்ளது. தினமும் 4 பாதாம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யுமாம். ஏனெனில் வைட்டமின் ஈ இதில் அதிகம் உள்ளதால் மூளையின் செயல்திறனை இவை கூட்டுமாம்.

முடி அழகாக வளர
முடி கொட்டும் பிரச்சினையில் இருந்து பாதாம் உங்களை காப்பாற்றுகிறது. இதில் உள்ள வைட்டமின்களும் தாதுக்களும் முடியை வலுவுடன் வைத்து கொள்ளும். மேலும், முடியின் வளர்ச்சியை தூண்டி பொலிவான அடர்த்தியான முடியை தரும்.

வயிற்று பிரச்சினைகளுக்கு
செரிமான பிரச்சினை, வாயில் துர்நாற்றம், வயிற்று வலி போன்ற பிரச்சினையால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோருக்கு இந்த பாதாம் அற்புத மருந்தாக வேலை செய்கிறது. இதற்கு தினமும் 4 பாதாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். வயிற்று சம்பந்தமான அனைத்து வித கோளாறுகளுக்கும் தீர்வு கிடைத்து விடும்.

ஏன் தினமும் 4 பாதாம்..?
தினமும் 4 பாதாம் ஏன் சாப்பிட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் பாதாமில் பலவித ஊட்டச்சத்துக்களும் தாது பொருட்களும் நிறைந்துள்ளது தான். குறிப்பாக வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம், மக்னேசியம், பாஸ்பரஸ் என ஏராளமான சத்துக்கள் உள்ளன.

அளவுக்கு முக்கியம்..!
எப்போதும் எந்த ஒரு உணவை சாப்பிட்டாலும் அதற்கென்று போதுமான அளவு இருக்க வேண்டும். சுவையாக இருக்கிறது என்று சாப்பிட்டு கொண்டே இருந்தால் பிறகு ஆபத்து நமக்கு தான் ஏற்படும். எனவே, வெறும் தினமும் 4 பாதாம் சாப்பிடுவதே சிறந்தது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், மற்றவருடனும் பகிர்ந்து அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications
