ஆண்களே! உங்க விந்து நீர் போன்று உள்ளதா? அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள் இதோ!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுள் ஒன்று தான் நீர் போன்ற விந்து வெளிவருவது. சாதாரணமாக ஆண்களின் விந்து வெள்ளையாக, தெளிவாக, ஓரளவு கெட்டியாக இருக்கும். ஆண்களின் விந்து எவ்வளவு கெட்டியாக உள்ளதோ, அவ்வளவு விந்து செல்கள் அதில் உள்ளது என்று அர்த்தம். விந்து செல்கள் குறைவாக இருக்கும் போது தான், விந்து மிகவும் நீர் போன்று இருக்கும்.

Watery Sperm - Natural Ways To Improve The Quality Of Thin Semen

விந்து நீர் போன்று இருப்பதற்கு வயது, உடல் பருமன், சுய இன்பம் காணுதல், ஆரோக்கியமற்ற டயட், ஜிங்க் குறைபாடு, புகைப்பிடித்தல், அதிகளவு மது அருந்துதல் போன்றவை காரணங்களாகும். பொதுவாக ஒருவரது பாலியல் ஆரோக்கியம் மைய நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்டெராய்டு மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் ஆண்களின் உடல் மட்டுமின்றி பாலியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும்.

ஆண்கள் கவலைப்படும் நீர் போன்ற விந்துவின் அடர்த்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகளை நாடுவதற்கு பதிலாக, இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் விந்துவின் அடர்த்தி அதிகமாகும்.

இக்கட்டுரையில் நீர் போன்ற விந்துவின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

8-10 டேபிள் ஸ்பூன் முஸ்லி பவுடர் மற்றும் 8-10 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். தினமும் காலை உணவு உண்பதற்கு முன் 1/2 டீஸ்பூனை 1 டம்ளர் நீரில் கலந்து, தொடர்ந்து ஒரு மாதம் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், ஆணுறுப்பின் தசைகள் வலிமையாவதோடு, விந்துவின் அடர்த்தியும் அதிகரிக்கும். இந்த முஸ்லி பவுடர் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

வழி #2

வழி #2

7 பாதாம் மற்றும் 2 உலர்ந்த பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் பாதாம், பேரிச்சம் பழம், 4 ஏலக்காய், 5 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 3-4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் இதை சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதனால் விந்துவின் அடர்த்தி அதிகரிப்பதோடு, ஆணுறுப்பின் அளவும் பெரிதாகும்.

வழி #3

வழி #3

1/2 லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 250 கிராம் தேன் சேர்த்து, தண்ணீர் நன்கு வற்றும் வரை சூடேற்றி, எஞ்சியதில் 2 டீஸ்பூன் ஜாவித்ரி பவுடர், 2 டீஸ்பூன் கிராம்பு பவுடர், 2 டேபிள் ஸ்பூன் குங்குமப் பூ சேர்த்து கலந்து, அதோடு 2-3 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னும், இரவு படுக்கும் முன்பும், ஒரு டம்ளர் பாலில் 1/2 டீஸ்பூன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் விந்துவின் அடர்த்தி அதிகரிக்கும்.

வழி #4

வழி #4

நன்கு கனிந்த ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, அதைச் சுற்றி கிராம்பை குத்தி, 1 வாரம் அப்படியே வைத்து, பின் அந்த கிராம்பை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4-6 கிராம்பை அதிகாலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து உட்கொண்டு வர, விந்து அடர்த்தியாகும்.

வழி #5

வழி #5

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3-4 ஆப்பிளை உட்கொண்டு, ஒரு டம்ளர் பாலைக் குடித்து வந்தால், 1-2 மாதத்தில் நீர் போன்ற விந்து பிரச்சனை நீங்கி, விந்து அடர்த்தியாகும்.

வழி #6

வழி #6

தினமும் காலை பாதாம் மில்க் ஷேக்கை குடித்த பின் ஒரு வாழைப்பழத்தை மசித்து 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வழி #7

வழி #7

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வருவதன் மூலம், ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு தசைகள் வலிமையாவதோடு, விந்துவின் அடர்த்தியும் அதிகரிக்கும்.

வழி #8

வழி #8

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளான மீன்கள், ஆளி விதை, அவகேடோ, வால் நட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் விந்துவின் அடர்த்தி அதிகரிப்பதோடு, பாலுணர்ச்சி மற்றும் ஸ்டாமினா அதிகரித்து உறவின் போது துணையை திருப்திப்படுத்த முடியும்.

வழி #9

வழி #9

வைட்டமின் சி, ஈ மற்றும் ஜிங்க் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, விந்துவின் தரம் மற்றும் அடர்த்தி இயற்கையாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும்.

வழி #10

வழி #10

5-7 உலர்ந்த பேரிச்சம் பழத்தை (கர்ஜுரா) பாலில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் பாலுடன் அதை சாப்பிட வேண்டும். இதனால் அவற்றில் உள்ள சத்துக்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, உறவில் சிறப்பாக ஈடுபடவும், விந்துவின் அடர்த்தியை அதிகரிக்கவும் செய்யும்.

வழி #11

வழி #11

ஆண்கள் மன அழுத்தத்தில் அதிகம் இருந்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் விந்துவின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் பழக்கங்களான யோகா, தியானம் போன்றவற்றில் தினமும் ஈடுபடுங்கள்.

வழி #12

வழி #12

ஆண்களுக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காமல் போனால், மூளையால் போதுமான அளவு செக்ஸ் ஹார்மோன்களை வெளியிடச் செய்து, விந்துவின் அடர்த்தியை அதிகரிக்க முடியாமல் போகும். எனவே விந்து அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், தினமும் 6-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

வழி #13

வழி #13

தினமும் சுயஇன்பம் காண்பதைத் தவிர்த்திடுங்கள். அளவுக்கு அதிகமாக சுய இன்பம் கண்டால், இனப்பெருக்க தசைகள் பலவீனமடைந்து, விந்துவின் தரம் குறைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு முறை விந்துவை வெளியேற்றும் போதும், அதிலிருந்து விந்து செல்களின் அளவு குறைந்து, விந்து நீர் போன்றாகும்.

வழி #14

வழி #14

புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே கைவிட வேண்டும். புகைப் பிடித்தால், இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, விந்து உற்பத்திக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடும். இதனால் விந்து அடர்த்தியும் குறையும்.

வழி #15

வழி #15

மிகவும் சூடான நீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆண்கள் மிகவும் சூடான நீரில் குளிக்கும் போது, விந்துவின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Watery Sperm - Natural Ways To Improve The Quality Of Thin Semen

Thin and watery semen is one of the major sexual problem of many males. Normal semen look likes a clear fluid and white, pearly liquid. This milky white fluid indicates the presence of sperm cells in the semen. Insufficient sperm count is one of the main causes behind thin and watery semen. Let's have a look on some ...
Story first published: Friday, January 5, 2018, 13:00 [IST]