For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லென்ஸ் உபயோகிக்க தொடங்கும் முன் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்

|

கண்கள்தான் நாம் உலகை பார்ப்பதற்கான திறவுகோல் ஆகும். " பெண்கள் நாட்டின் கண்கள்" என்று கூறுவார்கள், அதற்கு காரணம் நமக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நாட்டிற்கு பெண்கள் முக்கியம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் இரண்டையுமே பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதே உண்மை. கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துகொண்டிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக கண்ணாடி அணியும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் நமது மாறிப்போய்விட்ட ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களும், வாழ்க்கை முறையும்தான்.

Health

இரண்டு வயது குழந்தை கூட ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் இந்த காலத்தில் கண்ணாடி அணிவது என்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறை குழந்தைகள் பிறக்கும்போதே பார்வைக் குறைபாடுடன்தான் பிறப்பார்கள். பார்வை குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் அணிவது கண்ணாடி மற்றும் லென்ஸ்களைத்தான். கண்ணாடிகளால் பக்க விளைவுகள் எதுவும் இல்லையென்றாலும் லென்ஸ்கள் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். எனவே லென்ஸ் உபயோகப்படுத்த தொடங்கும்முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் இங்கே கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளிடையே லென்ஸ்

குழந்தைகளிடையே லென்ஸ்

இன்றைய அவசர உலகில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டிற்கு வந்தவுடன் குழந்தைகள் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன்களை தொலைக்காட்சிகளிலோ அல்லது ஸ்மார்ட் போனிலோ வைத்து அவர்களிடம் கொடுத்துவிடுகிறீர்கள். இதுதான் நீங்கள் செய்யும் முதல் மற்றும் பெரிய தவறாகும். விழித்திரை முழுதாக வளர்ந்திராத குழந்தையிடம் இதுபோன்ற சாதனங்களை கொடுக்கும்போது அது அவர்களின் கண்களை நேரடியாக பாதிக்கும். விளைவு மூன்று வயதிலேயே கண்ணாடி அணிய நேர்கிறது. சில பெற்றோர்கள் கண்ணாடிக்கு பதிலாக சிறுவயதிலியே குழந்தைகளுக்கு லென்ஸ்களை அணிவித்து விடுகிறார்கள்.

இளைஞர்களிடையே லென்ஸ்

இளைஞர்களிடையே லென்ஸ்

கல்லூரி செல்பவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை என பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வகையில் கண்சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சிலர் கண்ணாடி அணிவதை விரும்புவார்கள் சிலர் லென்ஸ் அணிவதை விரும்புவார்கள். வெகுசிலர் இரண்டையுமே உபயோகிப்பார்கள். இவர்களை தவிர்த்து மற்றொரு பிரிவினர் பார்வை குறைபாடுகள் இல்லாவிட்டாலும் கண்கள் அழகாய் தெரிய வேண்டும் என்பதற்காக பலவித லென்ஸ்களை உபயோகிப்பார்கள். இந்த பழக்கம் இப்போது நிறைய இளைஞர்களிடையே பரவி வருகிறது. அவ்வாறு லென்ஸ் அணிபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி லென்ஸ் அணிய தொடங்கும்போது நாளடைவில் அது அவர்களின் பார்வைத்திறனை பாதிக்க தொடங்கும்.

லென்ஸ் அணிய தொடங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை

கண் மருத்துவரை அணுகுதல்

கண் மருத்துவரை அணுகுதல்

லென்ஸ் அணிய தொடங்கும் முன் கண் மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் லென்ஸ்கள் விளையாட்டு பொருட்கள் அல்ல அவை உடலின் மிக முக்கிய உறுப்பில் செயல்பட போகும் செயற்கை சாதனமாகும். எனவே அதில் அதிகளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக கண் அழகிற்காக லென்ஸ் அணிய விரும்புவர்கள் அவற்றால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என மருத்துவர்க்ளிடம் சோதனை செய்துபார்த்து கொள்வது நல்லது. சிலருக்கு பொருத்தமற்ற லென்ஸ் அணியும்போது சில ஒவ்வாமைகள் ஏற்படலாம் எனவே அவற்றை தவிர்க்க மருத்துவரின் ஆலோசனை பெற்ற அவற்றை பயன்படுத்த தொடங்கவும்.

பராமரித்தல்

பராமரித்தல்

லென்ஸ் உபயோகப்படுத்தினால் மட்டும் போதாது அதனை பராமரிப்பதும் அவசியம். சீரான இடைவெளியில் அதற்கென தயாரிக்கப்பட்ட சுத்தப்படுத்தும் பொருட்களை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். உங்கள் வசதிக்கேற்ப வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சுத்தம் செய்தல் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். அடிக்கடி சுத்தப்படுத்துவது கிருமிகள் தொற்றிக்கொள்ளாமல் இருக்க உதவும். அதேபோல லென்ஸ்களுக்கென இருக்கும் சேமிப்பு கலனில் மட்டுமே அவற்றை வைக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

அழகுக்காக லென்ஸ்களை பயன்படுத்த கூடாது

அழகுக்காக லென்ஸ்களை பயன்படுத்த கூடாது

தொழில்முறை அற்ற கடைகளில் அழகுக்கான லென்ஸ்கள் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். விலைக்குறைவாக கிடைக்கிறது என்று இதுபோன்ற தரமற்ற லென்ஸ்களை உபயோகிப்பது பார்வைத்திறனில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். முழுதாக பார்வை இழக்கும் நிலை கூட ஏற்படலாம். எனவே அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் லென்ஸ்களை மட்டுமே வாங்கவேண்டும்.

அசௌகரியம் ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்

அசௌகரியம் ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்

பார்வைத்திறனில் மாற்றமோ அல்லது அசௌகரியமோ அல்லது கடுமையான வலியோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். வலி ஏற்பட்ட உடனே லென்ஸ்களை அகற்றிவிட்டு கண் மருத்துவரை தொடர்புகொள்ளவும். தேவைப்பட்டால் கண் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

அலர்ஜி

அலர்ஜி

முன்னரே கூறியது போல லென்ஸ்களால் உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவும். தொற்றுநோய் அபாயங்கள், ஒவ்வாமைகள், அதிக தூசி ஒத்துக்கொள்ளாதவர்கள் போன்றோர் லென்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் லென்ஸ் அணிவது அவர்களின் பார்வைத்திறனை மிகவும் பாதிக்கும். இந்த சூழ்நிலையில் கண்ணாடி அணிவதே உங்களுக்கு சிறந்த தீர்வாகும். இரண்டுமே உங்களுக்கு வசதி இல்லையெனில் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் அது நிரந்தரமானதல்ல. இதற்கெல்லாம் சிறந்த ஒரே தீர்வு இயற்கை முறையில் உங்கள் பார்வைத்திறனை அதிகரிப்பதுதான். இயற்கை முறையில் பார்வைத்திறனை அதிகரிக்க சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உணவு

உணவு

பார்வைத்தினை அதிகரிக்க விரும்புபவர்கள் அதற்காகவே சில உணவுகளை தனியாக சாப்பிட வேண்டும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ள உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பீட்டா கரோட்டீன்கள் அதிகமுள்ள கேரட் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. மருத்துவர்கள் கேரட் சாப்பிடுவது பார்வைத்திறனை அதிகரிக்கும் என நிரூபித்துள்ளனர். அதுமட்டுமின்றி மீன், முட்டை, சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது உங்கள் பார்வைத்திறனை அதிகரித்து விரைவில் கண்ணாடியை தவிர்க்க வைக்கும்.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ள எப்படி உடற்பயிற்சிகள் உதவுகிறதோ அதேபோல கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் உடற்பயிற்சிகள் அவசியம். உடற்பயிற்சி என்றவுடன் அதிக உடலுழைப்பு தேவைப்படுமோ என்று எண்ண வேண்டாம். காலையில் யோகா செய்தல், கண்களை தொடர்ச்சியாக இரண்டு நிமிடம் சிமிட்டுதல், கண்களை சுற்றி மசாஜ் செய்தல், கணினியின் திரையிலிருந்து இடைவெளி விட்டு அமர்தல் போன்றவையே போதுமானது.

செல்போன்களை தவிர்த்தல்

செல்போன்களை தவிர்த்தல்

தினம்தோறும் நம் குடும்பத்தை பார்ப்பதை காட்டிலும் செல்போனை பார்க்கும் நேரம்தான் அதிகமாக இருக்கிறது. பார்வைத்திறன் பாதிக்கப்படவும், இருப்பதை காட்டிலும் மோசமடையவும் இதுதான் முக்கிய காரணமாகும். இரவு நேரங்களில் விளக்கை அணைத்துவிட்டு செல்போன் உபயோகிப்பது பார்வைத்திறனை இருமடங்கு பாதிக்கும்.

எனவே முடிந்த அளவு செல்போன் உபயோகிப்பதை தவிர்த்து உங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் உங்களுடைய பொன்னான நேரத்தை செலவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health eye health tips கண்
English summary

How contact lenses can affect our eyesight

Now a days using glass and lens are a common thing, But using lens is not safe for everyone. Before using lens we should check some things.
Story first published: Thursday, July 12, 2018, 17:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more