தினமும் இந்த சின்ன விஷயங்களை செஞ்சாலே நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது இரத்த வெள்ளையணுக்களைப் பொறுத்தது. உடலில் உள்ள வெள்ளையணுக்கள் தான் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்கிறது. எப்போது நச்சுமிக்க நுண்ணுயிரிகள் உடலை தாக்கி, சளி, காய்ச்சல் மற்றும் இதர உடல்நல குறைவை உண்டாக்குகிறதோ, நம் உடலில் வெள்ளையணுக்களின் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

Small Things You Can Do Daily To Build Up Your Immunity

அதாவது நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ஒருவரது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தாலே போதும். அதுவும் அன்றாட செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்தால் போதுமானது.

இங்கு ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சின்ன சின்ன விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பளிமாஸ், சாத்துக்குடி மற்றும் இதர சிட்ரஸ் பழங்களில் ஏராளமான அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் சி இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும்.

நல்ல கொழுப்புக்கள்

நல்ல கொழுப்புக்கள்

ஆரோக்கியமான கொழுப்புக்களைத் தேர்ந்தெடுங்கள். அதற்கு அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களை உட்கொண்டு, சாச்சுரேட்டட் கொழுப்புக்களை தவிர்த்திடுங்கள். அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களானது ஆலிவ் ஆயில், சோயா பீன்ஸ் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையைக் குறைக்கவும். சர்க்கரையை ஒருவர் அதிகமாக உட்கொண்டால், அது இரத்த வெள்ளையணுக்களின் திறனைக் குறைத்து, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட முடியாமல் செய்துவிடும்.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகளை உட்கொள்ளுங்கள். ஒருவருக்கு போதுமான அளவில் புரோட்டீன் கிடைக்காவிட்டால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும். ஆகவே காய்கறிகள், முட்டை, இறைச்சி, பால் பொருட்கள் போன்ற புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.

மீன்கள்

மீன்கள்

மீன்களை அதிகம் சாப்பிடுங்கள். மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரோட்டீன் போன்றவை அதிகளவில் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இதர உணவுகள்

இதர உணவுகள்

நோயெதிர்ப்பு சக்தியை தயிர், பூண்டு, கேல், காளான் மற்றும் க்ரீன் டீ போன்ற பல்வேறு உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் உணவுகளாகும். இந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்ப்பவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம், இதய ஆரோக்கியம் மேம்படும். அதோடு குறிப்பிட்ட நோய்களான ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் அபாயமும் குறையும். மேலும் உடற்பயிற்சியை செய்வதன் மூலம், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும் மேம்படும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஒருவரது மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். மன அழுத்தம் பல்வேறு பிரச்சனைகளான மன இறுக்கம், சரும பிரச்சனைகள், தலைமுடி உதிர்வு போன்றவற்றுடனும் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களான பாட்டு கேட்பது, நடனம் ஆடுவது, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

தண்ணீர்

தண்ணீர்

ஒருவர் போதுமான அளவு நீரைக் குடிக்காமல் இருந்தால், அது சிறுநீரகப் பாதையில் தொற்று மற்றும் சிறுநீரக கற்களை உருவாக்கும். எனவே ஒருவர் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். அதிலும் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடியுங்கள். முக்கியமாக காபி, சோடா, டீ, ஆல்கஹால் போன்றவற்றை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ஓய்வு

ஓய்வு

உடல் சீராக செயல்படுவதற்கு போதிய ஓய்வு கிடைக்க வேண்டியது அவசியம். இதனால் உடலில் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் தானாக சரிசெய்யப்படும். ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டால், அதனால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற தீவிர பிரச்சனைகளால் பாதிக்கப்பட நேரிடும்.

புகை பகை

புகை பகை

புகைப்பிடித்தாலும் சரி, புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தாலும் சரி, அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் இதர முக்கிய உறுப்புகள் கண்டிப்பாக பாதிக்கப்படும். அதோடு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும். ஆகவே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள எளிய செயல்களை மனதில் கொண்டு அன்றாடம் ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தலாம். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள், தினமும் போதுமான ஓய்வு எடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Small Things You Can Do Daily To Build Up Your Immunity

Check out small things that you can incorporate into your daily regimen to strengthen your immunity.
Story first published: Friday, January 5, 2018, 10:00 [IST]
Subscribe Newsletter