உங்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

மனித உடலில் பத்தாயிரம் நரம்புகள் உள்ளன. நரம்புகள் உடலில் முக்கிய பணியை செய்கின்றன. அதாவது தகவல்களை மூளைக்கும், உடலின் இதர பாகங்களுக்கும் கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. சில நரம்புகள் மூளையில் இருந்து தசைகளுக்கு தகவல்களை கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டு, உடலின் இயக்கத்திற்கும், இதர நரம்புகள் வலி, அழுத்தம் அல்லது வெப்பநிலை குறித்த தகவல்களை அனுப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

தகவல்களை முறையாக சுமந்து செல்வதற்கு, ஒவ்வொரு நரம்புகளுக்கு உள்ளேயும் தொகுக்கப்பட்ட சிறிய இழைகள் உள்ளன. இவைகள் நரம்புகளுக்கு பாதுகாப்பையும் வழங்குகின்றன. இருப்பினும் சில சமயங்களில் நரம்புகள் பாதிப்படைகின்றன. நரம்பியல் சீர்கேடுகள் மற்றும் ஸ்ட்ரோக் தேசிய நிறுவனத்தின் படி, சுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் புற நரம்பு சேதம் என்று அழைக்கப்படும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

Signs You Might Have Nerve Damage

நரம்பு பாதிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அளவுக்கு அதிகமான அழுத்தமானது குறிப்பிட்ட நரம்புகளுக்கு கொடுக்கப்படும் போது, அந்த நரம்பு முறிவதற்கு வாய்ப்புள்ளதாம். சில சமயங்களில் சர்க்கரை நோய், லைம் நோய், அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பது, அதிகமாக மது அருந்துவது, முதுமை, வைட்டமின் குறைபாடுகள், அதிகமான டாக்ஸின்கள், நோய்த்தொற்றுகள், ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி, ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்றவற்றாலும் நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

ஒருவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை நமக்கு உணர்த்தும். இக்கட்டுரையில் அந்த அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து, அந்த அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரத்துப் போதல்

மரத்துப் போதல்

உணர்ச்சி நரம்பு பாதிப்பு என்று வரும் போது, முதலில் நமக்கு தெரிய வரும் முதல் அறிகுறி கைகள், விரல்கள், கால்கள் மற்றும் பாதங்கள் போன்றவை மரத்துப்போகும். உணர்ச்சி நரம்புகள் தான் தகவல்களைப் பரிமாற காரணமாகும். இந்த நரம்புகள் பாதிக்கப்படும் போது, கைகள் அல்லது பாதங்கள் மரத்துப் போகும். இப்படி அடிக்கடி ஏற்பட்டால், அதை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். அப்படி சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அது அப்படியே உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, நிலைமையை தீவிரமாக்கிவிடும்.

வலி

வலி

நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், கூர்மையான வலி அல்லது எரிச்சலுடன் கூடிய வலியை அனுபவிக்கக்கூடும். இந்த வகையான வலியானது கைகள் அல்லது பாதங்களில் அனுபவிக்கக்கூடும். மற்ற வலிகளை விட, இந்த வகை வலி சற்று வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், வலியானது இரவு நேரத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும்.

பலவீனமான தசை

பலவீனமான தசை

சில நரம்புகள் நகர்வதற்கு உதவியாக இருக்கும். இந்த வகை நரம்புகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தால், அதனால் தசைகள் பலவீனமாகும் அல்லது தசைக்கட்டுபாட்டு இழப்பு ஏற்படக்கூடும். மேலும் இந்த வகை நரம்பு பாதிப்பால் நடப்பது அல்லது ஏதேனும் சிறு செயல்களைக் கூட செய்ய முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

தசைப் பிடிப்புகள்

தசைப் பிடிப்புகள்

அசைவிற்கு காரணமான மோட்டார் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அடிக்கடி தசைப் பிடிப்புகள் அல்லது தசைகள் பிசைவது போன்ற உணர்வைப் பெறக்கூடும். மோட்டார் நரம்புகள் தசைகளுடன் தொடர்பு கொண்டிருப்பதால், இந்த நரம்புகளில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் தசைப்பிடிப்புகள் ஏற்படும். தசைப்பிடிப்புக்களானது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, உடல் வறட்சி அல்லது கனிமச்சத்துக் குறைபாடு போன்றவற்றாலும் ஏற்படும். எனவே சற்று உஷாராக இருங்கள்.

அதிகப்படியான அல்லது மிகவும் குறைவான வியர்வை

அதிகப்படியான அல்லது மிகவும் குறைவான வியர்வை

உறுப்புக்களின் செயல்பாட்டுடன் தொடர்புடைய நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால் வியர்வை சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒருவர் மிகவும் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போது, சிலருக்கு உடலின் மேல் பகுதி மற்றும் தலையில் அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிப்பதற்கு வியர்வை வெளியேறும். அதே சமயம் ஒருவரது உடலில் பல நரம்புகள் சிதைவடையும் போது, அளவுக்கு அதிகமாகவும் அல்லது குறைவாகவும் வியர்வை வெளியேறும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்

அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்

ஒருவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களது சிறுநீர்ப் பை அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்து, அதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சிறுநீரை வெளியேற்றும் வரை, அதை அடக்குவதற்கு பல்வேறு தசைகள் மற்றும் நரம்புகள் ஒன்றிணைந்து வேலை செய்கிறது. ஆனால் ஒருவரால் சிறுநீரை அடக்க முடியாவிட்டால், அவர்களுக்கு நிச்சயம் நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தான் அர்த்தம்.

தலைவலி

தலைவலி

உங்களுக்கு அடிக்கடி தலைவலி கடுமையாக வந்தால், உங்கள் நரம்பு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம். அதுவும் எப்போது ஒருவரது கழுத்துடன் தொடர்புள்ள நரம்புகள் பாதிக்கப்படுகிறதோ, அப்போது தான் கடுமையான தலைவலியை சந்திக்கக்கூடும்.

நிலைத்தடுமாற்றம்

நிலைத்தடுமாற்றம்

ஒருவர் நிலைத் தடுமாற்றத்தால் அவஸ்தைப்பட்டால், அவர்களது நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி தென்பட்டால் சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். இல்லாவிட்டால், அது உங்களை அடிக்கடி கீழே விழச் செய்து, காயங்களை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs You Might Have Nerve Damage

Here are some key signs that you might have nerve damage. Read on to know more...
Story first published: Friday, April 6, 2018, 16:30 [IST]