தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

மது பானங்களுள் ஒன்றான ரெட் ஒயின் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. அதிலும் ரெட் ஒயின் பெண்கள் குடிப்பதற்கு ஏற்ற பானமாகும். ரெட் ஒயின் என்பது பல்வேறு வகையான கருப்பு திராட்சைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். ரெட் ஒயினானது பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த அடர் நிற திராட்சைகளை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. இதனால் ரெட் ஒயின் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது எனலாம்.

அதில் முக்கியமாக ரெட் ஒயின் குடித்தால் இளமை தக்கவைக்கப்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோஅந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

Important Facts About Red Wine That Will Blow Your Mind

ஒருவர் ரெட் ஒயினை அளவாகக் குடித்தால் நல்லது. அதுவே அளவுக்கு அதிகமானால் தீங்கைத் தான் உண்டாக்கும். ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், கல்லீரல் நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

ஒரு பாட்டில் ரெட் ஒயினில் 12-15 சதவீதம் ஆல்கஹால், 125 கலோரிகள், 0 கொலஸ்ட்ரால் மற்றும் 3.8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இப்போது ரெட் ஒயினைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய்களின் அபாயம் குறையும்

நோய்களின் அபாயம் குறையும்

ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான இதய நோய், டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் இறப்பு விகிதம் குறையும் என்பது தெரியுமா? ஒருவேளை இதன் டேஸ்ட் பிடித்திருந்து, இதனை அதிகமாக குடிக்கத் தொடங்கினால், ஆரோக்கியமான பானமாக இருக்கும் ரெட் ஒயின் உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

பாலிஃபீனால்கள் அதிகம்

பாலிஃபீனால்கள் அதிகம்

ரெட் ஒயினில் பாலிஃபீனால்களான டானின், ரெஸ்வெராட்ரோல், மற்றும் 5000 வகையான தாவர உட்பொருட்கள் உள்ளன. டார்க் சாக்லேட் மற்றும் க்ரீன் டீயில் இருக்கும் டானின்கள் தான், ரெட் ஒயினிலும் உள்ளது. இந்த டானின்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதயம் மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க உதவும். இதனால் இதயம் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.

எந்த வகை ஒயின்கள் நல்லது?

எந்த வகை ஒயின்கள் நல்லது?

நம்மில் பலருக்கும் எந்த வகை ஒயின் நல்லது என்று சரியாக பார்த்து வாங்கத் தெரியாது. அத்தகையவர்கள், ரெட் ஒயினை வாங்கும் போது, அது இனிப்பு ஒயினாக இல்லாமல், ட்ரை ரெட் ஒயினாக இருப்பதை தேர்ந்தெடுங்கள். அதேப் போல் ஆல்கஹால் அதிகம் இருப்பதைத் தவிர்த்து, குறைவான அளவில் இருப்பதை வாங்குங்கள். இல்லாவிட்டால் டானின்கள் அதிகளவு இருப்பதைப் பார்த்து வாங்குங்கள்.

பாலியல் வாழ்க்கை மேம்படும்

பாலியல் வாழ்க்கை மேம்படும்

ரெட் ஒயின் குறித்த ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவெனில், ஒருவர் ரெட் ஒயினை அடிக்கடி அளவாக குடித்து வந்தால், அதனால் அவர்களது பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ரெட் ஒயின் குடிக்காத பெண்களை விட, ஒரு நாளைக்கு 2 டம்ளர் ரெட் ஒயினைக் குடிக்கும் பெண்களின் பாலியல் வாழ்க்கை குதூகலமாகவும், சந்தோஷமாகவும் இருக்குமாம்.

புற்றுநோய் தடுக்கப்படும்

புற்றுநோய் தடுக்கப்படும்

ரெட் ஒயினில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் மற்றும் இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. திராட்சையின் தோலில் தான் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இத்தகைய திராட்சை தோலுடன் சேர்த்து ரெட் ஒயின் தயாரிக்கப்படுவதால், இது பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

கலோரிகள் குறைவு

கலோரிகள் குறைவு

ரெட் ஒயின் இடுப்பின் அளவில் எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது மற்றும் தொப்பையை ஏற்படுத்தாது. சொல்லப்போனால் ரெட் ஒயின் குடிக்காதவர்களை விட, ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடிக்கும் பெண்களின் உடலில் 10 பவுண்ட் கொழுப்பு குறைவாகவே இருக்குமாம். ஏனெனில் ரெட் ஒயினில் கலோரிகள் மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. எனவே ரெட் ஒயின் குடித்தால் எடை போடுவோம் என்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

ரெட் ஒயினில் பாதிக்கப்பட்ட டி.என்.ஏ-வை சரிசெய்யும் ரெஸ்வெராட்ரால் உள்ளது. இது கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து, வாழ்நாளின் அளவை நீட்டிக்கும். ஒருவர் தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால், அது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, கவலையையும் குறைக்கும். ஆகுவே இரவு நேர உணவின் போது ஒரு டம்ளர் ரெட் ஒயினையும் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

ரெட் ஒயினில் மெலடோனின் என்னும் தூக்கத்தைத் தூண்டும் உட்பொருள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ரெட் ஒயினில் மெலடோனின் இருப்பதற்கு காரணம், அது கருப்பு திராட்சையில் இருந்து தயாரிக்கப்படுவதே ஆகும். எனவே நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தால், ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள். ஆனால் இந்த ரெட் ஒயினை இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டாம். தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே குடித்து விட வேண்டும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

ஒரு டம்ளர் ரெட் ஒயின் சரும பொலிவை மேம்படுத்துவதோடு, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும். இதற்கு ரெட் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இவை தான் புற ஊதாக்கதிர்களிடமிருந்து, சரும செல்களுக்கு பாதுகாப்பு அளித்து, இளமையை தக்க வைக்கிறது. ஆகவே உங்கள் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், ரெட் ஒயினைக் குடியுங்கள்.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்

ஆம், ரெட் ஒயின் புகைப்பிடிப்பதால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும் சக்தியைக் கொண்டது. எனவே நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தி இருந்தால், அந்த சிகரெட்டின் தாக்கத்தில் இருந்து விடுபட, ரெட் ஒயின் குடியுங்கள். இதனால் உடலினுள் ஏற்பட்ட அழற்சியின் அளவு குறைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இரத்த சர்க்கரை அளவை எதிர்க்கும்

இரத்த சர்க்கரை அளவை எதிர்க்கும்

ரெட் ஒயின் குடித்தால் 24 மணிநேரத்திற்கு இரத்த சர்க்கரை அளவு குறைவதாக அமெரிக்க நீரிழிவு அமைப்பு கூறுகிறது. சில ஆய்வுகளில் ரெட் ஒயின் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதாக கூறுகிறது. சமீபத்திய ஆய்வின் படி, மிதமான அளவில் ரெட் ஒயினைக் குடிப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது. ரெட் ஒயினை மிதமான அளவில் குடிப்பதைத் தவிர்த்து, சர்க்கரை நோயாளிகள் மருந்துகளை எடுப்பதால் எந்நேரம் எடுப்பது சிறந்தது என்று சரியாக தெரியவில்லை. என்ன தான் ரெட் ஒயின் சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைத்தாலும், மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ரெட் ஒயினைக் குடிக்க அறிவுறுத்துவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important Facts About Red Wine That Will Blow Your Mind

Red wine is made from different varieties of black grapes and the colour of the wine can range. Read on to know the interesting and important facts on red wine.
Story first published: Friday, February 23, 2018, 17:17 [IST]