ஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓர் உணவு தான் பிரியாணி. அதிலும் இஸ்லாமியர்கள் சமைக்கும் பிரியாணி என்றால், அதன் சுவையே தனி தான். இந்தியாவின் பல பகுதிகளில் பிரியாணி பல்வேறு சுவைகளில் இருக்கும். மேலும் பலருக்கும் பிரியாணி விருப்பமான ஓர் உணவும் கூட. அதிலும் சிக்கன் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும். விலைக் குறைவிலும் கிடைக்கக்கூடியது என்பதால், பலரும் சிக்கன் பிரியாணியைத் தான் அடிக்கடி வாங்கி சாப்பிடுவோம்.

சிக்கன் பிரியாணியை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது தெரியுமா? ஆம், பிரியாணியில் சிக்கன் மட்டுமின்றி, பல்வேறு மசாலாப் பொருட்கள், புதினா, இஞ்சி, கொத்தமல்லி போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த பல பொருட்கள் அடங்கியுள்ளன. எனவே சிக்கன் பிரியாணியை ஒருவர் அடிக்கடி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அதிலும் நாட்டுக்கோழி பிரியாணி சாப்பிடுவதால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இப்போது சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம். அதைப் படித்தால், இதுவரை சிக்கன் பிரியாணி சாப்பிட அச்சம் கொண்ட நீங்கள், இனிமேல் சிக்கன் பிரியாணியை விரும்பி சாப்பிடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனைத்துவிதமான சத்துக்களும் அடங்கியது

அனைத்துவிதமான சத்துக்களும் அடங்கியது

ஒரு தட்டு பிரியாணியில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் என அனைத்தும் உள்ளது. அதுவும் புரோட்டீன் சத்தானது சிக்கன் மற்றும் முந்திரியில் இருந்தும், கார்போஹைட்ரேட் அரிசியில் இருந்தும், கொழுப்பு சமையலில் சேர்க்கப்படும் எண்ணெயில் இருந்தும் பெறப்படுகிறது. அதிலும் வெஜிடேபிள் பிரியாணியாக இருந்தால், அந்த பிரியாணியில் இருந்து வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்கும்.

செரிமானத்திற்கு உதவும்

செரிமானத்திற்கு உதவும்

சிக்கன் பிரியாணியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. பிரியாணி யில் உள்ள குறிப்பிட்ட மசாலாப் பொருட்களான சீரகம், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்றவை செரிமானத்திற்கு உதவும். அதிலும் சீரகம் கல்லீரலில் இருந்து பித்த நீரை வெளியிட்டு, செரிமான நொதிகளின் செயல்பாட்டை வேகமாக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். மஞ்சள் செரிமான மண்டலத்தை ரிலாக்ஸ் அடையச் செய்து, வயிற்று உப்புசத்தைத் தடுக்கும். இஞ்சியோ வாய்வை வெளியேற்றி, குமட்டல் உணர்வைத் தடுக்கும் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும்.

நியாசின் அல்லது வைட்டமின் பி3

நியாசின் அல்லது வைட்டமின் பி3

சிக்கனில் உள்ள நியாசின் அல்லது வைட்டமின் பி3 சுத்தம் செய்யும் பொருள் போன்று செயல்படுவதோடு, ஆற்றலை வழங்கும் மற்றும் கொலஸ்ட்ரால் மூலம் உடலில் ஏற்படும் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகள், புற்றுநோய், நரம்பியல் பிரச்சனைகளான மன இறுக்கம், அல்சைமர், தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

செலினியம்

செலினியம்

சிக்கனில் செலினியம் அதிகம் உள்ளது. 100 கிராம் சிக்கனில் 27.6 mcg செலினியம் அல்லது அன்றாட தேவையில் இருந்து 39-40% செலினியம் கிடைக்கும். செலினியம் ஆன்டி-ஏஜிங் போன்று செயல்படுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவியாக இருந்து, உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

உள்ளுறுப்புக்களை சுத்தம் செய்யும்

உள்ளுறுப்புக்களை சுத்தம் செய்யும்

பிரியாணியில் உள்ள மசாலாப் பொருட்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, உள்ளுறுப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கும். அதுவும் பிரியாணியில் மசாலாப் பொருட்களான மஞ்சள், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, குங்குமப்பூ போன்றவை உள்ளன. சீரகத்தில் ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள், கட்டியை கரைக்கும் பண்புகள், ஆன்டி-வைரல் பண்புகள் போன்ற அனைத்துமே உள்ளது. மிளகில் செரிமானத்தை மென்மையாக்கும் பொருளும், இஞ்சி ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று வேலை செய்து, செரிமான பிரச்சனைகளை குணமாக்கும். இறுதியாக குங்குமப்பூ கல்லீரல் நொதிகள் அளவை அதிகரித்து, உடலை சுத்தமாக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

என்ன நம்ப முடியவில்லையா? உண்மையிலேயே பிரியாணி சாப்பிட்டால் புற்றுநோயைத் தடுக்கலாம். இதற்கு பிரியாணியில் உள்ள வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மசாலாப் பொருட்களான மஞ்சள், சீரகம், குங்குமப்பூ, மிளகு போன்றவைகள் தான். வெங்காயம் மற்றும் பூண்டில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அல்லிசின், சல்ப்யூரிக் பொருட்கள், மாங்கனீசு, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி, காப்பர் மற்றும் செலினியம் போன்றவைகள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இஞ்சியில் புற்றுநோய் செல்கள் அழிக்கும் பண்புகள் அடங்கியுள்ளது.

நினைவில் கொள்ள வேண்டியவைகள்!

நினைவில் கொள்ள வேண்டியவைகள்!

#1

பிரியாணியில் எவ்வளவு நல்ல சத்துக்கள் அடங்கியுள்ளதோ, அதே அளவில் ஆரோக்கியமற்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே பிரியாணியால் எவ்வித மோசமான விளைவுகளும் ஏற்படாமல் இருக்க நினைத்தால், அதனை தினமும் சாப்பிடாமல், அவ்வப்போது சாப்பிடுங்கள். தினமும் சாப்பிட்டால், பின் உடல் பருமன் அல்லது கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படக்கூடும்.

#2

#2

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பின், உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் இருக்க நினைத்தால், மூலிகை டீ அல்லது வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு டம்ளர் குடியுங்கள். மூலிகை டீயில் கலோரிகள் குறைவு, பசியைக் கட்டுப்படுத்த உதவும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை நீண்ட நேரம் சிறப்பாக வைத்திருக்கும். மேலும் மூலிகை டீ கல்லீரலுக்கு நல்லது. அதுவே வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், அது கொழுப்புத் தேக்கத்தைத் தடுத்து, உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைக்கும்.

#3

#3

சிக்கன் பிரியாணிக்கு மாற்றாக காய்கறிகளான கேரட், பசலைக்குரை, புதினா இலைகள், ப்ராக்கோலி அல்லது காலிஃப்ளவர் போன்ற நார்ச்சத்து மற்றும் இதர சத்துக்கள் நிறைந்ததைக் கொண்டு பிரியாணி தயாரித்து சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவையும் கிடைக்கும்.

#4

#4

சிக்கன் பிரியாணி தான் வேண்டும் என்று ஆசைப்பட்டால், கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டிலேயே ஆரோக்கியமான மற்றும் சுத்தமான வழியில் சமைத்து சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதைக் கூட செய்யமாட்டீர்களா என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Eating Chicken Biryani

In this article, we are going to talk about the health benefits that come from chicken biryani. Read on to know more...
Story first published: Saturday, April 7, 2018, 14:10 [IST]