For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இங்கு காலை உணவின் போது ஒரு கப் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

உங்களுக்கு காலையில் பெட் காபி அல்லது டீ குடிக்க பிடிக்குமா? ஆனால் வீட்டில் இப்படி குடிக்கவிடமாட்டார்களா? அப்படியெனில் அவர்களுக்கு நீங்கள் இக்கட்டுரையைக் காண்பியுங்கள். ஒருவர் ஒரு நாளில் மற்ற வேளைகளை விட காலை வேளையில் ஒரு கப் காபி குடிப்பதால், நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடியும்.

ஒவ்வொருவருக்குமே காலையில் எழுந்ததும், காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால் சிலர் காலையில் காபி, டீ குடிப்பது நல்லதல்ல என்று கூறுகிறார்கள். இதற்கு அதில் உள்ள காப்ஃபைனை காரணமாக கூறுகிறார்கள்.

Health Benefits Of Drinking Coffee First Thing In The Morning

காபி, டீயில் உள்ள காப்ஃபைன் உடலை வறட்சியடையச் செய்து, பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுவது உண்மை தான். ஆனால் அது அளவுக்கு அதிகமாக ஒரே நாளில் குடிப்பதால் தானே தவிர, ஒரு கப் காபி குடிப்பதால் அல்ல.

அதிலும் ஒருவர் காலையில் எழுந்ததும் காலை உணவிற்கு முன் ஒரு கப் காபியைக் குடிப்பதால், நாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதுவும் காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக பெண்கள் தினமும் காலையில் காபி குடிப்பது மிகவும் நல்லது. சரி, இப்போது தினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்தை மென்மையாக்கும்

சருமத்தை மென்மையாக்கும்

காலை உணவின் போது காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, இது சருமத்தை மென்மையாக்கும். ஏனெனில் காபியில் சருமத்தை மென்மையாக்கும் பண்புகள் உள்ளன. உங்கள் சருமத்தைக் காபி மென்மையாக்கும் என்று சொன்னால், தினமும் காலையில் ஒரு கப் காபி குடிக்க மாட்டீங்களா என்ன?

சருமத்தை பொலிவாக்கும்

சருமத்தை பொலிவாக்கும்

காபியால் கிடைக்கும் மற்றொரு அழகு நன்மைகளுள் ஒன்று, இது சரும பொலிவை அதிகரிக்கும். காபயில் உள்ள இயற்கை உட்பொருட்கள், சரும செல்களுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு கப் காபியை காலையில் குடியுங்கள்.

மன இறுக்கத்தை விடுவிக்கும்

மன இறுக்கத்தை விடுவிக்கும்

ஒருவரது மனம் அதிக அழுத்தத்திற்கு தொடர்ச்சியாக உட்படும் போது ஏற்படும் நிலை தான் மன இறுக்கம். பெரும்பாலான பெண்கள் தான் இந்த மன இறுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அலுவலக வேலை மற்றும் குடும்ப வேலை, பிள்ளைகளை பொறுப்பாக வளர்ப்பது என்று பலவற்றை செய்யும் பெண்கள் தான் இப்பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். ஆனால் தினமும் ஒரு கப் காபியை காலையில் குடித்தால், 10 சதவீதம் வரை மன இறுக்கத்தில் இருந்து விடுபடலாம்.

விரக்தி அடைவதைத் தடுக்கும்

விரக்தி அடைவதைத் தடுக்கும்

வாழ்வில் அதிகம் விரக்தியை அடைவது பெண்கள் தான். சிறு விஷயங்களுக்கு கூட பெண்கள் எளிதில் விரக்தி அடைந்து விடுவார்கள். தினமும் ஒரு கப் காபியை காலையில் குடித்தால், அந்நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும், எதையும் சமாளிக்கும் அறிவாற்றல் திறனும் மேம்பட்டு, விரக்தி அடைவதை தடுக்கலாம்.

 எடை குறைய உதவும்

எடை குறைய உதவும்

பலருக்கும் காபி குடித்தால், பசி கட்டுப்படுத்தப்படும் என்பது தெரியாது. உண்மையில் காபியை ஒருவர் தங்களது டயட்டில் சேர்த்துக் கொண்டால், அது நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்து, உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும். ஆகவே உங்கள் பசியைக் கட்டுப்படுத்த நினைத்தால் காபி குடியுங்கள்.

சர்க்கரை நோயின் அபாயம் குறையும்

சர்க்கரை நோயின் அபாயம் குறையும்

சர்க்கரை நோயானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது ஏற்படும் நிலையாகும். காபியில் உள்ள மக்னீசியம் மற்றும் குரோமியம், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து ஏற்படும் சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். குறிப்பாக காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரையை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவு சர்க்கரை சேர்க்காமலேயே குடிக்க பழகிக் கொள்ளுங்கள்.

அல்சைமர் நோய் தடுக்கப்படும்

அல்சைமர் நோய் தடுக்கப்படும்

அல்சைமர் நோயின் முக்கியமான அறிகுறி தான் நினைவாற்றல் இழப்பு. இந்நோய் தாக்கம் இருந்தால், அவர்களுக்கு தங்களைப் பற்றி கூட நினைவிருக்காது. ஆனுல் காபியில் உள்ள காப்ஃபைன் இந்த அல்சைமர் அபாயத்தைத் தடுக்கும். எனவே இந்நோய்த் தாக்கம் வராமல் இருக்க, தினமும் ஒரு கப் காபி குடியுங்கள்.

சரும புற்றுநோய் அபாயம் குறையும்

சரும புற்றுநோய் அபாயம் குறையும்

ஒருவருக்கு சரும புற்றுநோய், வெயிலில் அதிகம் சுற்றினால் விரைவில் வந்துவிடும். மேலும் சரும புற்றுநோய் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. ஆனால் காபியை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், காபியில் உள்ள பண்புகள், சரும புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பது ஆரோக்கியதைப் பராமரிப்பதற்கு தேவையான அத்தியாவசிய பொருளாகும். ஒருவர் தினமும் காபியில் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, புற்றுநோயை உண்டாக்கும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும்.

எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாகும்

எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாகும்

காபியில் ஏராளமான அளவில் கனிமச்சத்துக்கள் உள்ளன. இந்த கனிமச்சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு பயனுள்ளதாகும். காபியில் இருக்கும் கனிமச்சத்துக்கள், எலும்புகள் மற்றும் பற்களுக்கு மட்டும் நன்மை விளைவிப்பதோடு, உடலில் கனிமச்சத்துக்களின் தேவையையும் பூர்த்தி செய்யும்.

பல்வேறு நோய்களைத் தடுக்கும்

பல்வேறு நோய்களைத் தடுக்கும்

ஒருவர் தினந்தோறும் காபியைக் குடித்து வந்தால், அது பல்வேறு நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இதுவே ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலினுள் நோய்களை உண்டாக்கும் நச்சுக்களை நீக்கும். ஆகவே காபி குடித்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஒருவரது உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் இருந்தால், உடலைத் தாக்கும் எப்பேற்பட்ட நோய்களையும் எதிர்த்து போராடி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்கு காபி உதவியாக இருக்கும். எனவே நீங்கள் விரைவில் ஆரோக்கிய பிரச்சனைகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடாது என்றால், தினமும் காலையில் ஒரு கப் காபியைக் குடியுங்கள்.

இதயம் மற்றும் கணைய ஆரோக்கியம் பராமரிக்கப்படும்

இதயம் மற்றும் கணைய ஆரோக்கியம் பராமரிக்கப்படும்

உடலில் இதயம் மற்றும் கணையம் மிகவும் முக்கியமான உறுப்புக்களாலும். இந்த இரண்டு உறுப்புக்களையும் காபி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஒருவரது உடலில் கணையம் ஆரோக்கியமாக இருந்தால் தான் பெரும்பாலான டாக்ஸின்கள் வடிகட்டப்பட்டு, முறையாக வெளியேற்றப்படும். இச்செயல் சரியாக நடைபெறாவிட்டால், உடலினுள் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்து, அதன் விளைவாக இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, இதயம், கணையம், கல்லீரல் போன்றவை கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே இதைத் தவிர்க்க தினமும் ஒரு கப் காபி குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Drinking Coffee First Thing In The Morning

Here we listed some of the health benefits of drinking coffee first thing in the morning. Read on to know more...
Story first published: Wednesday, March 14, 2018, 11:30 [IST]
Desktop Bottom Promotion