For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவான இந்த பழக்கங்களால் ஆண்களுக்கு புற்றுநோய் வராதாம் பெண்களுக்கு மட்டும்தான் புற்றுநோய் வருமாம்

பெண்களுக்கு அவர்கள் உபயோகிக்கும் சில மேக்கப் பொருட்களால் சில புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

|

புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் அனைவரையும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரு கொடிய நோயாகும். பொதுவாகவே புற்றுநோய் என்பது பாலினத்தின் அடிப்படையில் ஏற்படுவதில்லை. ஆனால் கர்ப்பபை புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்கள் பெண்களுக்கு மட்டும் ஏற்படும். புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் இந்த காரணங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபடும்.

general habits which are linked to cancer in women but not in men

ஆண்களிடம் அதிகம் உள்ள புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பிரச்னைகளால் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. அதேபோல பெண்களுக்கு அவர்கள் உபயோகிக்கும் சில மேக்கப் பொருட்களால் சில புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இருவருமே செய்யும் சில பொதுவான பழக்கவழக்கங்கள் உள்ளது. இந்த பழக்கங்களால் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படாது ஆனால் பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த பழக்கங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிப்பது

பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிப்பது

பிஸ்பெனால் ஏ (BPA) என்னும் வேதிப்பொருள் ஹார்மோன்கள் தொடர்பான புற்றுநோய்களான மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயை உண்டாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. BPA என்பது அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்களிலும் காணப்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும். BPA வில் உள்ள செனோஸ்ட்ரோஜன் கிட்டத்தட்ட ஈஸ்ட்ரோஜன் போலவே செய்லபடக்கூடியது. அதேபோல மேக்கப்பும் ஈஸ்ட்ரோஜன் போலவே செயல்படக்கூடியது. இது ஹார்மோன் சமைநிலையின்மை ஏற்படுத்தி உங்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.

பிறப்புறுப்பு அருகில் குழந்தை பவுடர் உபயோகித்தல்

பிறப்புறுப்பு அருகில் குழந்தை பவுடர் உபயோகித்தல்

சில பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை சுற்றி பவுடரை உபயோக்கிறார்கள், இதில் உள்ள மக்னீசியம் மற்றும் சிலிக்கான் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். பவுடர் குறிப்பாக குழந்தைகள் பவுடரை பெண்கள் உபயோகிப்பது அவர்களுக்கு எண்டோமெட்ரியல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பிறப்புறுப்பை சுற்றி பவுடர் உபயோகிக்கும்போது அதில் உள்ள சில துகள்கள் பிறப்புறுப்பு வழியாக கருப்பையை அடைவதால் அங்கு வீக்கம் ஏற்படலாம்.

வாசனை மெழுகுவர்த்தி உபயோகித்தல்

வாசனை மெழுகுவர்த்தி உபயோகித்தல்

உங்களது சுற்றுசூழலில் நச்சு அதிகரிப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக நீங்கள் உபயோகிக்கும் வாசனை மெழுகுவர்த்திகளில் பென்சீன் மற்றும் டோலின் ஈனும் வேதிப்பொருட்கள் இருக்கிறது. இவை இரண்டும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த கார்சினிஜன் ஆகும். ஆய்வுகளின் படி கார்சினிஜன் உங்கள் மரபணுக்களில் மாற்றத்தையோ அல்லது நேரடியாக புற்றுநோயையோ ஏற்படுத்தாது. ஆனால் இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது அது பெண்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

MOST READ: கல்லூரி மாணவி முன் சுய இன்பம் கண்ட ஸ்டாப் - ஹாஸ்டலில் பரபரப்பு!

பராபென்ஸ் உள்ள பொருட்களை பயன்படுத்துதல்

பராபென்ஸ் உள்ள பொருட்களை பயன்படுத்துதல்

பெண்கள் பயன்படுத்தும் அனைத்து சோப், லோஷன் மற்றும் மேக்கப் சாதனங்களிலும் கார்சினிஜன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. பராபென்ஸில் உள்ள பிரச்சினை என்னவெனில் இது அனைத்து வேதிப்பொருட்களாலும் எளிதில் சருமத்தில் உறிஞ்சப்படக்கூடியது. ஆய்வுகளின் படி பராபென் பலவீனமான ஈஸ்ட்ரோஜன் போன்ற அமைப்பை கொண்டுள்ளது. அதிகளவு ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்ப்டுத்தக்கூடும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டதட்ட அனைத்து பெண்களுக்குமே அவர்கள் உடலில் ஏதோ ஒரு வகையில் பராபென்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவும் கார்சிஜினினை போல நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தாது. ஆனால் அதிகளவு பராபென்ஸ் ஆபத்துதான்.

ஆரோக்கியமற்ற வழிகளில் மனஅழுத்தத்தை குறைத்தல்

ஆரோக்கியமற்ற வழிகளில் மனஅழுத்தத்தை குறைத்தல்

அளவற்ற மனஅழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது மருத்துவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் தேசிய புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வில் மனஅழுத்தம் போன்ற உளவியல் காரணிகளும் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று நிரூபித்துள்ளனர். இதற்கு பின்னணியில் இருப்பது என்னவெனில் அதிகளவு மனஅழுத்ததில் இருக்கும் போது அதனை சரிசெய்ய புகைபிடிப்பது, மது அருந்துவது என்று பல வழிகளை கையாளுகின்றனர். இந்த பழக்கங்களால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாகும்.

இரவில் விழித்திருப்பது

இரவில் விழித்திருப்பது

சமீபத்தில் 220,000 பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இரவில் விழித்திருக்கும் பெண்களுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் மற்ற பெண்களை விட புற்றுநோய் நோய் ஏற்படும் வாய்ப்பு 1 சதவீதம் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது கிட்டத்தட்ட 11 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. தொடர்ந்து இரண்டு வருடம் இரவு நேரத்தில் விழித்திருக்கும் பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் 3 சதவீதம் அதிகரிக்குமாம்.

MOST READ: தன்னை காதலித்த பெண்ணுக்கே விநாயகர் ஏன் சாபமளித்தார் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

general habits which are linked to cancer in women but not in men

Cancer does not discriminate on the basis of gender. But some general habits which are linked to cancer in women but not in men.
Story first published: Friday, November 23, 2018, 15:50 [IST]
Desktop Bottom Promotion