For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வி.ஐ.பி (வேலை இல்லா பட்டதாரி) நீங்களா..? வேலையின்மையால் அவதிபடுக்கிறீர்களா..? தீர்வு இதோ...

|

"வாழ்க்கை வாழ்வதற்கே" என்று சொல்வார்கள். ஏனெனில் வாழ்வு அவ்வளவு மகத்தானது. பிறப்பு முதல் இறப்பு வரை பலவித சந்தோஷங்களையும், சோகங்களையும் நாம் கடந்து வந்திருப்போம். சில இடங்களில் நாம் வாழ்க்கைக்கான பாடங்களை உணர்ந்து கற்க நேரிடும். அந்த வாய்ப்புகளை நாம் நிச்சயம் பயன்படுத்தி கொண்டு வாழ்க்கை என்ற படகில் ஏறி, கரையை அடைவதற்கான தத்துவத்தை கற்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு படகுதான் வேலையின்மையால் நாம் அவதிப்படும் நேரமும்.

Unemployment stress

உலகின் பாதி மக்கள் தொகை வேலை இல்லாமல் தினம்தினமும் மன அழுத்தத்துக்கு தள்ளப்படுகின்றனர். நம்ம ஊர் இளைஞர்களுக்கும் இந்த சூழல்தான் உடல் சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை தருகிறது. இந்த வேலை இல்லா திண்டாட்டம் தீர வழி இல்லையா..? அதற்கு முதலில் நீங்கள் மனதளவில் திடமாக இருக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் மன வருத்தத்தை போக்கிவிட்டாலே கண்டிப்பாக வேலை கிட்டும். அதிக மன வருத்தத்தையும், மன அழுத்தத்தையும் சரி செய்யும் வழியை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள்ளுணர்வுகளுடன் பேசுதல்

உள்ளுணர்வுகளுடன் பேசுதல்

வேலையின்மை அவ்வளவு கொடுமையானது கிடையாது. வாழ்க்கையில் இதைவிட பல பெரிய சூழல்கள் நமக்கு வரக்கூடும். ஆதலால் இதனை கண்டு பயப்படுவதை முதலில் நிறுத்துங்கள். தினமும் தூங்க போகுவதற்கு முன் யாருமில்லா தனி இடத்தில் உங்களுடன் நீங்கள் பேசுங்கள். இது என்ன புதுமையா இருக்கேனு யோசிக்கிறீர்களா..? நம்மை நாம் புரிந்து கொண்டாலே நமக்கு முன் இருக்கு பிரச்சினைகள் தூள் தூளாகிவிடும். எனவே கண்டிப்பாக உங்களுடன் நீங்கள் தினமும் 20 நிமிடம் உங்கள் நிறை குறைகளை பற்றி பேசி, எவ்வாறு சரி செய்வது என்பதை திட்டமிடுங்கள்.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள்

உங்களை எப்போதும் நேர்மறையான எண்ணங்களோடு வைத்திருங்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருத்தரும் திறமை மிக்கவர்களே. உங்களை மற்றவரோடு சேர்த்து ஒப்பிடாதீர்கள். அவர்கள் பாதை வேறு, உங்கள் வாழ்க்கை பயணம் வேறு. உங்களுக்கான திறமைகள் எது என்பதை முதலில் கண்டறிந்து அதனை வளர்த்து கொண்டால்,வேலை தானாக கிடைக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

பல வி.ஐ.பி-களுக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சினையே இதுதான். படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்கவில்லையே என்று மனதுக்குள் நினைத்து நினைத்து மன அழுத்தத்தை அதிகரிப்பார்கள். இது உளவியல் ரீதியாக எண்ணற்ற கோளாறுகளை ஏற்படுத்தி தனிமை தனத்தை உண்டாக்கும். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கும் தள்ளப்படுவீர்கள். எனவே தியானம், மூச்சு பயிற்சி போன்றவற்றை செய்து பழகுங்கள்.

காலை காற்று

காலை காற்று

தினமும் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து காலை காற்றை சுவாசியுங்கள். இயற்கையாகவே இதில் பல நன்மைகள் இருப்பதாக ஆரய்ச்சிகள் சொல்கிறது. அந்த நாளுக்கான வேலைகளை அட்டவணை போல தயாரித்து அதன்படி செய்ய முயலுங்கள். உங்கள் குறிக்கோள் ஒன்றை மட்டும் எப்போதும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். "என்னால் முடியும்" என்பதை ஒருபோதும் விட்டு கொடுத்துவிடாதீர்கள்.

உணவு பழக்கங்கள்

உணவு பழக்கங்கள்

வேலை இல்லையே...' இப்படிப்பட்ட சூழலில் எவ்வாறு நன்றாக சாப்பிட முடியும் என்ற மனப்போக்கை முதலில் தூக்கி எறியுங்கள். உணவு வேறு... வேலை வேறு...! நிறைய பழ வகைகள், கீரைகள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்க்கவும். அத்துடன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவு பொருட்களை சாப்பிடடால் மன வலிமையை தரும்.

நேரம்

நேரம்

இப்போதெல்லாம் நம்மை திசை திருப்ப பல சாதனங்கள் வந்துவிட்டது. அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோனில் பேசி கொண்டிருப்பது, சேட் செய்வது, தேவையற்ற படங்களை பார்ப்பது போன்ற செயல்கள் உங்கள் குறிக்கோளை அடையவிடாமல் தடுக்கும். தேவைக்கு ஏற்ப அதனை பயன்படுத்துதல் நல்லது. இரவில் விரைவாக தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுவது பல நன்மைகளை தரும்.

குடும்ப ஆதரவு

குடும்ப ஆதரவு

வெளி மனிதர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதை விட உங்கள் பெற்றோர், உடன் பிறப்புகளோடு நன்றாக பேசி பழகுங்கள். உங்கள் மனதில் இருப்பதை பெற்றோரிடம் ஒரு நண்பரை போல் பகிரவும். இதனால் குடும்பத்தில் அன்பான மற்றும் நிம்மதியான சூழல் நிலவும். தேவையற்ற மன கசப்புகளை இதனால் தவிர்க்கலாம்.

முயற்சியை கைவிடாதீர்கள்

முயற்சியை கைவிடாதீர்கள்

"முயற்சி திருவினையாக்கும்" என்பார்கள். ஆமாங்க, இது முற்றிலும் உண்மைதான். ஒரு முறை தோல்வி அடைந்துவிட்டோம் என்பதால் மறுமுறை அதனை முயல தயங்காதீர்கள். பல விஞ்ஞானிகள் பல்வேறு தோல்விகளை கண்ட பின்பே வெற்றியை அடைந்தார்கள். வெற்றி கற்று கொடுக்கும் பாடங்களைவிட தோல்வி பல மடங்கு வாழ்க்கை பாடத்தை கற்று கொடுக்கும். எனவே, கடைசி நொடி வரை உங்கள் முயற்சியை கைவீடாதீர்கள். எந்த நேரத்திலும் வெற்றி கனியை பறிக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facing Unemployment: 8 Steps to Handling Your Unemployment

Throughout the country we hear of factories closing, massive layoffs as companies retrench, stores going out of business and people everywhere facing unemployment. There is decreased quality of mental health, life satisfaction, and objective physical well-being.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more