உடல் எடையை குறைக்கும் சினேக் டயட் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் நாளுக்கு நாள் புதுப்புது பெயர்களில் டயட்டுகள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன. டயட்டினை பின்பற்றுகிறவர்கள் புதுப்புது டயட் பின்பற்றுவது எளிதான காரியமல்ல, ஏற்கனவே ஒரு உணவு முறைக்கு பழகியிருப்போம். நம் வாழும் சூழலுக்கு ஏற்ப அந்த உணவுமுறை இருக்கும்.

அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக ஒரு உணவு முறையை நீங்கள் கடைபிடிக்கப் போகிறீர்கள் என்றால் அது நம் உடலுக்கு ஏற்றதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். சிலர் இதையெல்லாம் பார்க்காமல் உடனேயே பின்பற்றத்துவங்கி ஏரளமான பிரச்சனைகளை பின்னர் சந்திப்பார்கள்.அதனைத் தவிர்க்க ஒரு டயட் இருக்கப்போகிறீர்கள் அல்லது உங்களது உணவுப்பழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வரப்போகிறீர்கள் என்றால் இது நம் உடலுக்கு சேருமா என்பதை முதலில் மருத்துவரிடம் காண்பித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

உடல் எடையை குறைக்க சமீபத்தில் பரவலாகி வருகிற டயட்டுகளில் ஒன்று ஸ்னேக் டயட்.இன்றைக்கு அதைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களையும் ஸ்நேக் டயட் பின்பற்றலாமா வேண்டாமா என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிமுகம் :

அறிமுகம் :

ஸ்நேக் டயட் முற்றிலும் மாறுபட்டதாக எல்லாம் இருக்காது இதனை அறிமுகப்படுத்தியவர் கோல் ரோபின்சன். இது குறித்து இவர் கூறுகையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நாம் சாப்பிடுகிற உணவு எப்படி செரிக்கப்படுகிறது அதிலிருந்து எப்படி சத்துக்கள் பிரிக்கப்படுகிறது என்பது குறித்தெல்லாம் தெரிவதில்லை.

Image Courtesy

மூன்று ஸ்டெப் :

மூன்று ஸ்டெப் :

ஆனால் இந்த டயட் பின்பற்ற நினைப்பவர்கள் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றிருக்கிறார் ரோபின்சன். இந்த சினேக் டயட் மூன்று பகுதியாக பிரித்திருக்கிறார். அதன்படி முதல் 48 மணி நேரத்திற்கு நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகர் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும் . அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீங்கள் நார்மலாக சாப்பிடலாம்.

Image Courtesy

முதல் பகுதி :

முதல் பகுதி :

முதல் பகுதியின் போது 48 மணி நேரங்கள் ஆப்பிள் சிடர் வினிகர் குடிப்பதோடு மட்டுமல்லாமல் ஸ்னேக் ஜூஸ் குடிக்க வேண்டுமாம். இந்த ஸ்னேக் ஜூஸில் கல்லீரலில் இருக்கக்கூடிய டாக்ஸின்களை அகற்றும் மினரல்ஸ்கள் நிறையவே இருக்கின்றன.

ஸ்னேக் ஜூஸ் தயாரிக்கும் முறையையும் அவரே சொல்கிறார். ஒரு டீஸ்பூன் உப்பு,ஒரு டீஸ்பூன் பிங்க் சால்ட் மற்றும் மிளகு இவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.

இரண்டாம் பகுதி :

இரண்டாம் பகுதி :

இப்போது ஓரளவுக்கு உங்கள் உடல் தயாராகியிருக்கும் என்பதால் இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி உங்களுக்கு எளிமையானதாகவே இருக்கும். எந்த நேரத்திலும் நீங்கள் சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க நீங்கள் பழகி விடுவீர்கள்.

நாள் பூராவும் சாப்பிடாமல் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு அதுவும் 20 நிமிடங்களுக்கு உள்ளாக சாப்பிட வேண்டும்.

அடிப்படை :

அடிப்படை :

இந்த ஸ்னேக் டயட்டின் அடிப்படையே உணவு உண்ணாமல் இருப்பது தான். பொதுவாக உணவு சாப்பிடாமல் இருப்பதால் உங்கள் உடலில் மெட்டபாலிசம் குறைந்தது விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு நீண்ட நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்து விட்டு பின்னர் அதிக கொழுப்புள்ள உணவை, நியூட்ரிசியன்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் ரோபின்சன்.

மூன்றாம் பகுதி :

மூன்றாம் பகுதி :

இந்த பகுதியில் பசி உணர்வு தூண்டியவுடன் நீங்கள் குறைவான அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாரத்தை மூன்றாக பிரித்து இதை கடைபிடிக்க வேண்டும். இது டைப் 2 டயப்பட்டீஸ் பிரச்சனை கொண்டவர்களுக்கு நல்லது என்று சொல்லும் ரோபின்சன் இன்று அதிகமானோர் கடைபிடிக்கும் கீட்டோ டயட்டின் முன்னோடி இந்த டயட் தான் என்கிறார்.

 இது பாதுகாப்பானதா? :

இது பாதுகாப்பானதா? :

இந்த உணவு முறை முற்றிலும் பாதுகாப்பானதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரேயொரு உணவு அதுவும் பல மணி நேரங்கள் சாப்பிடாமல் ஒரே நேரத்திற்கு அதுவும் 20 நிமிடங்களுக்குள்ளாக சாப்பிட வேண்டும் என்கிறார்கள் இது தவறான கண்ணோட்டம். நாம் மனிதர்கள் பல விதமான சத்துக்கள் நமக்கு அத்தியாவசியமாக இருக்கிறது. இது மிக தீவிரமான உடல் உபாதைகளையே ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உடல் எடை :

உடல் எடை :

உடல் எடையை குறைக்கலாம் குறுகிய நாளில் என்று சொன்னால் அதை நம்பி கண்ட டயட்டை பின்பற்றாதீர்கள். உங்கள் உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பாதுகாப்பான டயட் மருத்துவ ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று. உடல் எடையை குறைக்க மட்டுமல்ல ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did you know About Snake Diet

Did you know About Snake Diet