இந்த பழக்கங்களை உடனே நிறுத்துங்க... இல்லைன்னா புற்றுநோய் வந்துடும்...

Posted By:
Subscribe to Boldsky

சரும ஆரோக்கியம் என்று வரும் போது, நம்மில் பலரும் அழகு கோணத்தில் தான் பார்ப்போம். ஆனால் ஆரோக்கிய கோணத்திலும் பார்க்க வேண்டியது அவசியம். பெரும்பாலானோர் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று, தினமும் ஸ்கரப், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று பல பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். ஆனால் அத்தகைய சருமம், நாம் அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இந்த விஷயம் பலருக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அதை சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். இதயம் மற்றும் சிறுநீரகம் போன்றவை போல், சருமமும் ஓர் உறுப்பு என்பதை மறவாதீர்கள். சொல்லப்போனால் உடலிலேயே மிகவும் பெரியது இந்த சருமம் தான். இது நம் உடலினுள் உள்ள உறுப்புகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் பணியை செய்கிறது.

Dangerous Habits That Cause Skin Cancer

மற்ற உறுப்புக்களைப் போன்றே சருமத்திலும் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும். அதில் மிகவும் அபாயகரமான ஓர் நோய் தான் சரும புற்றுநோய். இது சரும செல்களைப் பாதித்து, அதன் வழியே உடலினுள் உள்ள இதர உறுப்புக்களையும் பாதிக்கும். சரி, ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் சரும புற்றுநோய் வரும் என்று தெரியுமா?

சரும புற்றுநோய் வருவற்கு முக்கிய காரணமே நமது பழக்கவழக்கங்கள் தான். அது எந்த பழக்கங்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இக்கட்டுரையில் சரும புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது

சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது

ஏராளமான ஆய்வுகள் மற்றும் சர்வேக்களில், சன்ஸ்க்ரீன் லோசன் மற்றும் க்ரீம்களை தினமும் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு, சரும புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள், சருமத்தில் நேரடியாக படும் போது, சரும செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, நாளடைவில் அது சரும புற்றுநோயை உண்டாக்கும். எனவே சரும புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் தவறாமல் சன்ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்துங்கள். அதோடு வெயிலில் அதிகம் சுற்றுவதையும் தவிர்த்திடுங்கள்.

மோசமான டயட்

மோசமான டயட்

ஒருவர் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் டயட்டில் சேர்க்காமல் இருந்தால், அதனால் சரும செல்கள் பலவீனமாகி, எளிதில் புற்றுநோய் செல்கள் உடலைத் தாக்கி, பரவ ஆரம்பித்துவிடும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோய் வராமல் தடுக்கும். ஆகவே புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க நினைத்தால், அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதிகப்படியான சர்க்கரை

அதிகப்படியான சர்க்கரை

உங்களுக்கு இனிப்பு பலகாரங்கள் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஒருவர் ஸ்வீட், சாக்லேட், குளிர் பானங்கள் போன்றவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், அதன் விளைவாக சரும புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும் என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான சர்க்கரையானது சரும புற்றுநோயை மட்டுமின்றி, உடல் பருமன், சர்க்கரை நோய், சொத்தைப் பற்கள், சிறுநீரக நோய்கள் போன்றவற்றையும் உண்டாக்கும்.

மோசமான சரும பாதுகாப்பு

மோசமான சரும பாதுகாப்பு

தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. குறிப்பாக இந்தியாவில் சுற்றுச்சூழல் படுமோசமாக உள்ளது. எனவே வெளியே செல்லும் முன், சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், கையுறைகள், சாக்ஸ், மாஸ்க்குகள், ஸ்கார்வ்ஸ் போன்றவற்றால் சருமத்திற்கு சரியாக பாதுகாப்பு கொடுத்து, பின் செல்லுங்கள். முக்கியமாக வெளியே வெயிலில் செல்லும் முன் சருமத்திற்கு புறஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் சன்ஸ்க்ரீனை தவறாமல் பயன்படுத்துங்கள்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி, சரும புற்றுநோயும் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்களுக்கு இது ஆச்சரியத்தை வழங்கலாம். ஆனால் புகைப்பிடிக்கும் போது சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின், சரும செல்களை கடுமையாக பாதித்து, சரும புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு சிக்ரெட் ஒருவரது இளமைத் தோற்றத்தைப் பறித்து, விரைவில் முதுமைத் தோற்றத்திற்கும் வழிவகுக்கும்.

அதிகமாக செல்போன் உபயோகிப்பது

அதிகமாக செல்போன் உபயோகிப்பது

இன்று ஏராளமானோரிடம் இருக்கும் ஓர் மோசமான பழக்கம் தான் இது. எந்நேரமும் போனும் கையுமாக இருப்பவர்கள் தான் உலகில் அதிகம். சொல்லப்போனால் செல்போன் தற்போது அன்றாட வாழ்வின் ஓர் பகுதியாகவே மாறிவிட்டது. செல்போனை ஒருவர் எவ்வளவு அதிகமாக உடலுக்கு அருகிலேயே வைத்திருக்கிறார்களோ, அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களால் அவர்களது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகரித்து, சரும புற்றுநோயின் அபாயம் அதிகம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கவனமாக இருங்கள்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது

மற்றொரு அதிர்ச்சிகரமான ஓர் பழக்கம் தான் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்குத் தான் இம்மாதிரியான பழக்கம் இருக்கும். ஒருவர் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், சரும புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும். அதுவும் இச்செயலால் சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக் குறைந்து, சரும புற்றுநோயின் அபாயம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 தோல் மருத்துவர்களை சந்திக்காமல் தவிர்ப்பது

தோல் மருத்துவர்களை சந்திக்காமல் தவிர்ப்பது

எப்படி வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமோ, அதேப் போல் அவ்வப்போது சரும ஆரோக்கியத்தைக் குறித்து தோல் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் அவசியமான ஒன்று. இச்செயலால் சரும புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிதில் குணப்படுத்த முடியும். எனவே உங்கள் சருமத்தில் சிறு மாற்றம் தெரிந்தாலோ, அல்லது திடீரென்று கரும்புள்ளிகள் வந்தாலோ, அதை சாதாரணமாக விட்டுவிடாமல் உடனே தோல் மருத்துவரை அணுகி, பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

அளவுக்கு அதிகமான மேக்கப்

அளவுக்கு அதிகமான மேக்கப்

இன்று ஏராளமான பெண்களுக்கு மேக்கப் போடாமல் வெளியே வரும் பழக்கமே இல்லை. பெண்கள் மட்டுமின்றி, சில ஆண்களும் இப்படி தான் இருக்கிறார்கள். யார் ஒருவருக்கு தினமும் மேக்கப் போடும் பழக்கம் உள்ளதோ, அத்தகையவர்களுக்கு சரும புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் மேக்கப் பொருட்களில் உள்ள நச்சுமிக்க கெமிக்கல்கள், சரும செல்களை கடுமையாக பாதித்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பது தான். எனவே தினமும் மேக்கப் போடும் பழக்கம் இருந்தால், அதை உடனே தவிர்த்திடுங்கள்.

உங்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளது போன்று தெரிந்தால், நீங்கள் மட்டும் படிக்காமல், இக்கட்டுரையை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து சரும புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dangerous Habits That Cause Skin Cancer

Skin cancer is one of the deadliest types of cancers that affects the skin cells. Learn the dangerous habits that can cause skin cancer.