For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட்ட உடன் வாந்தி வருவது போன்ற உணர்வா? அதற்கு இது தான் காரணம்!

சாப்பிட்ட உடன் வாந்தி வருவது போன்ற உணர்வா? அதற்கு இது தான் காரணம்!

By Lakshmi
|

உணவு என்பது நம் ஒவ்வொருவரின் முக்கிய தேவையாக உள்ளது. உணவு என்பது வாழ்க்கைக்கான ஒரு ஆதாரமாக மட்டுமில்லாமல் நீங்கள் உங்களது வாழ்க்கையை நோய் இல்லாமல் வாழ தேவைப்படும் ஒரு முக்கிய தேவையாகவும் உள்ளது. நமது உடலில் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அறிகுறி வெளியில் தெரியும். அது என்ன என்று ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொண்டால் நீங்கள் ஆரோக்கியமான நலமான வாழ்க்கையை வாழலாம்.

சிலருக்கு சாப்பிட்ட உடன் வாந்தி வருவது போன்ற உணர்வு உண்டாகும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தெரியாமல் இருப்பார்கள், இந்த வாந்தியானது காலை காய்ச்சல் போன்றவற்றை தோற்றுவிக்கலாம். இந்த பகுதியில் காலை காய்ச்சலுக்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புட் பாய்சன்

புட் பாய்சன்

உணவு ஏதாவது உங்களது உடலுக்கு சேராமல் புட் பாய்சன் ஆகிவிட்டால் உங்களுக்கு வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வு, வயிற்று பொறுமல், தசைகளில் வலி போன்றவை உண்டாகலாம். இது உடலுக்கு சேராத உணவை சாப்பிட்ட சில மணி நேரங்களிலோ அல்லது ஒரு வாரத்திற்குள்ளோ உண்டாகலாம்.

அல்சர்

அல்சர்

வயிற்றில் உண்டாகும் அல்சரின் காரணமாகவும் உங்களுக்கு சாப்பிட்ட உடன் வாந்தி வருவது போன்ற உணர்வு உண்டாகலாம். இது முதலில் காரணமே தெரியாத ஒரு வலியாக தெரியும். அதன் பின்னர் வயிற்றில் எரிச்சல் போன்றவை உண்டாகும். இதனால் உடல் எடை குறைவு, நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும்.

இரப்பை அலர்ஜி

இரப்பை அலர்ஜி

இரைப்பை அலர்ஜி என்பது குடலில் உள்ள தோலில் ஏதேனும் அரிப்பு உண்டாகியிருப்பதால் பிரச்சனைகள் உண்டாகும். இதனால் உணவு செரிமானமாவதில் கோளாறு, வயிறு எப்போதும் நிறைந்து இருப்பது போன்ற உணர்வுகள் போன்றவை உண்டாகலாம்.

செரிமானமின்மை

செரிமானமின்மை

செரிமானமின்மையானது ஏதேனும் சில காரணங்களால் உண்டாகலாம். இந்த செரிமானமின்மைக்கு வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவை காரணமாக இருக்கலாம். வயிறு சரியில்லாதது போன்ற உணர்வுகள், வாந்தி வருவது போன்ற உணர்வுகள் இந்த செரிமானமின்மையின் போது உண்டாகும். கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை பிரித்து சாப்பிடலாம்.

GERD

GERD

உங்களது வயிற்றில் சுரக்கும் ஆசிட் ஆனது உணவுக் குடலை தாண்டி வரும் போது இந்த பிரச்சனை உண்டாகிறது. இது நீங்கள் சாப்பிடாமல் இருக்கும் போது உங்களது உணவுக் குழாயை மூடுகிறது.

மது அருந்துதல்

மது அருந்துதல்

இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக மது அருந்துதல் கூடாது. மது அருந்தினால் நீங்கள் என்ன தான் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தாலும் கூட, இந்த பிரச்சனை சீக்கிரமாக அதிகரிக்கும். இந்த குடிப்பழக்கம் இருந்தால், உங்களது வயிற்றில் இருக்கும் அமில தன்மை அதிகரிக்கும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

உங்களுக்கு இது போன்ற ஒரு நிலை இருந்தால் காரமான உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கார உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் சேதமாகும். மசாலா பொருட்கள், மிளகாய், மிளகாய்தூள் போன்றவை உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

காபி

காபி

காபி அதிகமாக பருகுபவரா நீங்கள்? காபி அதிகமாக பருகுவதாலும் பெப்டிக் அல்சர் வருகிறது. எனவே நீங்கள் ஜூஸ் வகைகளை குடிப்பது நல்லது. இதனால் வயிற்றில் இருக்கும் புண்கள் ஆறவும் வாய்ப்புகள் உள்ளது.

சோடா பானங்கள்

சோடா பானங்கள்

காபி குடிப்பவராய் இல்லாமல் இருந்தாலும், அதற்குப் பதிலாக விதவிதமான குளிர்பானங்கள் குடிப்பவராக இருந்தாலும் அதுவும் பிரச்னையே. சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

 வாழைத்தண்டு

வாழைத்தண்டு

வாழைத்தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, அதனை சட்னி போல அரைத்து சாறு பிழிந்து தினமும் குடித்து வர வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் அல்சர் மற்றும் சிறுநீரக கற்கள் வராமல் பாதுகாக்கும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தங்களது உணவில் கொத்தமல்லியை தவறாமல் சேர்த்துக் கொண்டு வர வேண்டும். மேலும் இந்த கொத்தமல்லி பசியை தூண்டவும் உதவுகிறது. பித்தத்தை தணிக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes of Vomiting after Eating Food

Causes of Vomiting after Eating Food
Story first published: Saturday, January 6, 2018, 15:55 [IST]
Desktop Bottom Promotion