For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டர்ர்ர்ர்.... விட்டா ரொம்ப நாறுதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்...

இங்கு நாற்றமடிக்கும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபட சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

|

நமது உடலினுள் சேரும் அல்லது உற்பத்தியாகும் வாயுக்களானது ஏப்பத்தின் வாயிலாகவும், ஆசன வாயின் வாயிலாகவும் வெளியேறும். ஒரு நாளைக்கு ஆரோக்கியமான மனிதன் 10-20 முறை ஏப்பம் மற்றும் வாயுவை வெளியேற்றுகிறான். இப்படி ஆசன வாயின் வாயிலாக வெளியேறும் வாய்வு சில சமயங்களில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவரும்.

Best Natural Remedies and Tips to Stop Bad Smelling Farts

இந்த நேரத்தில் வாய்வை வெளியேற்றியவர் மட்டுமின்றி, அவர்களைச் சுற்றி இருப்பவரும் மிகுந்த தர்ம சங்கடத்திற்குள்ளாவர். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? பெரும்பாலும் காரமான உணவுகள், முட்டைக்கோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பிரட், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்றவை முக்கிய காரணங்களாகும். இன்னும் சில சமயங்களில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குடலில் அதிகமாக இருக்கும் போது இந்நிலை ஏற்படும்.

ஆனால் அடிப்படைக் காரணம் என்று பார்த்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மோசமாக இருப்பது அல்லது ஆரோக்கியமற்ற டயட் போன்றவை தான். சில நேரங்களில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவையும் துர்நாற்றமிக்க வாய்வை வெளியேற்றும்.

இக்கட்டுரையில் துர்நாற்றம் அடிக்கும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபட சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோம்பு மற்றும் ஏலக்காய்

சோம்பு மற்றும் ஏலக்காய்

2-3 லிட்டர் நீரில் 1-2 டேபிள் ஸ்பூன் சோம்பு மற்றும் 4-5 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். பின் தினமும் மூன்று வேளையும் இந்த நீரை 1 டம்ளர் குடியுங்கள். இதனால் வயிற்று உப்புசம் குறைவதோடு, துர்நாற்றத்துடன் வாய்வு வெளியேறுவதும் தடுக்கப்படும்.

ஓமம் மற்றும் எலுமிச்சை சாறு

ஓமம் மற்றும் எலுமிச்சை சாறு

100 கிராம் ஓமத்தை 250 கிராம் எலுமிச்சை சாற்றில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இப்படி தினமும் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றினை பிழிந்து காய வைத்துக் கொள்ளுங்கள். இந்த செயலை 7 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். பின் உலர்ந்த அந்த ஓமத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ளுங்கள். பின்பு தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/4 டீஸ்பூன் ஓமத்தை போட்டு குடித்து வாருங்கள். இப்படி 2-3 நாட்கள் செய்து வந்தால், குடல் சுத்தமாவதோடு, துர்நாற்றமிக்க வாய்வு வெளிவருவதும் தடுக்கப்படும்.

சுக்கு மற்றும் ஓமம்

சுக்கு மற்றும் ஓமம்

சுக்கு பொடி மற்றும் ஓமத்தை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து, நிழலில் அந்த கலவையை உலர்த்த வேண்டும். அடுத்து அதனை பொடி செய்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். எப்போது உங்கள் வாய்வு துர்நாற்றம் வீசுகிறதோ, அப்போது 2-3 சிட்டிகை பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 2 வேளை குடியுங்கள்.

புதினா மற்றும் இஞ்சி

புதினா மற்றும் இஞ்சி

10-15 புதினா இலைகள் மற்றும் 1/2 இன்ச் இஞ்சி துண்டை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி, 1 சிட்டிகை உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குடியுங்கள். இதனால் துர்நாற்றமிக்க வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு

1 டம்ளர் நீரில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 3-ஜ சிட்டிகை உப்பு சேர்த்து, தினமும் 2-3 டம்ளர் குடியுங்கள். இப்படி செய்தால், வயிற்றில் உள்ள வாய்வு முழுவதும் வெளியேறுவதோடு, துர்நாற்றத்துடன் வெளிவருவதும் தடுக்கப்படும்.

சீரகம், ஏலக்காய், சோம்பு

சீரகம், ஏலக்காய், சோம்பு

சீரகம், ஏலக்காய் மற்றும் சோம்பை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு வறுத்து, பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ளுங்கள். இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, துர்நாற்றமிக்க வாய்வு வெளிவருவது தடுக்கப்படும்.

சோம்பு மற்றும் வெல்லம்

சோம்பு மற்றும் வெல்லம்

100 கிராம் சோம்பை ஒரு வாணலியில் போட்டு வறுத்து குளிர வையுங்கள். பின் 1/4 கப் நீரில் 100 கிராம் வெல்லத்தைப் போட்டு குறைவான தீயில் வைத்து பாகு போன்று காய்ச்சி, அதில் வறுத்த சோம்பை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பட்டைத் தூள் மற்றும் பால்

பட்டைத் தூள் மற்றும் பால்

வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து, சுவைக்கு தேன் கலந்து குடித்து வந்தால், அஜீரண கோளாறு நீங்குவதோடு, அதிக வாய்வு உற்பத்தியாவதும் தடுக்கப்படும்.

இப்போது துர்நாற்றமிக்க வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபட வேறு சில டிப்ஸ்கள் குறித்து காண்போம்.

டிப்ஸ் #1

டிப்ஸ் #1

தினமும் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் குடலியக்கம் சிறப்பாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும். செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால், துர்நாற்றமிக்க வாய்வுத் தொல்லையே இருக்காது.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

தினமும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்வதன் மூலம், துர்நாற்றமிக்க வாய்வு பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் தயிரை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பம் அதிகரிக்காமல் இருக்கும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

மலம் வெளியேற்றும் நேரத்தில் அதைக் கட்டுப்படுத்தினாலோ அல்லது தாமதப்படுத்தினாலோ, அது துர்நாற்றமிக்க வாய்வை உண்டாக்கும். ஆகவே அவ்வப்போது மலத்தை வெளியேற்றிவிடுங்கள்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

செரிமானமாவதற்கு கடினமாக இருக்கும் உணவுப் பொருட்ளான பீன்ஸ், முள்ளங்கி, கேரட், காலிஃப்ளவர், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பால் பொருட்களை அதிகமாக சாப்பிடாதீர்கள். ஏனெனில் இவை உடலில் வாயு உற்பத்தியை அதிகரிப்பதோடு, வயிற்று உப்புசத்தையும் உண்டாக்கும்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

பச்சையான உணவுகள் அல்லது சரியாக வேக வைக்காத உணவுகள் செரிமானமாவதற்கு கடினமாக இருக்கும். இப்படி கடினமாக இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே துர்நாற்றமிக்க வாய்வைத் தான் வெளியேற்றும்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

நார்ச்சத்துள்ள உணவுகள், நற்பதமான பழங்கள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் துர்நாற்றமிக்க வாய்வு வெளியேற்றத்தில் இருந்து விடுபடலாம். ஆகவே ஸ்நாக்ஸ் நேரங்களில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடாமல், பழங்களைக் சாலட் தயாரித்து சாப்பிடுங்கள்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் குளிர் பானங்களை அதிகம் குடிப்பவர்கள், துர்நாற்றமிக்க வாய்வுத் தொல்லையை சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான உணவுகள் மற்றும் பானங்களை அறவே தவிர்த்திடுங்கள்.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், துர்நாற்றமிக்க வாய்வுத் தொல்லையால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். எனவே இந்த மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.

டிப்ஸ் #9

டிப்ஸ் #9

எப்போதும் உண்ணும் உணவை மெதுவாக மென்று விழுங்குங்கள். இப்படி செய்வதன் மூலம், உண்ணும் போது வாயு உடலில் சேர்வதைத் தடுக்கலாம் மற்றும் துர்நாற்றமிக்க வாய்வு தொல்லையையும் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Natural Remedies and Tips to Stop Bad Smelling Farts

Poor digestive health or unhealthy diet are the basic root causes of excessive smelly farts. In this condition natural remedies and tips are more effective to the problem. Read on...
Story first published: Thursday, January 4, 2018, 12:02 [IST]
Desktop Bottom Promotion