For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உடம்ப ரொம்ப வீக்கா இருக்குன்னு நெனக்கிறீங்களா?... அப்போ இதையும் கொஞ்சம் சாப்பிடுங்க...

  |

  சில சமயங்களில் மக்கள் பலவீனமாக காணப்படுவதுண்டு. அதிகாலை தூக்கத்தில் இருந்து எழும் பொழுது உடல் வலிமை இல்லாததால் பலவீனமாக உணர்வார்கள். மேலும் நீங்கள் உங்களது தினசரி வேலையை செய்யும் போது சுறுசுறுப்பாக இருக்கமாட்டீர்கள். சில நிமிடங்கள் வேலை செய்தாலும் கூட, நீங்கள் மந்தமாகவும், மந்தமாகவும் சோர்வாகவும் உணருவீர்கள்.

  health

  நீங்கள் ஏதேனும் மெடிக்கல் கண்டிஷன் அல்லது அறுவை சிகிச்சை பெற்றிருந்தால், உடல் பலவீனம் மிகவும் பொதுவானது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட மிகவும் பலவீனமாக காணப்படுவார்கள். அவர்கள் முந்தைய வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு வாய்ப்புகள் குறைவே.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  உடல் பலவீனம்

  உடல் பலவீனம்

  நோயாளிக்கு உடல் வலிமை பெற டாக்டர்கள் டானிக், வைட்டமின்கள் மற்றும் மினெரல்ஸ் போன்றவற்றை பரிந்துரைக்கின்றனர். ஆனால், மருந்து உட்கொள்வதை நீங்கள் விரும்பாவிட்டாலும், அத்தகைய நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க வேறு வழிகள் உள்ளன. அதுவே வீட்டு வைத்தியம்.

  ஜின்ஸெங்

  ஜின்ஸெங்

  ஜின்ஸெங்கில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்பால் அதை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். நீங்கள் பலவீனமாக உணரும் போது உங்கள் ஆற்றல் அளவை ஊக்குவிக்க உதவிக்கறது. இதிலுள்ள மூலிகை தன்மை நமது ன் நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது,

  ஜின்ஸெங் பயன்படுத்த, நீங்கள் வேரை மெல்லிய துண்டுகளாக நறுக்க வேண்டும். 3 கப் தண்ணீரில் 8-10 துண்டுகள் போட்டு குறைந்த தீயில் சுமார் 15 நிமிடங்களுக்கு வைக்கவேண்டும். பிறகு அதை வடிக்கட்டி அதில் சிறிது தேன் சேர்த்து ஆறவிடவும். பிறகு இதை உங்கள் தேவைக்கேற்பவாறு 1-3 கப் தினமும் குடிக்கவும். உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இந்த சிகிச்சையை பயன்படுத்த வேண்டாம்.

  மாம்பழம்

  மாம்பழம்

  மாம்பழம் ஒரு ட்ரோபிகள் பழம். இதிலுள்ள வைட்டமின்கள், மினெரல்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அவை மக்னீசியம், பொட்டாசியம், காப்பர், மற்றும் டயட்டரி பைபர் ஆகியவற்றின் நல்ல ஊட்டச்சத்து இருக்கின்றன.

  மாம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, உடலில் உள்ள RBC களின் அளவை அதிகரிப்பதன் மூலம் இரத்த சோகை போன்ற நோய்களைப் போக்க உதவும். மாம்பழத்தில் உள்ள மாவு சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு உடனடி சக்தியை வழங்குகிறது.

  உடல் பலவீனமாக உணரும் போது உடலின் ஆற்றலை அதிகரிக்க மாம்பழ மில்க்ஷேக் எடுத்துக்கொள்ளலாம். மாம்பழத்தை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது தேன், குங்குமப்பூ, ஏலக்காய் பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றைச் சேர்த்தும் சாப்பிடலாம்.

  தினமும் மாம்பழங்களை சாப்பிடுவதன் மூலம், இரத்த இழப்பினால் ஏற்படும் பலவீனம் பலவீனத்தை சரிசெய்ய உதவும்.

  காபி

  காபி

  காபி ஒரு ஆற்றல் பானமாக பயன்படுத்தப்படுகிறது. மற்றும் மூளையை சுறுசுறுப்பாக்கி உடலுக்கு ஒரு உடனடி ஊக்கத்தை கொடுக்கிறது.

  மிதமான அளவில் காபி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்காது, உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த காபி பயன்படலாம். மேலும் பொறையுடைமை அளவு, மற்றும் கவனம் கவனத்தை அதிகரிக்கும்.

  ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி மேல் பருகுவது நல்லதல்ல. ஏனெனில் அது தூக்கமின்மை மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும்.

  பாதாம்

  பாதாம்

  வைட்டமின் E இன் செயல்திறன் கொண்ட ஒரு அற்புதமான பருப்பு பாதாமை தவிர வேறு ஒன்றும் இல்லை.

  பாதாமை சாப்பிட்ட பிறகு உங்களால், நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். மெக்னீசியம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை மாற்ற உதவும். உங்களுக்கு லேசான மெக்னீசியம் குறைபாடு இருந்தால் கூட, அது உங்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். ஆனால், பாதாமில் மெக்னீசியம் நல்ல அளவில் இருப்பதால், இதை சாப்பிடுவதன் மூலம் எளிதில் உங்கள் பலவீனத்தை ஒழித்துவிடலாம்.

  தண்ணீரில் பாதாம் பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லது. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும்பொழுது சோர்வு ஏற்பட கூடும். அப்பொழுது நீங்கள் வறுக்கப்பட்ட பாதாம் சாப்பிடுவது நல்லது.

  ஆம்லா

  ஆம்லா

  அம்லா உங்கள் ஸ்கின் மற்றும் முடிபோன்றவற்றிற்கு ஒரு அற்புதமான இயற்கை பொருளாக விளங்குகிறது. பல வருடங்களாக ஸ்கின் மற்றும் தலைமுடியை பராமரிக்க பயன்படுகிறது.

  அனால் இதில், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி, இரும்புகள், பாஸ்பரஸ் மற்றும் புரதம் போன்றவை அதிகமாக உள்ளதால், அவற்றை உட்கொள்வது உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை எளிதில் வலுப்படுத்தி, பலவீனத்திலிருந்து விடுவிக்கும்.

  நீங்கள் புதிய நெல்லிக்காயில் இருந்து சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகிவருவது நல்லது. இதை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பருகி வர உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

  அதிமதுரம்

  அதிமதுரம்

  அதிமதுரம் இயற்கையிலிருந்து மற்றொரு அற்புதமான மூலிகை. இது உடலில் ஏற்படும் பல்வேறு பலவீனத்துக்கு ஒரு கடுமையான எதிர்ப்பாக அமைகிறது.

  இது போன்ற ஒரு மூலிகையை பருகுவதால் உங்கள் உடலில் உள்ள அட்ரீனல் ஹார்மோன்கள் அதிகரித்து உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவும்.

  நீங்கள் செய்யவேண்டியவை ஒரு டம்ளர் மிதமான சூடுடைய பாலில் ஒரு டீஸ்பூன் அதிமதுரம் பொடியை சேர்க்கவும். பின்பு அதில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இதை தினசரி இருண்டு முறை சாப்பிட்டு வருவதால் உங்கள் உடல் ஆற்றல் சீக்கிரம் அதிகரிக்கும்.

  பால்

  பால்

  பால் நன்கு அறியப்பட்ட உணவூட்டிகளால் ஆறு நல்ல முழு உணவாக கருதப்படுகிறது.. உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து வகையான வைட்டமின்கள், மினெரல்ஸ் மற்றும் உணவுச் சத்துக்கள் சமமான விகிதத்தில் உள்ளன.

  இரவில் உங்களுக்கு எந்த உணவும் சாப்பிட பிடிக்க வில்லை என்றால் நீங்கள் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். அது உங்களுக்கு போதுமானதாக அமையும்.

  இரத்தத்தில் பெரிய காயம் அல்லது இரத்த இழப்பு உள்ளவர்கள் உங்கள் உடலில் இரத்தத்தை மாற்றுவதற்கும், நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் பால் பயன்படுகிறது. பாலில் உள்ள வைட்டமின் பி எப்போதும் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்து கொள்ளும். மேலும், இது உங்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

  சிலர் பாலின் வலுவான வாசனையை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு, அவர்களின் சுவைக்கு ஏற்றவாறு பாலில் ஏதேனும் சுவையான பவுடர் சேர்த்து குடிக்கலாம்.

  இல்லையெனில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் ஒரு கரண்டி தேன் சேர்த்து சாப்பிடலாம். உங்கள் உடலில் அதிக இரத்த அழுத்தம் உண்டாகும்போது இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  வாழைப்பழம்

  வாழைப்பழம்

  சர்க்கரை என்பது ஆற்றலின் ஒரு வடிவம். இது உடலில் ஏற்படும் பலவீனத்தை குறைக்க உதவுகிறது.

  வாழைப்பழத்தில் இயற்கையாக குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை கொண்டிருப்பதால், இது உங்கள் உடலின் ஆற்றலை விரைவாக அதிகரிக்கும்.

  வாழைப்பழத்தில் பொட்டாசியத்தின் அளவு நன்கு இருப்பதால் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

  ஆரஞ்சு ஜூஸ்

  ஆரஞ்சு ஜூஸ்

  பழங்களில் உள்ள சாறு உடலின் பலவீனத்தை போக்க மிகவும் பயன்படும். ஆரஞ்சு வைட்டமின் சி நிறைந்திருக்கும் அற்புதமான பழங்களுள் ஒன்றாகும். கலோரி நிறைந்த சர்க்கரை பதிலாக இயற்கையாகவே பிரித்தெடுக்கப்பட்ட இனிப்பு உட்கொள்வது நல்லது.

  பலவீனத்திலிருந்து விலகிச் செல்ல நீங்கள் அடிக்கடி ஆரஞ்சு பழச்சாறுகளை உட்கொள்ளவது நல்லது.

  ஸ்ட்ராபெர்ரி

  ஸ்ட்ராபெர்ரி

  இது ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். மேலும் இதில் குறைந்த கலோரி உள்ளதால், உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

  இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்பு, உங்கள் திசுக்களை சரிசெய்ய உதவும். நீங்கள் வழக்கமாக ஸ்ட்ராபெர்ரிகளை உட்கொண்டு வருவதால், உங்கள் உடல் ரேடிக்கல்ஸ் சால் தாக்கமுடியாது. உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இதில் நல்ல அளவில் மெக்னீசியம் மற்றும் பைபர் உள்ளது.

  நீங்கள் பலவீனமாக உணர்கிறது போது இதிலிருந்து எடுக்கப்படும் சாறை சாப்பிடலாம்.

  முட்டை

  முட்டை

  நாம் அனைவரும் நமது பிரிட்ஜ்ஜில் முட்டைகளை வைத்திருப்போம். முட்டையில் புரதம் இருப்பதால் வீட்டில் உ ள்ள அனைவரும் முட்டை சாப்பிடுவது நல்லது. மேலும் இது எளிதில் செரிக்க கூடியது.

  நீங்கள் மிகவும் பலவீனமாக உணரும்போது, முட்டை சாப்பிடும் பொது அது உங்கள் உடலை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

  உங்கள் வலிமையை திரும்ப பெற, தினமும் ஒரு வேகவைத்த முட்டையை உண்ண வேண்டும்.

  உடற்பயிற்சி

  உடற்பயிற்சி

  சில சமயங்களில் தோள்பட்டை, கைகள், கால்கள் போன்ற பகுதிகளில் போதுமான பலம் கிடைக்காமல் இருக்க காரணம், உடல் செயல்பாடு இல்லாததே.

  நீங்கள் சில தோள்பட்டை உடற்பயிற்சி, வார்ம் அப், பிரீ ஹான்ட் உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம் செய்து வர பலவீனத்திலிருந்து விலகி நிற்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Best home remedies for weakness

  People developing weakness may also face the effects like drowsiness, light weightiness, tired, un-energetic etc.
  Story first published: Friday, June 29, 2018, 17:35 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more