மஞ்சள் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் வீட்டு சமையலறையில் உள்ள அதீத மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்ட ஓர் மசாலா பொருள் தான் மஞ்சள் தூள். நாம் இதுவரை மஞ்சள் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்த்துள்ளோம். இப்போது அந்த மஞ்சளை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணப் போகிறோம்.

Turmeric Honey Mixture – The Strongest Natural Antibiotic

மஞ்சள் பொடியை, மிளகுத் தூள் மற்றும் தேனுடன் கலந்து சாப்பிட்டால், இன்னும் ஏராளமான உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இந்த கலவையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஓர் அற்புத மருந்தும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் குறித்த ஆய்வு

தேன் குறித்த ஆய்வு

2010 ஆம் ஆண்டு பத்திரிக்கை ஒன்றில், தேன் எப்படி பாக்டீரியாக்களை அழிக்கிறது என்பது குறித்த ஆய்வு வெளிவந்தது. இந்த ஆய்வில் தேனீக்கள் ஒருவிதமான புரோட்டீனான டிஃபென்சின்-1 என்பதை தேனுடன் கலப்பது தெரிய வந்தது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

சுத்தமான மலைத் தேன் - 100 கிராம்

மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 சிட்டிகை

மருந்தின் வலிமையை மேலும் அதிகரிக்க...

மருந்தின் வலிமையை மேலும் அதிகரிக்க...

எலுமிச்சை தோல் - 1 டீஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு பௌலில் மஞ்சள் பொடி, மிளகுத் தூள் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் எலுமிச்சை தோல் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்கு மூடி, 2 வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் பயன்படுத்த வேண்டும்.

எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

சளி, காய்ச்சல் போன்றவை அதிகமாக இருந்தால்...

- முதல் நாள் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.

- இரண்டாம் நாள் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.

- மூன்றாம் நாள் மூன்று வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால், சளி, காய்ச்சல் பறந்தோடிவிடும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெற...

நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெற...

அடிக்கடி உடலினுள் ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். எனவே பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டவர்கள், தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வருவது நல்லது.

சுவாச பிரச்சனைகள்

சுவாச பிரச்சனைகள்

சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்கள், தினமும் மூன்று வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிடுவது நல்லது.

குறிப்பு

குறிப்பு

இந்த கலவை தானாக கரையும் வரை வாயில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

டிப்ஸ் #1

டிப்ஸ் #1

இந்த மஞ்சள் தேன் கலவையை, விருப்பமுள்ளவர்கள், பிரட் டோஸ்ட் மீது தடவி சாப்பிடலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

இல்லாவிட்டால், ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் மிளகு தேன் கலவையை சேர்த்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, டீ போன்று பகல் அல்லது மாலை நேரத்தில் பருகலாம்.

இந்தோ-திபெத்திய மருத்துவம்

இந்தோ-திபெத்திய மருத்துவம்

இந்தோ-திபெத்திய மருத்துவத்தின் படி, மஞ்சளை குறிப்பிட்ட நேரத்தில் எடுப்பதால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படும். அதில்,

* உணவுக்கு முன் எடுத்தால் தொண்டை மற்றும் நுரையீரலுக்கு நல்லது.

* சாப்பிடும் போது எடுத்தால், செரிமான மண்டலத்திற்கு நல்லது.

* உணவு உட்கொண்ட பின் எடுத்தால், குடல் மற்றும் சிறுநீரகங்களுக்கு நல்லது.

எச்சரிக்கை:

எச்சரிக்கை:

பித்தப்பை பிரச்சனை இருப்பவர்கள், மஞ்சளை எடுக்கக்கூடாது. ஏனெனில் மஞ்சள் பித்தப்பை தசைகளைச் சுருங்கச் செய்யும். குறைவான இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களும், இம்மருந்தை எடுக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Turmeric Honey Mixture – The Strongest Natural Antibiotic

Turmeric golden honey is considered the strongest antibiotic described in Ayurveda scriptures as well. The blend of raw honey, turmeric and black pepper has a very powerful healing potential.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter