For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி!

இங்கு உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

அடிக்கடி ஏதேனும் உடல் நல பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியெனில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

Simple Kitchen Remedy To Increase Metabolism & Immunity

அதேப்போல் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டு, அதைக் குறைக்க முயற்சித்தும் எவ்வித பலனும் கிடைக்காவிட்டால், மெட்டபாலிசம் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். ஆகவே ஆரோக்கியமாக இருக்க நினைப்போர் இவ்விரண்டையும் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

இங்கு உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஓர் அற்புத வைத்திய முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

வறுத்த பூண்டு பற்கள் - 2-3

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

பூண்டின் நன்மை

பூண்டின் நன்மை

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.

தேனின் நன்மை

தேனின் நன்மை

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர மருத்துவ குணங்கள், உடலின் ஒவ்வொரு செல்லையும் வலிமைப்படுத்தி, நோய் கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

வறுத்த பூண்டு பற்களை பொடியாக நறுக்கி, தேனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் முறை:

உட்கொள்ளும் முறை:

இந்த கலவையை தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். அதிலும் அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் மற்றும் உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், 2 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறப்பான மாற்றத்தைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Kitchen Remedy To Increase Metabolism & Immunity

Here is one natural remedy that can improve your metabolic rate, as well as immunity, which can be prepared right at home.
Story first published: Tuesday, February 21, 2017, 15:54 [IST]
Desktop Bottom Promotion