இத தினமும் 2 ஸ்பூன் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நோய்த்தொற்றுக்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்பட நேரிடுகிறது. நோய்களின் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை எப்போதும் வலிமையுடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Prepare Your Own Syrup For Immunity

இதனால் நோய்கள் உடலைத் தாக்குவதைத் தடுக்கலாம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூண்டு பெரிதும் உதவி புரியும். அதற்கு தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடலாம் அல்லது பூண்டு கொண்டு ஒரு அற்புதமான நாட்டு மருந்தை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம்.

சரி, இப்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த உதவும் பூண்டு மருந்தை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பூண்டு பற்கள் - 7-8

தேன் - 200 மிலி

ஆப்பிள் சீடர் வினிகர் - 200 மிலி

செய்முறை #1

செய்முறை #1

முதலில் பூண்டின் தோலை நீக்கிவிட்டு, பின் அதை மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் மூடி கொண்ட ஒரு கண்ணாடி பாட்டிலில் அந்த கலலையை ஊற்றி, 4-5 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனால் தினமும் மறக்காமல் அந்த கண்ணாடி பாட்டிலைத் திறந்து கலவையை நன்கு கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து விட வேண்டும்.

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

5 நாட்கள் கழித்து, தயாரித்து வைத்துள்ள கலவையில் 2 ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இது எப்படி வேலை செய்யும்?

இது எப்படி வேலை செய்யும்?

இந்த கலவை உடலில் உள்ள உயர் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை அதிகரிக்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களின் அபாயம் குறையும்.

வேறுசில நன்மை

வேறுசில நன்மை

* ஆர்த்ரிடிஸ் வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த பானத்தைக் குடிப்பதால், வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* மேலும் இந்த கலவை சிறுநீரக கற்களைக் கரைக்கும்.

* இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு உட்பொருட்கள் உள்ளதால், நோய்க் கிருமிகளின் தாக்கம் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Prepare Your Own Syrup For Immunity

If you know how to prepare garlic syrup, then you may be able to keep most of the infections at bay. Read on to know how to prepare it yourself...
Subscribe Newsletter