For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் என்று தெரியுமா?

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் ஆரோக்கியத்தை கணக்கிடலாம்.

|

நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது என்பது மிகவும் அவசியமானது. சராசரியாக ஒரு மனிதன் எவ்வளவு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரியுமா? நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம்.

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக சராசரியாக ஒருவர் எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எத்தனை முறை :

எத்தனை முறை :

பொதுவாக ஒரு நாளைக்கு 4 முதல் 10 முறை சிறுநீர் கழிக்கலாம். சிறுநீர்ப்பையின் அளவு 2 கப் அளவு சிறுநீரை தேக்கி வைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். சிறுநீரை 3 முதல் 5 மணி நேரம் வரை அடக்கி வைத்திருக்க உதவிடும்.

அசாதாரணம்

அசாதாரணம்

சிறுநீர் கழிக்கும் போது வலியோ அல்லது எரிச்சலோ உண்டானால் அதனை உடனடியாக கவனியுங்கள். குறைந்த நேரமோ அல்லது அதிக நேரமோ சிறுநீர் கழித்தால் அதுவும் ஆபத்தானது.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போது இருக்கும் நேர இடைவேளையை வைத்தே உங்களது உடல் ஆரோக்கியத்தை எளிதாக கணக்கிடலாம்.

இரவுகளில் :

இரவுகளில் :

இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு முறை எழுந்து சிறுநீர் கழித்தால் அது சாதாரணமானது. சிலர் தூக்கத்தில் நடுவில் எழுந்தரிக்க மாட்டார்கள். இதுவும் சாதாரணமானது தான் ஆனால் இரண்டு முறைக்கும் அதிகமாக இரவுகளில் சிறுநீர்கழிக்க நேர்ந்தால் உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதென்று அர்த்தம்.

சிறுநீரை அடக்கி வைக்கலாமா? :

சிறுநீரை அடக்கி வைக்கலாமா? :

சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருப்பது ஆபத்தானது. அடிக்கடி சிறுநீர் கழித்தால் அதிக நேரம் அடக்கி வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

சிறுநீர்ப்பை :

சிறுநீர்ப்பை :

அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால் சிறுநீர்ப்பைக்கு பாதிப்புகள் வராது. மாறாக உங்களுக்கு வலியுண்டாகும். இதனால் உடலில் ஆரோக்கிய குறைவு ஏற்படும்

எப்போது மருத்துவரை சந்திக்கலாம் :

எப்போது மருத்துவரை சந்திக்கலாம் :

வழக்கத்திற்கு மாறாக குறைவாகவோ அல்லது அதிகமாவோ சிறுநீர்கழித்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். அதே போல சிறுநீர் கழிக்கும் போது வலியோ அல்லது எரிச்சலோ இருந்தால், சிறுநீரின் நிறம் மாறியிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Many Times You Should Pee In A Day

How Many Times You Should Pee In A Day
Story first published: Friday, September 1, 2017, 16:07 [IST]
Desktop Bottom Promotion